Home
News

யார்யா நீங்கெல்லாம்.. AI சென்சார்.. 15 நிமிடங்கள் போதும்.. வருகிறது மனிதனை சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின்..

அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் மனிதர்களைக் குளிப்பாட்டி விடவும் ஒரு அதிநவீன இயந்திரம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதாவது இந்த அதிநவீன இயந்திரம் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் சென்சார் வசதியுடன் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது மிகவும் பிரபலமான சயின்ஸ் கோ. லிமிடெட் என்ற ஜப்பான் நிறுவனம் தான் மனிதர்களுக்கான சலவை இயந்திரத்தை (Human washing machine) தயாரிக்கும் திட்டம் பற்றி தகவல் வெளியிட்டிருந்தது. அதுவும் மனிதர்களைக் குளிப்பாட்டி விடும் இந்த சலவை இயந்திரம் பற்றிய கருத்துக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது.

வருகிறது மனிதனை சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின்..

அதன்படி கடந்த 1970-ம் ஆண்டு ஜப்பான் உலக கண்காட்சியில் மனித சலவை இயந்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. அல்ட்ராசோனிக் பாத் என்று அழைக்கப்பட்ட இந்த சலவை இயந்திரம் சன்யோ எலெக்ட்ரிக் கோ (Sanyo Electric Co) என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.

குறிப்பாக இந்த சலவை இயந்திரம் ஆனது வெறும் 15 நிமிடங்களில், அதற்குள் இருக்கும் மனிதரை மஜாஜ் செய்து சுத்தப்படுத்து, உலர்த்தவும் செய்ததாக கூறப்பட்டது. ஆனாலும் இந்த மனித சலுவை இயந்திரம் அந்த சமயத்தில் வணிக ரீதியாக அதிக முக்கியத்துவம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த சலவை இயந்திரம் உயர் தொழில்நுட்ப மேம்படுத்தலுடன் மீண்டும் வருகிறது. அதாவது சயின்ஸ் கோ. லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான யசுவாகி அயோமா, அவருக்கு 10 வயாதாக இருந்தபோது இந்த அல்ட்ராசோனிக் பாத் சலவை இயந்திரத்தில் ஈர்க்கப்பட்டு, அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அந்த இயந்திரத்தை மீண்டும் மேம்படுத்த முடிவு செய்துள்ளார்.

அதன்படி குளியல் மற்றும் சமையலறை கண்டுபிடிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற சயின்ஸ் கோ. லிமிடெட் நிறுவனம் இந்த மனித சலவை இயந்திரத்தை தன் சொந்த பதிப்பில் உருவாக்கும் திட்டத்தை வெளியிட்டது. குறிபபாக தற்போது இந்த திட்டத்திற்கு உசோயாரோ என்று பெயர் சூட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் இந்த இயந்திரம் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயங்கும் எனவும், இதனுடன் பல கண்காணிப்பு சென்சார் மற்றும் ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மனிதரை சுத்தப்படுத்துவதோடு, அவரின் மனநிலை மேம்படுத்தி ரிலாக்ஸாக வைத்திருக்க உதவுவது தான் இந்த மனித சலவை இயந்திரம் நோக்கம் என்று இதை தயாரிக்கும் நிறுவனம் கூறுகிறது. குறிப்பாகச இந்த இயந்திரத்தில் உள்ள சென்சார்கள், புத்துணர்வான அனுபவத்தை கொடுக்க நமது உடலின் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணித்து அதற்கேட்ப செயல்படும் என்று கூறப்படுகிறது.

வருகிறது மனிதனை சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின்..

மேலும் இதில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனது நாம் அமைதியாக அல்லது உற்சாகமாக உணர்கிறோமா என்பதை பகுப்பாய்வு செய்து அதற்கேட்ப செயல்பட உதவுகிறது. மேலும் மனிதரை சுத்தப்படுத்த இந்த இயந்திரம் சுமாராக 15 நிமிடங்கள் எடுத்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுளளது.

இந்த அதிநவீன உசோயாரோ மனித சலவை இயந்திரம் வரும் 2025-ம் ஆண்டு ஒசாகா எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும் என சயின்ஸ் கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கண்காட்சியில் கலந்துகொள்ளும் பார்வையாளர்களில், ஒவ்வொரு நாளும் 1,000 பார்வையாளர்களுக்கு இந்த இயந்திரத்தில் குளிக்கும் அனுபவத்தை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

photo credit: Kazuhito Suwa, newsukraine, RBC-Ukraine

More from GizBot

Best Mobiles in India

English summary
Japan Human Washing Machine Cleans You in 15 Minutes: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X