கட்டிப்பிடித்துக் கொண்டே பேசலாம் வாங்க..!

Posted By: Muthuraj

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கட்டிப்பிடி வைத்தியம் செய்து கொள்ள வேண்டும் என்று தமிழ் சினிமா சொல்கிறது, அதிகபட்சம் ஒரு நாளைக்கு எட்டு முறையாவது கட்டி அணைத்துக்கொள்ள வேண்டும், அப்படிச் செய்தால் மன ஆரோக்கியத்திற்க்கு நல்லது என்று மருத்துவம் சொல்கிறது. இதை தெளிவாக புரிந்து கொண்ட ஜப்பானிய தொழில்நுட்ப வல்லுநர்கள் உருவாக்கியதே இந்த ஹக்வி ஆகும்.

 கட்டிப்பிடித்துக் கொண்டே பேசலாம் வாங்க..!

ஹக்வி என்பது தலை, கை-கால்கள் கொண்ட ஒரு மனித உருவம் போன்ற சிறு தலையணையாகும், அதன் தலை பகுதியில் நம் மொபைல் போனை பொருத்தி வைத்துக் கொள்ளும்படி ஒரு பாக்கெட் இருக்கும், உடன் ஒரு ஸ்பீக்கர் இருக்கும். தொலைபேசி அழைப்பின் போது அந்த பாக்கெட்டில் போனை போட்டு விட்டு, ஹக்வியை ஒரு குழந்தையைப் போல் கட்டி அணைத்துக்கொண்டால், மீதி வேலையை ஹக்வி பார்த்துக்கொள்ளும்.

ஸ்மார்ட்போனை விட நோக்கியா 1100 தான் சிறந்தது

ஹக்வியின் உடல் பகுதிக்குள் ஒரு மைக்ரோ கம்யூட்டரும், வைப்ரேட்டரும் உள்ளது. அவைகள் இணைந்து மறுமுனையில் இருந்து பேசுபவர்களின் குரலுக்கு ஏற்ப மென்மையான அதிர்வுகளை உண்டாக்கும், அது ஸ்பரிசிப்பது போன்று இருக்கும். அந்த தொடு உணர்வோடு சேர்ந்த குரலானது கட்டித் தழுவிக்கொண்டு பேசுவது போன்ற ஒரு உணர்வைத் தரும்.

 கட்டிப்பிடித்துக் கொண்டே பேசலாம் வாங்க..!

தொலைப்பேசியில் உரையாடுவோருக்கு மத்தியில் புதியதொரு நெருக்கத்தை உருவாக்கி, தனிமை, மன அழுத்தம், விரக்தி போன்றவற்றிலிருந்து விடுதலை கொடுக்கும் இந்த ஹக்வியானது 80 சென்டி மீட்டர் உயரம், 55 சென்டி மீட்டர் அகலமும் உடைய 80 டாலர் மதிப்புடைய ஒரு மனித தலையணையாகும்.

அடங்கப்பா இப்படியும் கருவிகளா, சத்தியமா முடியலடா

குழந்தைகளையும், பெரியவர்களையும் பெரிதும் கவர்ந்த ஹாலிவுட் கதாபாத்திரமான கேஸ்ப்பர் பூதத்தை நினைவுப்படுத்தும் இந்த ஹக்வியானது, வரும் செப்டம்பர் முதல் விற்பனைக்கு வரவிருக்கிறது.

Read more about:
English summary
Hugvie is a vaguely human-shaped cushion from Japan with a robotic heart that pulses with emotion.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot