ஆந்திரா: வாக்கு இயந்திரத்தை உடைத்த வேட்பாளர் கைது.! வைரல் வீடியோ.!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வித முறைகேடுகளும் செய்ய முடியாதென்று திட்ட வட்டமாக மறுப்பு தெரிவித்து வருகிறது தலைமை தேர்தல் ஆணையம்.

|

அனந்தபூர் மாவட்டத்தில் இன்று வாக்கு இயந்திரத்தை உடைத்து ரகளையில் ஈடுபட்டதாக ஜன சேனா கட்சியின் வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7மணி அளவில் துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


குறிப்பாக வாக்குப்பதிவினை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்குள்ள அனந்தபூர் மாவட்டத்தில் கூட்டி வாக்குச்சாவடியில் புகுந்த ஜனசேனா கட்சியின் எம்.எல்.ஏ வேட்பாளர் மதுசூதன் குப்தா, வக்கு இயந்திரத்தை உடைத்து ரகளையில் ஈடுபட்டார்.

வாக்கு இயந்திரத்தில் தனது பெயர் தெளிவாக இல்லை எனக்கூறி இயந்திரத்தை உடைத்ததாக கூறப்படுகிறது. இதைதொடரந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

பாதுகாப்பற்றது

பாதுகாப்பற்றது

இயந்திரம்" பாதுகாப்பற்றது என்ற குற்றசாட்டுகள் பல எழுந்தன, தொடர்ந்து ஹேக்கிங் குற்றசாட்டுகளுக்குள் சிக்கினாலும் கூட இன்று நடக்கும் தேர்தல் வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 தலைமை தேர்தல் ஆணையம்

தலைமை தேர்தல் ஆணையம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வித முறைகேடுகளும் செய்ய முடியாதென்று திட்ட வட்டமாக மறுப்பு தெரிவித்து வருகிறது தலைமை தேர்தல் ஆணையம். ஆனால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மிக எளிதாக ஹேக்
செய்ய முடியுமென்று ஹேக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது

தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது

கள்ள ஓட்டுப் பதிவுகளை தடுப்பதற்காக இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நிமிடத்திற்கு 5 ஓட்டுகளுக்கு மேல் பதிவு செய்ய முடியாதபடி இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே கள்ள ஓட்டுப் பதிவுகளை பதிவு செய்ய முயற்சித்தாலும் பெரிய அளவில் ஓட்டு எண்ணிக்கையில் மாற்றம் இருக்காதபடி இந்தத் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டில்

2009 ஆம் ஆண்டில்

2009 ஆம் ஆண்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாகப் பல காட்சிகள் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அந்தச் சமயத்தில் தலைமை தேர்தல் ஆணையம் வெளிப்படையான சவால் ஒன்றை முன் வைத்தது. அந்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைச் சோதித்து, அதனை ஹேக் செய்ய முடிந்தால் செய்து காட்டுங்கள் என்று
வெளிப்படையான அறிவிப்பை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2009 ஆம் ஆண்டில் வெளிப்படையாகச் சவால் விட்டு அதனை நிரூபிக்க வந்த குழுவின் முதற் கட்ட சோதனையை உடனடியாக தடை செய்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேட்டை மூடி மறைத்தது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் தலைமை ஆணையம் பதில் அளிக்கவில்லை என்பதே நிதசனமான உண்மை.

Best Mobiles in India

English summary
Jana-Sena-MLA-candidate-Madhusudhan-Gupta-smashes: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X