Home
News

இந்திய கைதிகளின் காலில் GPS ட்ராக்கர்.. இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.. ஜாமின் கேட்டால் சிப் பொறுத்துவ

குற்றங்கள் பெறுகுவதைத் தடுக்கவும், வெளியே சுதந்திரமாக நடமாடும் குற்றவாளிகளைக் கண்காணிக்கவும், மேலை நாடுகள் பாணியில் புதிய திட்டம் ஒன்றை ஜம்மு காஷ்மிர் போலிஸ் அறிமுகம் செய்துள்ளது. குற்றவாளிகளை திறமையாக வாதாடும் வக்கீல்கள், சுலபமாக ஜாமினில் எடுத்து வெளியே நடமாட ஆரம்பித்துவிடுகின்றனர்.

அப்படி அவர்கள் ஜாமின் பெற்ற பின்னர், மேலும் பல குற்றங்களைச் செய்யத் தொடரலாம். ஜாமினில் வெளியே வந்த குற்றவாளிகளைப் போலிஸ் கண்காணிக்கப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது தான் ஜிபிஎஸ் ட்ராக்கர் (GPS Anklet Tracker) கொண்ட கால் சிலம்பு (Anklet) போன்ற சாதனம் இது. இந்தியாவிலேயே முதல் முறையாக ஜாமின் பெற்ற குற்றவாளிகளுக்காக ஜிபிஎஸ் அம்சம் கொண்ட கால் ட்ராக்கரை ஜம்மு காஷ்மிர் போலீஸார் அறிமுகம் செய்துள்ளதாகச் சென்ற சனிக்கிழமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய கைதிகளின் காலில் GPS ட்ராக்கர்.. இனி ஓடி ஒழிய முடியாது..

ஜம்மு காஷ்மிர் போலிஸை சேர்ந்த மாநில புலணாய்வு துறை (State Investigation Agency) இந்த முயற்சியை எடுத்துள்ளது. இந்த ட்ராக்கர் குற்றவாளிகள் கால்களில் பொருத்தினால் அதிலிருக்கும் ஜிபிஎஸ் மூலம் அவர்களது செயல்பாடுகளைக் கண்காணிக்கலாம் என்று கூறுகின்றனர். இந்த ஜிபிஎஸ் கால் ட்ராக்கர் ஆனது, இதற்கு முன்னரே வளர்ந்த மேலை நாடுகளான அமெரிக்கா, UK, தென் ஆப்பரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஜாலின் (bail), பரோல் (Parole), ஹவுஸ் அரெஸ்ட் (House arrest) செய்து வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை இதன் மூலம் கண்காணிப்பதால் சிறையில் வசிக்கும் குற்றவாளிகள் எண்ணிகை குறைக்கப்படும் என்றும், இதனால் சிறைச்சாலை கூழ்நிலைகளைச் சமாளிப்பது எளிமையாகும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (Unlawful Activities Prevention Act 1967) கீழ் FIR பதிவு செய்யப்பட்ட குற்றவாளி குலாம் முகமது பட்-காக (Ghulam Mohd Bhat) உருவாக்கப்பட்டது.

ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கில் சிறப்பு NIA நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை கருத்தில் கொண்டு இந்த ஜிபிஎஸ் ட்ராக்கர் கொண்ட கால் ட்ராக்கர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகப் போலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருடைய ஜாமின் வழக்கு நிலுவையில் இருப்பதால், அதுவரை இடைக்கால ஜாமின் வழங்குமாறு குற்றவாளி கோரிக்கை விடுத்துள்ளார். இவர் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் (Hizbul Mujahideen, HM) உடன் தொடர்புடைய தீவிரவாதி என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தத் தீவிரவாத அமைப்பிற்கு இவர் மூலம் நிதியுதவும் செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. HM தீவிரவாத அமைப்பிற்கு ரூ 2.5 லட்சம் நிதிமாற்றம் செய்யும்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை டெல்லி பாட்டியாலா ஹவுஸில் (Patiala House, Delhi) இருக்கும் NIA நீதிமன்றமும் வேறொரு தீவிரவாத செயலுக்காகக் குற்றவாளியாக அறிவித்துள்ளது என்று ஜம்மு காஷ்மிர் போலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய பயங்கரவாத குற்றத்தில் ஈடுபட்டவர் நெருக்கமாகக் கண்காணிக்கப்பட வேண்டியவராவார். எனவே அவருக்கு ஜாமின் கொடுக்கப்படுமானால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நிபந்தனைகளுடன் கொடுக்கவேண்டும் என்று மண்டல காவல்துறை தலைமையகத்தின் வழக்குத் துறை நீதிமன்றத்தில் தனது வாதத்தைச் சமர்பித்துள்ளது.

அவர்களது வாதத்தில் இருக்கும் உண்மைத்தைமையை உணர்ந்த சிறப்பு NIA நீதிமன்றம் குற்றவாளியின் கால்களில் ஜிபிஎஸ் அம்சம் கொண்ட ட்ராக்கரை அணிவிக்க வேண்டும். இதன் மூலம் குற்றவாளியின் ஒவ்வொரு அசைவு மற்றும் நடவடிக்கையும் கண்காணிப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. குற்றவாளி எக்காரணம் கொண்டும் ட்ராக்கரை அகற்றக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜாமின் வழங்கப்படும் குற்றவாளியை ஜிபிஎஸ் கண்காணிப்புடன் வெளியே அனுப்பும் முதல் காவல்துறை ஜம்மு காஷ்மிர் துறை என்றும், மற்ற மாநிலங்களுக்கு அவர்கள் முன்னுதாரணமாக இருப்பது பெருமையாக உள்ளதாகவும் அந்தக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Jammu Kashmir Police To Use First GPS Anklet Tracker To Monitor Terror Accused Going On Bail
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X