மனிதகுலம் இதுவரை கண்டிராத கோணத்தில் கிரகம் 5! மூன்று நிலவுகளை காட்டிய James Webb Space Telescope!

|

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் (James Webb Space Telescope) மூலம் எடுக்கப்பட்ட முதல் டீப் ஸ்பேஸ் புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA), ஜூலை 12 ஆம் தேதி வெளியிட்டது. நம்முடைய பிரபஞ்சத்தில் இதுவரை எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இது தான் மிகவும் அதிக விபரங்கள் அடங்கிய விண்வெளி புகைப்படம் என்று நாசா பெருமிதம் கொண்டது. மனிதக்குலம் இதுவரை கண்டிராத தொலைதூர பிரபஞ்சத்தில் இருக்கும் பிரமிக்கத்தக்க விஷயங்களை இந்த தொலைநோக்கி படம்பிடித்துள்ளது.

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் வெளியிட்ட அடுத்த புகைப்படம்

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் வெளியிட்ட அடுத்த புகைப்படம்

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பின் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக வைரல் ஆனது. இதனைத் தொடர்ந்து நாசா இன்னும் சில பிரமிக்க வைக்கும் புகைப்படத்தை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நம்முடைய சூரியக் குடும்பத்தில் இருக்கும் மிகப்பெரிய வாயு கிரகமான ஜூபிட்டரை இந்த தொலைநோக்கி வேறொரு புதிய கோணத்தில் படம்பிடித்துள்ளது.

மனிதகுலத்தால் உருவாக்கப்பட்ட சக்தி வாய்ந்த தொலைநோக்கி JWST

மனிதகுலத்தால் உருவாக்கப்பட்ட சக்தி வாய்ந்த தொலைநோக்கி JWST

இதுவரை நாம் கண்டிடாத ஜூபிட்டர் தகவலை இந்த படம் காண்பிக்கிறது. JWST படம்பிடித்த ஜூபிட்டர் புகைப்படத்தைப் பார்ப்பதற்கு முன், மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த சக்தி வாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (James Webb Space Telescope) பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம். ஏனெனில், எதிர்காலத்தில் வேற்று கிரகத்தில் இருக்கும் உயிர்களைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்கு இந்த தொலைநோக்கி ஒரு முக்கிய காரணியாக இருக்கப் போகிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?

விண்வெளி பற்றிய மர்மங்களை கட்டவிழ்க்கப் போகும் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்

விண்வெளி பற்றிய மர்மங்களை கட்டவிழ்க்கப் போகும் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்

விண்வெளியில் நமக்குத் தெரியாத பல விஷயங்களை இந்த டெலஸ்கோப் கட்டவிழ்க்கப் போகிறது என்பதனால், இதைப் பற்றித் தெரிந்துகொள்வது முக்கியமானதாகும். இது வரை நிகழ்த்தப்படாத டீப் ஸ்பேஸ், விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உருவாகியுள்ள தொலை நோக்கி கருவி இதுவாகும். இது ஒரு அடுத்த தலைமுறை விண்வெளி தொலைநோக்கியாகத் திகழ்கிறது. ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி மற்றும் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியை விட அதிக திறன் கொண்டது.

L2 லெக்ரான்ஞ்ச் புள்ளியில் பயணிக்கிறதா இந்த டெலஸ்கோப்?

L2 லெக்ரான்ஞ்ச் புள்ளியில் பயணிக்கிறதா இந்த டெலஸ்கோப்?

விண்வெளியில் இருக்கும் அகச்சிவப்பு கதிர்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்து பூமிக்கு அதன் முடிவுகளை அனுப்பும் திறன் கொண்டிருக்கும்படி இந்த ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொலைநோக்கி 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி ஏரியான் 5 விண்கலத்தின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இது, பூமி சூரியனைச் சுற்றி வரும் வட்டப் பாதைக்கு வெளியே சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் அமைத்திருக்கும் L2 லெக்ரான்ஞ்ச் புள்ளியில் ஜனவரி 25, ஆம் தேதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

சூரிய குடும்பத்தில் உள்ள 5 ஆம் கிரகத்தை படம்பிடித்ததா JWST?

சூரிய குடும்பத்தில் உள்ள 5 ஆம் கிரகத்தை படம்பிடித்ததா JWST?

இப்புள்ளியானது சூரியன்-பூமியின் ஈர்ப்பு விசை சமநிலை பெறும் ஐந்து லெக்ரான்ஞ்ச் புள்ளியில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, உலகின் மிகச் சக்திவாய்ந்த தொலைநோக்கி சமீபத்தில் தொலைதூர பிரபஞ்சத்தின் மிக தெளிவான மற்றும் ஆழமான அகச்சிவப்பு படங்களைப் பகிர்ந்து கொண்டது, இது 4.6 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு முந்தையது என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த தொலைநோக்கி, இப்போது ஜூபிட்டர் தொடர்பான 2 வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இதுவரை மனிதக்குலம் கண்டிடாத ஜூபிட்டர் தகவலை இது காண்பிக்கிறது.

வேற்றுகிரகத்தில் கடல்-1 அல்ல 2: ஏலியன் உயிரை கண்டறிய NASAவின் புது 'நீந்தும்' ராக்கெட் திட்டம்!வேற்றுகிரகத்தில் கடல்-1 அல்ல 2: ஏலியன் உயிரை கண்டறிய NASAவின் புது 'நீந்தும்' ராக்கெட் திட்டம்!

ஜேம்ஸ் வெப்பின் NIRCam மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம்

ஜேம்ஸ் வெப்பின் NIRCam மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம்

ஜேம்ஸ் வெப்பின் இந்த இரண்டு படங்களையும் தொலைநோக்கி, அதில் உள்ள NIRCam (Near Infrared Camera) மூலம் படம்பிடித்துள்ளது. இந்த நியர் இன்பிராரெட் கேமராவின் உதவியோடு, ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் எப்படி நகரும் இலக்குகளைக் கண்காணிக்கிறது என்பதைத் தெளிவாக இந்த புகைப்படம் காண்பிக்கிறது என்று நாசா கூறியுள்ளது. இந்தப் படங்கள் முழுத் தெளிவுத்திறன் கொண்ட முறையான படங்கள் அல்ல என்பது கவனிக்கத்தக்கது.

ஜூபிட்டரின் 3 நிலவை காட்டியதா ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்?

ஜூபிட்டரின் 3 நிலவை காட்டியதா ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்?

மாறாக ஜேம்ஸ் வெப்பின் பல்துறைத் திறனைக் காட்டுவதற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த இரண்டு படங்களில் ஒன்று ஜூபிட்டரை ஷார்ட் வேவ்லெந்த் மூலம் படம்பிடித்துள்ளது. அதாவது, குறுகிய அலைநீளத்தில் (இடது) படம்பிடிக்கப்பட்டுள்ளது. மற்றொன்று நீண்ட அலைநீளத்திலும் (வலது) வாயு ராட்சதத்தைக் தெளிவாகக் காட்டுகிறது. வெவ்வேறு வளிமண்டல நிலைமைகளை JWST எவ்வாறு கண்டறியும் என்பதற்கான ஆதாரம் இதுவாகும்.

75 வினாடி எக்ஸ்போஷர் மூலம் கிளிக் செய்யப்பட்ட படம்

75 வினாடி எக்ஸ்போஷர் மூலம் கிளிக் செய்யப்பட்ட படம்

ஜூபிட்டரின் இந்த இரண்டு படங்களும் 75 வினாடி எக்ஸ்போஷர் மூலம் கிளிக் செய்யப்பட்டுள்ளது. இந்த படங்களில், ஜூபிட்டரின் நிலவுகளான யூரோப்பா (Europa), தீப் (Thebe) மற்றும் மெடிஸ் (Metis) ஆகியவற்றையும் JWST தெளிவாகக் காண்பிக்கிறது. நாசாவின் கூற்றுப்படி, பெரிய சிவப்பு புள்ளியின் இடதுபுறத்தில் யூரோப்பா (Europa) நிலவின் நிழல் மட்டும் தெரிகிறது என்பதை நாசா சுட்டிக்காட்டியுள்ளது.

'நீர்' ஆதாரங்களை வேற்று கிரகத்தில் கண்டறிந்த James Webb Space Telescope! இங்கு உயிர்கள் வாழ முடியுமா?'நீர்' ஆதாரங்களை வேற்று கிரகத்தில் கண்டறிந்த James Webb Space Telescope! இங்கு உயிர்கள் வாழ முடியுமா?

நமக்குத் தெரியாத உலகின் மர்மங்களை இந்த டெலஸ்கோப் திறக்கும்

நமக்குத் தெரியாத உலகின் மர்மங்களை இந்த டெலஸ்கோப் திறக்கும்

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப், ஆரம்பக்கால பிரபஞ்சத்தின் விண்மீன் படங்களைக் கிளிக் செய்யும் என்று நாசா கூறியுள்ளது. இந்த பிரபஞ்சத்தில் நமக்குத் தெரியாத சில உலகின் மர்மங்களை இந்த டெலஸ்கோப் திறக்கும் என்று கூறப்படுகிறது. அதே வேளையில், நமக்குத் தெரிந்த மற்றும் தெரியாத பிரபஞ்சத்தின் வாழக்கூடிய தொலைதூர உலகங்களை இந்த ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மதிப்பிடும் என்று நம்பப்படுகிறது.

தூரத்து கிரகத்தில் நீர் ஆதாரத்தை கண்டுபிடித்த JWST

தூரத்து கிரகத்தில் நீர் ஆதாரத்தை கண்டுபிடித்த JWST

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பின் அடுத்த புகைப்படம் என்னவாக இருக்கும் என்பதைப் பார்ப்பதற்கு நாம் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். சமீபத்தில், வெளியிடப்பட்ட தரவுகளின் படி, JWST தொலைநோக்கி, WASP 96b என்ற தொலைதூர கிரகத்தில் நீர் ஆதாரங்கள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. இன்னும் இந்த டெலஸ்கோப் என்னென்ன அற்புதங்களைக் காண்பிக்கவிருக்கிறது என்பதைக் காண்பதற்கு மனிதக்குலம் மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
James Webb Space Telescope Took Two New Pictures Of The 5th Planet Jupiter

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X