'நீர்' ஆதாரங்களை வேற்று கிரகத்தில் கண்டறிந்த James Webb Space Telescope! இங்கு உயிர்கள் வாழ முடியுமா?

|

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் (James Webb Space Telescope) நமது பிரபஞ்சத்தில் இதுவரை எடுக்கப்படாத மிகத் துல்லியமான டீப் ஸ்பேஸ் புகைப்படத்தை அதன் முதல் பயணத்தின் போது எடுத்திருந்தது. இந்த முதல் டீப் ஸ்பேஸ் புகைப்படத்தை நாசா, செவ்வாய்க்கிழமை அன்று வெளிப்படுத்தியது. இதுவரை நம்முடைய பிரபஞ்சத்தில் எடுக்கப்பட்ட மிகத் துல்லியமான நீண்ட தூரத்து விண்வெளி புகைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நாசா கண்டுபிடித்த எக்சோபிளானெட் கிரகங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

நாசா கண்டுபிடித்த எக்சோபிளானெட் கிரகங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

இதேபோல், பல ஆண்டுகளாகப் பல விஞ்ஞானிகளும், வானியலாளர்களும் நமது பிரபஞ்சத்தில் உள்ள வேற்று கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான ஏற்ற சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். நம்முடைய ஹப்பிள் டெலஸ்கோப் மூலம், நாசா இதுவரை கிட்டத்தட்ட 5000-திற்கும் மேற்பட்ட எக்சோபிளானெட் கிரகங்களைக் கண்டறிந்துள்ளது. ஆனால், இந்த கிரகங்களை அடையாளம் காண முடிந்த நமக்கு, இதில் நீர் உள்ளதா? ஆக்சிஜன் உள்ளதா? என்ன வகையான வாயுக்கள் இருக்கிறது என்பதைக் கண்டறியமுடியாமல் போனது.

வேற்று கிரகங்களில் உயிர்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா?

வேற்று கிரகங்களில் உயிர்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா?

நமக்குத் தெரிந்த பிரபஞ்சத்திலும், அண்டத்திலும் உள்ள வேற்று கிரகங்களில் உயிர்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் ஹப்பிள் டெலெஸ்கோப்பில் இல்லாமல் இருந்தது. ஹப்பிள் டெலெஸ்கோப்பால் கைப்பற்ற முடியாமல் போன மிக நுணுக்கமான தேடல்களை அடையாளம் காணும் நோக்கத்தில் தான் இந்த ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கம் மூலம், விஞ்ஞானிகளின் நீண்ட நாள் தேடலுக்குப் பதில் கிடைத்துள்ளது.

நீர் அடையாளம் காணப்பட்ட கிரகம் எது தெரியுமா?

நீர் அடையாளம் காணப்பட்ட கிரகம் எது தெரியுமா?

பிரபஞ்சத்தில் இருக்கும் மற்ற கிரகங்கள் மற்றும் காணக்கூடிய வான உடல்களில் நீரின் தடயங்களைத் தேட முயன்ற விஞ்ஞானிகளுக்கு ஒரு வழியாக ஆதாரம் WASP-96b கிரகத்திலிருந்து கிடைத்துவிட்டது. இப்போது, ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் "தண்ணீரின் அடையாளம்" காணப்படும் ஒரு பெரிய வாயு கிரகத்தைக் கண்டறிந்துள்ளது. இங்கு மேகங்கள் மற்றும் மூடுபனியின் ஆதாரங்கள் இருப்பதாக JWST குறிப்பிடுகிறது. இந்த WASP-96b கிரகம் 1,150 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள தொலைதூர நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாக நாசா கூறியுள்ளது.

நாசா ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலெஸ்கோப் கைப்பற்றிய 'அந்த' புகைப்படம்

நாசா ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலெஸ்கோப் கைப்பற்றிய 'அந்த' புகைப்படம்

நாசாவின் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் 2013 ஆம் ஆண்டில் இந்த கிரகத்தில் நீர் அடையாளங்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியது. ஆனால், தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட நாசாவிற்கு ஜேம்ஸ் வெப்பின் உதவி தேவைப்பட்டது. இப்போது, ஒரு வழியாக இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களில் நீருக்கான அடையாளங்கள் இருப்பதை நாசா ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலெஸ்கோப்பின் உதவியுடன் உறுதிப்படுத்தியுள்ளது. நாசாவின் கூற்று இதுபற்றி என்ன சொல்கிறது?

வேற்று கிரக மேகங்களில் நீர் அடையாளமா?

வேற்று கிரக மேகங்களில் நீர் அடையாளமா?

"வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவை அளவிடவும், கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் போன்ற பல்வேறு தனிமங்களின் மிகுதியைக் கட்டுப்படுத்தவும், வளிமண்டலத்தின் வெப்பநிலையை ஆழத்துடன் மதிப்பிடவும் ஆராய்ச்சியாளர்கள் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலெஸ்கோப்பில் இருக்கும் ஸ்பெக்ட்ரத்தைப் பயன்படுத்தியுள்ளனர்" என்று நாசா தெரிவித்துள்ளது. "பின்னர் அவர்கள் இந்த தகவலைப் பயன்படுத்தி கிரகத்தின் ஒட்டுமொத்த தகவலையும் சேகரித்துள்ளனர்.

WASP-96b என்ற இந்த கிரகம் எங்கிருக்கிறது?

WASP-96b என்ற இந்த கிரகம் எங்கிருக்கிறது?

WASP-96b என்ற இந்த கிரகம் ஒவ்வொரு 3.4 நாட்களுக்கும் அதன் சொந்த நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த கிரகம் அதன் நட்சத்திரத்திற்கு மிக அருகில் அமர்ந்துள்ளது. அதாவது, இந்த கிரகத்தின் வெப்பநிலை 1,000 டிகிரி பாரன்ஹீட் சுற்றி இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒப்பிடுகையில், மேர்கியூரி, நமது சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம், 88 நாட்களுக்கு ஒருமுறை சுற்றுகிறது. மேலும், நமது சூரியக் குடும்பத்தில் சூரியனுக்கு அருகில் இருக்கும் வாயு ராட்சதர்கள் போல் இந்த வாயு கிரகம் இல்லை என்றும் நாசா கூறியுள்ளது.

JWST டெலஸ்கோப் மூலம் வெளிவந்த உண்மை என்ன?

JWST டெலஸ்கோப் மூலம் வெளிவந்த உண்மை என்ன?

WASP-96b என்ற இந்த கிரகம் நம்முடைய சூரியக் குடும்பத்தில் இருக்கும் வியாழனை விட பாதி அளவு குறைவாக உள்ள வாயுக் கோளாக இருக்கிறது. ஆனால், வியாழனை விட 1.2 மடங்கு பெரிய விட்டம் கொண்டதாக உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. நாசா WASP-96 b ஐ நமது சூரியனைச் சுற்றி வரும் எந்த கிரகத்தையும் விட இது மிகவும் உப்பி இருப்பதாக ''much puffier" நாசா தெரிவிக்கிறது. அசாதாரணமாக, 6.4 மணிநேர கண்காணிப்பின் மூலம் JWST இந்த எக்ஸோப்ளானெட்டின் நம்பமுடியாத துல்லியமான அளவீடுகளை எடுத்துள்ளது.

WASP-96b பற்றி நாசா வெளியிட்ட தகவல்

இது தண்ணீரின் தனித்துவமான அடையாளங்களையும், மூடுபனி மற்றும் மேகங்களின் ஆதாரத்தையும் வெளிப்படுத்துகிறது என்று நாசா கூறியுள்ளது. WASP-96b இன் முந்தைய ஆய்வுகள் அத்தகைய கையொப்பங்களைக் கண்டறியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. JWST இன் நியர்-இன்ஃப்ராரெட் இமேஜர் மற்றும் ஸ்லிட்லெஸ் ஸ்பெக்ட்ரோகிராஃப் (NIRISS) மூலம் எக்ஸோப்ளானெட் அதன் நட்சத்திரத்தைக் கடந்து செல்லும் போது அதன் ஒளியை அளவிட்டு இந்த ஆதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த எக்ஸோப்ளானெட்டில் உயிர்கள் இருக்க வாய்ப்பிருக்கா?

இந்த எக்ஸோப்ளானெட்டில் உயிர்கள் இருக்க வாய்ப்பிருக்கா?

லைட் கர்வ் பிரைட்னஸ் மற்றும் இன்பிராரெட் ஒளியின் தனிப்பட்ட வேவ்லென்த்கள் 0.6 மற்றும் 2.8 மைக்ரான்களுக்கு இடையில் மாற்றத்தைக் காட்டியுள்ளது. இதன் மூலம் அந்த கிரகத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் கண்டறிந்துள்ளது. பூமிக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையின் முக்கிய அடையாளமாக நீர் கருதப்படுகிறது. அப்படியென்றால், இந்த எக்ஸோப்ளானெட்டில் உயிர்கள் இருக்கலாம் என்று அர்த்தமா? நாசா இது பற்றி என்ன சொல்கிறது?

நீர் வாழ்வின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.. ஆனால்?

நீர் வாழ்வின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.. ஆனால்?

இத்தகைய கோள்கள் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்கள் மிகமிகக் குறைவு என்கிறது நாசா. ஏனென்றால், இவை பூமியைப் போல ஒரு பாறை மேற்பரப்புக்கு மேல் மெல்லிய வளிமண்டலத்தைக் கொண்டிருக்கவில்லை என்று விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளார். திரவ நீர் மற்றும் திடமான மேற்பரப்பு ஆகியவற்றின் கலவையானது 'நமக்குத் தெரிந்த வாழ்க்கை'க்கான செய்முறையில் முக்கியமான கூறுகளாகக் கருதப்படுகிறது. ஆனால், இது ஒரு வாயு கிரகம் என்பதனால் இங்கு உயிர்களின் அடையாளங்கள் இருக்கச் சாத்தியமில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
James Webb Space Telescope Found Signature Of Water In The Clouds Of WASP96b Alien Planet

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X