ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைல் ஆடம்பர படகு! நீர்மூழ்கி படகாகவும் மாறும் அதிசயம்..

|

ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான அதிமேதை என்பதற்கான முக்கிய காரணம் ஒரு உயர் ரகசிய குகை. ஆனால் மொத்த உலக ஆதிக்கத்தையும், அதன் சதி செய்யும் கண்கள் மற்றும் தொல்லை தரும் உளவாளிகளிடமிருந்து விடுதலையை உறுதி செய்வது கண்டிப்பாக ஒரு சவாலாகத் தான் இருக்கும்.

 நீர்மூழ்கிக் கப்பலாகவும் உருமாறும் திறன்

நீர்மூழ்கிக் கப்பலாகவும் உருமாறும் திறன்

இத்தாலியில் உருவாகி வரும் ஒரு புதிய சொகுசு சூப்பர் படகு இதற்கு ஒரு தீர்வாக இருக்கும் என நம்பப்படுகிறது. நீர்மூழ்கிக் கப்பலாகவும் உருமாறும் திறன் கொண்ட இந்த படகு பணக்காரர்கள், பிரபலமானவர்கள் அல்லது வில்லன்களுக்கு முழுமையான தனியுரிமையை கடல் அலைகளுக்கு கீழே உறுதிப்படுத்துகிறது.

10 நாட்கள் வரை அங்கேயே இருக்க முடியும்

10 நாட்கள் வரை அங்கேயே இருக்க முடியும்

'காரபேஸ்' என்று அழைக்கப்படும் இந்த கலப்பின கப்பல் வடிவமைப்பு, லண்டன் பேருந்தின் நீளத்தினை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு நீளமானது.இது 985 அடி (300 மீ) ஆழத்தில் மூழ்கி, 10 நாட்கள் வரை அங்கேயே இருக்க முடியும் திறன்கொண்டது.

 வணிக முதலாளிகள்

வணிக முதலாளிகள்

இராஜதந்திரிகள் மற்றும் வணிக முதலாளிகள் முக்கியமான கூட்டங்களை நடத்துவதற்கும், 'உடன்படிக்கை அல்லது ஒப்பந்தங்களை முழுமையான இரகசியமாக வரையறுக்கவும்' இந்த கப்பலில் பயணிக்கலாம் என இதன் வடிவமைப்பாளர்கள் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர்.

விஐபி கேபின்கள்

லேசான அலுமினிய சூப்பர் கட்டமைப்பைக் கொண்ட 256 அடி (78 மீட்டர்) நீளமுள்ள இந்த படகு, அதிகபட்சமாக சுமார் 985 அடி (300 மீட்டர்) ஆழத்திற்குச் செல்லும்போது அதிர்ச்சியூட்டும் வகையிலான நீருக்கடியில் உள்ள காட்சிகளை வழங்கும்.


விஐபி கேபின்கள், லவுஞ்ச், ஸ்பா, பார் மற்றும் ஜிம் உள்ளிட்ட பல்வேறு ஆடம்பரமான வசதிகளை பயணிகள் இந்த படகில் அனுபவிக்க முடியும்.

 கடல் காட்சிகளை அனுபவிக்கலாம்

கடல் காட்சிகளை அனுபவிக்கலாம்

காராபேஸ் படகு நீரின் மேற்பரப்பிற்கு வந்தவுடன், அதன் மேல்மாடத்தில் உள்ள பல சூரிய மாடங்களில் ஒன்றில் இருந்து விருந்தினர்கள் கடல் காட்சிகளை அனுபவிக்கலாம் அல்லது கப்பலில் இருந்து கடல் எனும் முடிவிலா நீச்சல்குளத்தில் நீந்தி மகிழலாம்

எலெனா நப்பி

எலெனா நப்பி

இந்த ஹைப்ரிட் சூப்பர் படகு நூற்றுக்கணக்கான மில்லியன் பவுண்டுகள் என்ற அளவில் விலை மதிப்பை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . இத்தாலிய கப்பல் கட்டுமான நிறுவனமான Fincantieri-ன் 34 வயதான வடிவமைப்பாளர் எலெனா நப்பி-ன் மூளையில் உருவான குழந்தை இந்த படகு.

கூற்றுப்படி

இதை உருவாக்கியவர்களின் கூற்றுப்படி, இந்த கப்பலில் குறிப்பிட்ட அளவு பயணிகளுக்கும் இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 கப்பல் மேற்பரப்பிலும்

இந்த நீர்மூழ்கிக் கப்பல் மேற்பரப்பிலும் மற்றும் நீருக்கடியிலும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கடல் வாகனம் ஆகும். இதை அனைத்து பிற கப்பல்கள் போன்று கடல் முழுவதும் நீரின் மேற்பரப்பில் இயக்க முடியும் மற்றும் தண்ணீரின் கீழும் செலுத்தமுடியும். படகு வாங்கும் எவருக்கும் ஒரு படகு மட்டும் தேவையில்லை. ஆனால் உணரவும், கனவு காணவும், உணர்ச்சிகளுக்கும், நிறைவேற்றும் உணர்வுக்கும் மற்றும் பாராட்டப்பட்டதாக உணரவும் கடலும் தேவை' என்கிறார் நப்பி.

Best Mobiles in India

English summary
James Bond style luxury super yacht doubles SUBMARINE allow meetings complete secrecy: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X