Home
News

கோடிங் பில்ட் பண்ணல.. டைம் எடுத்துக்கல.. 1 வாரத்துல 2 ஆப்கள் உருவாக்கம்.. கூஸ் உதவியுடன் புதிய சகாப்தம்!

எக்ஸ் தளத்தின் இணை நிறுவனரும், பிளாக் (Block) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான ஜாக் டோர்சி (Jack Dorsey), ஒரே வாரத்தில் 2 புதிய ஆப்களை அறிமுகப்படுத்தி தொழில்நுட்ப உலகை மிரளவிட்டுள்ளார். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த ஆப்களை உருவாக்க அவராக எந்த கோடிங்கையும் உருவாக்கவில்லை, அதேபோல அதிக நேரமும் எடுத்த கொள்ளவில்லை, கூஸ் (Goose) என்னும் ஏஐ கோடிங் அசிஸ்டன்ட் உதவியுடன் அதை செய்துள்ளார்.

இது எதிர்கால ஆப் உருவாக்கத்தில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி இருக்கிறது. இந்த கூஸ் ஏஐ கோடிங் அசிஸ்டன்ட் அவருடைய பிளாக் நிறுவத்தின் சொந்தமாகும். இதனாலேயே இது தனி கவனம் பெற்றுள்ளது. இதன் மூலமே பிட்சாட் (Bitchat) மற்றும் சன் டே (Sun Day) ஆகிய ஆப்களையே அவர் அறிமுகம் செய்திருக்கிறார். இந்த ஆப்கள் என்ன செய்யும்?

கோடிங் பில்ட் பண்ணல.. டைம் எடுத்துக்கல.. 1 வாரத்துல 2 ஆப்கள் ரெடி!

பிட்சாட் (Bitchat):
இதுவொரு ப்ளூடூத் பேஸ்டு மெசேஜிங் ஆப் ஆகும். இதற்கு இன்டர்நெட் கனெக்சன் தேவையில்லை. ப்ளூடூத் மெஷ் நெட்வொர்க் வழியாக டிவைஸ்களுக்கு இடையே மெசேஜ்களை அனுப்பி கொள்ள முடியும். இன்டர்நெட் இல்லாத மற்றும் அது தடை செய்யப்பட்ட நேரத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில் பிட்சாட், தனியுரிமைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

* ஆஃப்லைன் கம்யூனிகேஷன் (Offline Communication)
* பிரைவசி போகஸ்டு (Privacy-focused)
* டீசென்டர்லைஸ்டு (Decentralized)
* ஐஆர்சி-ஸ்டைல் இன்டர்பேஸ் (IRC-style Interface)
* ஸ்டோர் & பார்வேர்டு (Store & Forward):

ஆஃப்லைன் கம்யூனிகேஷன்:
இன்டர்நெட் தடைப்பட்ட பகுதிகள், இன்டர்நெட் சேவை கிடைக்காத தொலைத்தூர பகுதிகளில் உள்ளூர் தகவல் தொடர்புக்கு இதை பயன்படுத்த முடியும். அதேபோல அவசரநிலைகள் மற்றும் பேரழிவுகளின் போது இன்டர்நெட் இல்லாமலேயே தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும். ஸ்மார்ட்போன்கள் இருந்தால் மட்டும் போதும்.

கோடிங் பில்ட் பண்ணல.. டைம் எடுத்துக்கல.. 1 வாரத்துல 2 ஆப்கள் ரெடி!

பிரைவசி போகஸ்டு:
இந்த பிட்சாட் ஆப்-க்கு சென்ட்ரல் சர்வர்கள் கிடையாது. மொபைல் நம்பர்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களை கொண்ட அக்கவுண்ட்கள் கிடையாது. ஆகவே, தனிப்பட்ட தகவல்கள் சேமிக்கப்படாது மற்றும் யாருக்கும் பகிர முடியாது. எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்டெட் மற்றும் தற்காலிக பயன்பாட்டை கொடுக்கிறது. டீபால்ட் டிஸ்அப்பியரிங் உள்ளது.

டீசென்டர்லைஸ்டு (Decentralized)
இந்த பிட்சாட் ஆப் மூலம் பகிரப்படும் மெசேஜ்கள் அதில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் லோக்கல் டிவைஸ்களில் மட்டுமே சேமிக்கப்படும். ஆகவே, கிளவுட் அல்லது கண்காணிப்புக்கு இதில் இடம் கிடையாது. அந்தந்த டிவைஸ்களின் ஸ்டோஜ்களில் மட்டுமே இது பயன்படுத்தப்படும். ஆகவே, இது டீசென்டர்லைஸ்டு செய்யப்பட்ட தகவல்கள் ஆகிவிடுகிறது.

ஐஆர்சி-ஸ்டைல் இன்டர்பேஸ்:
இதுவொரு ஐஆர்சி ஸ்டைல் இன்டர்பேஸ் கொடுக்கிறது. ஆகவே, டெக்ஸ்ட் மற்றும் டைரெக்ட் மெசேஜிங் சேவை மட்டும் கிடைப்பதால், இது கிட்டத்தட்ட சாட் ரூம் அனுபவத்தை கொடுக்கும். அதுவும் குறிப்பிட்ட வட்டாரத்துக்குள் இதை பயன்படுத்தி கொள்ள முடியும் என்பதால், குரூப் கம்யூனிகேஷன் போலவே பயன்படுத்தி கொள்ள முடிகிறது.

ஸ்டோர் & பார்வோர்டு:
இந்த ஆப் சேவை ஆஃப்லைனில் கிடைப்பதால், மெஷ் நெட்வொர்க்குடன் பயனர்கள் இணைந்த பிறகே அவர்களால் மெசேஜ்களை பார்க்கவும், அதற்கு பதிலளிக்கவும் முடியும். ஒருவர் மெஷ் நெட்வொர்க்கில் இணைந்து அனுப்பிய மெசேஜ் ஸ்டோர் செய்யப்படும். மற்றொருவர் நெட்வொர்க்குடன் இணைந்த பிறகு அது பார்வோர்டு செய்யப்படும்.

கோடிங் பில்ட் பண்ணல.. டைம் எடுத்துக்கல.. 1 வாரத்துல 2 ஆப்கள் ரெடி!

சன் டே (Sun Day):
இதுவொரு ஹெல்த் ஆப் என்றே சொல்லலாம். சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி அளவை மதிப்பிடும்படி வேலையை செய்கிறது. அதேபோல அல்ட்ரா வயலட் வெளிபாட்டையும் டிராக் செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தும் யூசர்களின் லோகேஷன், ஸ்கின் டைப் மற்றும் டிரெஸ் போன்ற தகவல்களின் அடிப்படையில் செயல்படுகிறது.

* யூவி & விட்டமின் டி (UV & Vitamin D)
* சன் எக்ஸ்போசர் கைடென்ஸ் (Sun Exposure Guidance)
* ஓப்பன்-சோர்ஸ் (Open-source)

யூவி & விட்டமின் டி:
இந்த சன் டே ஆப்-ஐ பயன்படுத்தும் யூசரின் டிவைஸ் லோகேஷன், டைம், ஸ்கின் டைப் மற்றும் உடை விவரங்கள் எடுத்து கொள்ளப்படுகின்றன. இந்த தகவல்களுடன் யூவி இன்டெக்ஸ் சேர்க்கப்பட்டு பர்சனலைஸ்டு எஸ்டிமேட் செய்யப்படுகிறது. ஆகவே, ஒவ்வொரு யூசர்களின் லோகேஷன் மற்றும் அவர்களது உடைகளின் அடிப்படையில் மாற்றம் இருக்கும்.

சன் எக்ஸ்போசர் கைடென்ஸ்:
இந்த உள்ளீடுகளின் அடிப்படையில், இந்த சன் டே ஆப் ஆனது வைட்டமின் டி அளவை கால்குலேட் செய்யவும். வெளியே செல்லும்போது சூரிய ஒளியில் பாதுகாப்பாக இருக்கவும் அவுட்புட்களை கொடுக்கிறது. சிம்பிள் இன்டர்பேஸ் கொடுப்பதால், எளிதாக பயன்படுத்த முடிகிறது. சரும பிரச்சனைகள் இருப்போருக்கு இந்த ஆப் பக்காவாக இருக்கும்.

ஓப்பன்-சோர்ஸ்:
இந்த சன் டே ஆப் ஆனது ஒரு ஓப்பன் -சோர்ஸ் மாடலாகும். கிட்ஹப் (GitHub) தளத்தில் இதன் கோட் அனைவருக்கும் கிடைக்கிறது. ஆகவே, இதை கோலாப் செய்ய முடியும். இந்த 2 ஆப்களும் Goose AI மூலம் உருவாக்கப்பட்டவையாகும். இதனாலேயே இவற்றை ஜாக் டோர்சி ஒரே வாரத்தில் உருவாக்கி முடித்து இருக்கிறார். ஜூலை 7 மற்றும் 14 தேதிகளில் உருவாக்கினார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jack Dorsey Rapid Fire Innovation Bitchat And Sun Day Unveiled in a Week
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X