அட்மின்கள் குஷி- இதுக்கெல்லாம் வாட்ஸ்அப் அட்மின் பொறுப்பாக முடியாது: மும்பை உயர்நீதிமன்ற கிளை!

|

ஸ்மார்ட்போன்கள் தேவை என்பது பல்வேறு செயலுக்கும் அவசியமாக இருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போன்களில் சமூகவலைதள பயன்பாடு என்பது பிரதானமாக இருக்கிறது. அனைத்து தரப்பு வயதினரும் குறைந்தது ஒரு சமூகவலைதளத்திலாவது தங்களுக்கு என ஒரு கணக்கு வைத்துள்ளனர். ஸ்மார்ட்போன்களில் பிரதானமாக இருப்பது பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டா போன்றவைகள் உள்ளது.

சமூகவலைதளங்களில் வாட்ஸ்அப் பயன்பாடு

சமூகவலைதளங்களில் வாட்ஸ்அப் பயன்பாடு

சமூகவலைதளங்களில் வாட்ஸ்அப் பயன்பாடு என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வாட்ஸ்அப்பில் அலுவலகம், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், தகவல் அறிவதற்கு என பல்வேறு தேவைக்கு குரூப்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி குறிப்பாக சமூகவலைதளங்களிலேயே பல்வேறு உண்மை தகவல் பயனுள்ள வகையில் இருந்தாலும், இதிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும், ஆட்சேபகரமான பதிவுகள், ஆபாச தகவல்கள், போலி தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதுபோன்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சில இடங்களில் இதன்மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்

சமீபத்தில் கூட கொரோனா பரவல் குறித்த போலி தகவல்கள் பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. டுவிட்டர் சில தினத்திற்கு முன்பு டுவிட்டர் பதிவிடப்பட்ட 50-க்கும் மேற்பட்ட கொரோனா, அரசு மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டு உள்ளிட்டவைகளை நீக்கியது.

குரூப் அட்மின்கள்தான் பொறுப்பு

குரூப் அட்மின்கள்தான் பொறுப்பு

வாட்ஸ்அப் குரூப்களில் வெளியாகும் ஆட்சேப கருத்துகளுக்கு குரூப் அட்மின்கள்தான் பொறுப்பு என காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குரூப் அட்மின்கள் பணி குறித்து பார்க்கையில், குரூப்களை தொடங்கலாம் ஆட்களை இணைக்கலாம் வெளியேற்றலாம், அட்மின் மட்டும் மெசேஜ் என்ற தேர்வை தேர்ந்தெடுக்கலாம்.

வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிடப்படும் ஆட்சேப கருத்துகள்

வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிடப்படும் ஆட்சேப கருத்துகள்

இந்த நிலையில் வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிடப்படும் ஆட்சேப கருத்துகளுக்கு குரூப் அட்மின்கள்தான் பொறுப்பு என போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர், இதுபோன்ற ஒரு வழக்கில் வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிடப்படும் ஆட்சேப கருத்துகளுக்கு குரூப் அட்மின் பொறுப்பாக முடியாது என மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை தெரிவித்திருக்கிறது.

நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு

நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தீர்ப்பின் மூலம் வாட்ஸ்அப் குரூப் அட்மின்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீதிமன்ற அளித்துள்ள தீர்ப்பின் முழு விவரங்களை பார்க்கலாம். வாட்ஸ்அப் செயலியில் கிஷோர் என்ற 33 வயதான இவர், குரூப் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அந்த குரூப்பில் இருந்த பெண் ஒருவருக்கும் மற்றொரு உறுப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அந்த நபர் பெண் உறுப்பினருக்கு எதிராக ஆட்சேகரமான ஆபாச கருத்துகளை பதிவிட்டுள்ளார். அந்த பெண் இதுகுறித்து அட்மின் கிஷோரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார்.

தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குபதிவு

ஆனால் அந்த அட்மின் நடவடிக்கையும் எடுக்கவில்லை அந்த நபரை குரூப்பில் இருந்து நீக்கவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் போலீஸில் புகார் அளித்தார், தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து குரூப் அட்மின் மீது நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி குரூப் அட்மின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அட்மின் கிஷோர் மீதான குற்றச்சாட்டு

இந்த வழக்கானது நீதிபதிகள் ஏ.ஹாக் மற்றும் பி.போர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு மூலம் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை வழங்கியுள்ளது. வாட்ஸ்அப் குரூப் அட்மின் கிஷோர் பெண் உறுப்பினருக்கு எதிராக பதிவிடப்பட்ட நபரை குரூப்பில் இருந்து நீக்கவில்லை எனவும் அந்த நபரை பெண் உறுப்பினரிடம் மன்னிப்பு கோரச் சொல்லி தவறிவிட்டார் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அட்மின் பொறுப்பாக முடியாது

இந்த வழக்கு விசாரணை இறுதியில், கிஷோர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது. மேலும் வாட்ஸ்அப் குரூப்பில் உறுப்பினர்கள் பதிவிடப்பட்ட தகவல்களுக்கு குரூப் அட்மின் பொறுப்பேற்க முடியுமா என்பது கேள்வி எனவும் குரூப்பில் இருக்கும் நபர்களை சேர்க்கவும் நீக்கவும் மட்டுமே அட்மினுக்கு அனுமதி இருக்கிறது, குருப்பில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தகவல்களை பகிர்ந்துக் கொள்ள முடிகிறது. அட்மின் நபர்களை சேர்க்கவோ நீக்கவோ முடியும் ஆனால் தகவல்களை பதிவிடுவதற்கு முன் தனிக்கை செய்யும் அதிகாரம் அட்மினுக்கு கிடையாது எனவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. அதேபோல் குரூப்பில் ஆட்சேப தகவல்களை பதிவிடப்படும் நபர்களே பொறுப்பாவார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கு முடியும் அட்மின் பொறுப்பாக முடியாது என தெரிவித்தனர். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Best Mobiles in India

English summary
Its all Not Admin Responsible, Admin Can't Liable For Members Post: Mumbai High Court

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X