உயிரே பிரிந்ததுபோல் இருக்கு: இன்ஸ்டா தடையால் ரஷ்ய பயனர்கள் அழுகை-"உக்ரைனில் உயிரே போயிட்டு இருக்கு" என கமெண்ட்

|

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்ஸ்டாகிராமை தன் நாட்டில் தடை செய்வதாக அறிவித்துள்ளார். இதனால் பல இன்ஸ்டா பயனர்கள் ஆழ்ந்த வேதனையில் கண்ணீர் விட்டு பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் தடை செய்யப்படும் என அறிவிப்பு

இன்ஸ்டாகிராம் தடை செய்யப்படும் என அறிவிப்பு

இன்ஸ்டாகிராம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பயனர்களிந் கணக்குகள் தடை செய்யப்படுவதற்கு முன்பு பல பயனர்களும் தங்களது இறுதி வீடியோ பதிவுகளை வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் "அவரது உயிர் பறிக்கப்பட்டது" போல் உணர்வதாக தனது வேதனைகளை பதிவிட்டுள்ளார். மேலும் ரஷ்ய ரியாலிட்டி டிவி நட்சத்திரமான 36 வயதுடைய ஓல்கா புசோவா தனது 23.3 மில்லியன் ஃபாலோவர்கள் கொண்ட இன்ஸ்டா கணக்கில் "தான் உன்னை இழக்க விரும்பவில்லை என்பதை ஒப்புக் கொள்வதற்கு பயப்படவே இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.

என் ஆன்மாவின் ஒரு பகுதி

மேலும் "எதிர்காலம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை" என ஏழு நிமிட வீடியோவில் அவர் அழுதபடி குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் ., "எனக்கு தெரியாது நான் என் வாழ்க்கையையும் என் வேலையையும் என் ஆன்மாவையும் பகிர்ந்து கொண்டேன் என்று இதையெல்லாம் நான் ஒரு வேலையாக செய்யவில்லை என் ஆன்மாவின் ஒரு பகுதியாக இவைகள் இருந்திருக்கிறது. இது என் இதயத்தின் ஒரு பெரிய பகுதி, தற்போதைய தடை என்பது என் உயிர் என்னிடம் பிரிவது போல் உணர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

கண்ணீர் விட்டப்படி இன்ஸ்டா பதிவு

அதேபோல் லிசா லுகாஷேவாவும் கண்ணீர் விட்டப்படி இன்ஸ்டாகிராமில் தனது கடைசி வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு அடையாளம் தெரியாத நபர் அழுது பதிவிடும் பதிவை நெக்ஸ்டா டிவி டுவிட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில்., என்னை பொறுத்தவரை இது அனைத்தும் வாழ்க்கை, இது ஆன்மா. நான் எழுவதும் தூங்குவதும் ஒரே ஒரு விஷயம் இதுதான் என ரஷ்ய மொழியில் அழுதபடி தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு "உக்ரேனியர்கள் தங்கள் உயிரைக் கொடுக்கிறார்கள், ரஷ்யர்கள் இதுக்குக் கூட தயாராக இல்லை" என விமர்சகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். 10.5 மில்லியன் பின் தொடர்பவர்களைக் கொண்ட வலேரியா செக்கலினா., அழும் முக இமோஜியை தனது சுயவிவர பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மறுபுறம் 1 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட லிசா லுகாஷேவா தனது ரசிர்களிடம் விடைபெறும் விதமான சிறிய வீடியோத் தொகுப்பை பகிர்ந்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர்

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், கடந்த வாரம் பேஸ்புக் டுவிட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராமுக்கும் ரஷ்யாவில் தடை செய்யப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரஷ்யாவில் இன்ஸ்டாகிராம் தளத்திற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தங்கள் அடிப்படையில் உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு

ஒப்பந்தங்கள் அடிப்படையில் உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு

அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், கனடா உள்ளிட்ட 12 நாடுகள் 1949 உலகப் போருக்கு பின்பு ஒப்பந்தங்கள் அடிப்படையில் உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு தான் நேட்டா. இதன்பின் இதில் கூடுதலாக 30 நாடுகள் இதில் உறுப்பு நாடுகளாக இணைந்தன. மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து பார்க்கையில், நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் மீது பிற நாடுகள் போர் தொடுக்கும் பட்சத்தில் அமைப்பில் பிற நாடுகள் உதவிக்கு வர வேண்டும் என்பதாகும். இந்த நிலையில் ரஷ்யா தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு உக்ரைன், தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய நேட்டோ அமைப்பில் இணைய விரும்பியது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கு காரணம்

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கு காரணம்

இதையடுத்து உக்ரைன் நாட்டை நேட்டோ அமைப்புடன் இணைக்கக் கூடாது என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தியதோடு இதற்கான உறுதிப்பாட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது. இது கைகூடாததை அடுத்து ரஷ்யா நேரடியாக உக்ரைன் மீது போர் தொடக்க தொடங்கியது.

Best Mobiles in India

English summary
Its all Life, Its the Soul: Video posted by Instagram users after the Instagram ban in Russia

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X