Home
News

ஜூலை 31 தான் கடைசி நாள்.. வீட்டில் உட்காந்தபடியே வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வது எப்படி? ஈஸியான 7 படிகள்!

2022 - 2023 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை (Income Tax Return - ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வரி செலுத்துவோர் தங்கள் ஐடிஆர்-ஐ தாக்கல் செய்ய இன்னும் ஒரு சில தினங்களே உள்ளது.

கடைசி நிமிட அவசரம் மற்றும் தாமதம் ஏற்படுவதால் விதிக்கப்படும் அபராதங்களை தவிர்க்க வரி செலுத்துவோர் தங்கள் வருமானத்தை விரைவாக தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை (Tax Department) அறிவுறுத்தியுள்ளது.ஐடிஆர்-ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டிக்கக்கூடும் என்று ஒரு சலசலப்பு உள்ளது.

ஆன்லைன் வழியாக வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வது எப்படி?

இருப்பினும், மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் (Central Board of Direct Taxation - CBDT), இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. எனவே, எஃப்ஒய்23-க்கான ஐடிஆர்-ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

ஒருவேளை உங்களுக்கு வருமான வரி கணக்கை எவ்வாறு தாக்கல் செய்வது என்று தெரியாது என்றால்.. ஆன்லைன் வழியாக அதை செய்வது எப்படி என்கிற எளிமையான மற்றும் படிப்படியான வழிமுறைகள் இதோ! இவைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் வீட்டில் அமர்ந்தபடியே வருமான வரிக் கணக்கை உங்களால் தாக்கல் செய்ய முடியும்

முதல் படி - எல்லா ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்திருங்கள்: உங்கள் ஐடிஆர்-ஐ தாக்கல் செய்யும் செயல்முறையை தொடங்கும் முன், படிவம் 16, படிவம் 26ஏஎஸ், படிவம் 16 ஏ, செய்யப்பட்ட வரி சேமிப்புக்கான ஆதாரம், வங்கி கணக்கு விவரங்கள், டிடிஎஸ் சான்றிதழ்கள் மற்றும் உங்கள் வருமான விவரங்கள் உள்ளிட்ட சில முக்கியமான விவரங்கள் மற்றும் ஆவணங்களை நீங்கள் சேகரிக்க வேண்டும்.

மேலும், பிரிவு 80சி இன் கீழ் ஏதேனும் வரி-சேமிப்பு முதலீடுகள், பிரிவு 80டி இன் கீழ் செலுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள், பிரிவு 80ஜி இன் கீழ் செய்யப்பட்ட நன்கொடைகள் மற்றும் பிற தொடர்புடைய விலக்குகளின் விவரங்கள் இருப்பின் அதையும் தயார் நிலையில் வைத்து இருக்கவும்.

இரண்டாவது படி- ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்: வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் செல்லவும (https://www.incometax.gov.in/iec/foportal/). நீங்கள் ஒரு புதிய பயனராக இருந்தால், உங்கள் நிரந்தர கணக்கு எண்ணை (PAN) பயன்படுத்தி இணையதளத்தில் ரிஜிஸ்டர் செய்யவும். அதுவே உங்கள் யூஸர் ஐடி (User ID) ஆக பயன்படுத்தப்படும்.

மூன்றாவது படி - லாக்-இன் செய்ய வேண்டும்: மேற்குறிப்பிட்டபடி உங்களை நீங்களே ரிஜிஸ்டர் செய்த பின்னர், அதாவது பதிவு செய்த பின்னர், உங்கள் யூஸர் ஐடி, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா (Cpatcha) குறியீட்டை உள்ளிட்டு, இ-ஃபைலிங் போர்ட்டலில் உள்நுழைய லாக்-இன் (Log-in) என்பதை கிளிக் செய்யவும்.

நான்காவது படி - ஐடிஆர்-ஐ தாக்கல் செய்ய தொடங்கவும்: லாக்-இன் செய்த பிறகு, இ-ஃபைல் மெனுவை (e-File Menu) கிளிக் செய்து, இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன் (Income Tax Return) என்கிற லிங்க்-ஐ கிளிக் செய்யவும். பின்னர் அசெஸ்மென்ட் இயர் (Assessment Year) என்பதைத் தேர்ந்தெடுத்து, ஐடிஆர் ஃபார்ம் நம்பர் (ITR form Number) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ஆன்லைனில் தாக்கல் செய்ய, வரி செலுத்துவோர் ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4-ஐ தாக்கல் செய்யலாம். பின்னர் ஃபைலிங் டைப் (Filing type) என்பதில் ஒரிஜினல்/ ரிவைஸ்டு ரிட்டர்ன் (Original / Revised Return) எனத் தேர்ந்தெடுத்து, பின்னர் 'சப்மிஷன் மோட்' (Submition Mode) இல் 'ப்ரீபேர் அன்ட் சப்மிட் ஆன்லைன்' (Prepare and submit Online) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் கன்ட்டினியூ (Continue) என்பதை கிளிக் செய்யவும்

ஐந்தாவது படி - தேவையான விவரங்களை கவனமாக உள்ளிட்டு நிரப்பவும்: மேற்கண்ட 4 படிகளையும் சரியாக செய்த பின்னர், கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாகப் படித்து, ஆன்லைன் ஐடிஆர் படிவத்தின் அனைத்து பொருந்தக்கூடிய மற்றும் கட்டாய புலங்களிலும் (Applicable and Mandatory fields ) தேவையான விவரங்களை கவனமாக நிரப்பவும்.

ஆறாவது படி - இ-வெரிஃபிகேஷன்: ஆன்லைன் ஐடிஆர் படிவத்தை சமர்ப்பித்த பிறகு, டேக்சஸ் பெயிட் அன்ட் வெரிஃபிகேஷன் (Taxes Paid and Verification) டேப்-இல் பொருத்தமான சரிபார்ப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இதை செய்வதற்கான எளிதான வழி இ-வெரிஃபிகேஷன் (e-Verification) தான். இதன் கீழ் ஆதார் ஓடிபி (Aadhaar OTP), மின்னணு சரிபார்ப்பு குறியீடு (Electronic verification code - EVC) வழியாக மூலம் உங்கள் ரிட்டர்ன்-ஐ இ-வெரிஃபிகேஷன் செய்யலாம்.

ஏழாவது படி - இறுதி சமர்ப்பிப்பு மற்றும் உறுதிப்படுத்தல்: இப்போது 'ப்ரீவியூ அன்ட் சப்மிட்' (Preview and Submit) என்கிற பட்டனை கிளிக் செய்து, அதனை தொடர்ந்து ஐடிஆர் இல் உள்ளிடப்பட்டுள்ள எல்லா தரவையும் கவனமாக சரிபார்த்த பின்னர் 'சப்மிட்' (Submit) என்பதைக் கிளிக் செய்யவும்.

வெற்றிகரமான சமர்ப்பிப்பு மற்றும் சரிபார்ப்புக்குப் பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி (Registered email) மற்றும் மொபைல் எண்ணில் உறுதிப்படுத்தல் மெசேஜை (Confirmation message) பெறுவீர்கள். பின்னர் இ-ஃபைலிங் போர்ட்டலில் உங்கள் ஐடிஆர்-ன் ஸ்டேட்டஸை (ITR Status) நீங்கள் சரிபார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
ITR Filing Last Date 2023 July 31 follow These Simple 7 Steps to File Income Tax Return Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X