ITR தாக்கல் செய்த 90% பேர் சிக்கும் ஒரு தவறு.. வருமான வரித்துறையில் முக்கிய அலர்ட்.. கடைசி டைமில் சிக்காதீங்க!
வருமான வரித் தாக்கல் (ITR) செய்வது மட்டுமே போதாது. பலர் கவனிக்காமல் விடும் ஒரு முக்கியமான படி உள்ளது. அதுதான் ஈ-வெரிபிகேஷன் (e-Verification) இந்த செயல்முறையை முடிக்காமல் விட்டால், நீங்கள் தாக்கல் செய்த வருமான வரித் தாக்கல் செல்லுபடியாகாததாக கூட எடுத்து கொள்ளப்படலாம்.
2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் நடவடிக்கைகள் தொடங்கி இருக்கிற நிலையில், வரி செலுத்துவோர் ஈ-வெரிபிகேஷன் குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாக பலர் வருமான வரித் தாக்கல் படிவத்தை சமர்ப்பித்தவுடன் தங்களது வேலை முடிந்துவிட்டதாக நினைக்கின்றனர்.

ஆனால் உண்மையில், ஈ-வெரிபிகேஷன் செய்யப்பட்ட பிறகே அந்த ரிட்டர்ன் முழுமையாக சமர்ப்பிக்கப்பட்டதாக வருமான வரித்துறை கருதுகிறது. இந்த ஈ-வெரிபிகேஷன் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பி வெரிபிகேஷன் செய்தல், நெட் பேங்கிங், பேங்க அக்கவுண்ட் வழியாக செய்தல் உள்ளிட்டவை உள்ளன.
இதில் ஏதேனும் ஒரு முறையை பயன்படுத்தி வரி செலுத்துவோர் தங்கள் ரிட்டர்னை வெரிபிகேஷன் செய்து கொள்ளலாம். வருமான வரித் தாக்கல் செய்த பிறகு, அதன் நிலையை சரிபார்ப்பதும் முக்கியமாகும். வருமான வரித்துறையின் ஈ-ஃபைல்லிங் (e-Filing) தளத்தில் உள்நுழைந்து வியூ ஃபைல்டு ரிட்டர்ன்ஸ் (View Filed Return) விருப்பத்தின் வழியாக அதை செய்யலாம்.
இதன் வழியாக வருமான வரித் தாக்கல் வெற்றிகரமாக ஈ-வெரிஃபைடு செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய முடியும். இந்த ஈ-வெரிபிகேஷன் வெற்றிகரமாக முடிந்திருந்தால், அதற்கான உறுதிப்படுத்தல் தகவல் டிஸ்பிளேவில் காட்டப்படும். மேலும், பதிவு செய்யப்பட்ட ஈமெயின் மற்றும் மொபைல் நம்பருக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டு தெரிவிக்கப்படும்.
வரி நிபுணர்களின் கூற்றுப்படி, கடைசி நேரத்தில் தாக்கல் செய்பவர்கள் இந்த விஷயத்தை தவறவிடும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆகவே, எனவே, இந்த ஆண்டு வருமான வரித் தாக்கல் செய்திருந்தால், ரிட்டர்ன் சமர்ப்பித்துவிட்டேன் என்று நினைத்து நிற்காமல், அது ஈ-வெரிஃபைடு செய்யப்பட்டுள்ளதா என்பதை உடனடியாக உறுதி செய்து கொள்ளுங்கள்.
முக்கியமாக கவனிக்க வேண்டியது: ஆதார் கார்டுடன் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால், ஆதார் ஓடிபியை பயன்படுத்தி வருமான வரித் தாக்கை ஈ-வெரிபிகேஷன் செய்ய முடியாது. டீமேட் அக்கவுண்ட் / பேங்க் அக்கவுண்ட் ஆக்டிவாக இல்லாதபோது, வருமான வரித் தாக்கை ஈ-வெரிபிகேஷன் செய்ய முடியாது. ஈ-வெரிபிகேஷன் செய்யாமல் போனால், அபராதம் கிடையாது.
ஈ-வெரிபிகேஷன் செய்ய ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அது வருமான வரி தாக்கல் செய்யப்படாததாக மட்டுமே கருதப்படும். உரிய காரணத்தை கூறி, சரிபார்ப்பில் ஏற்பட்ட தாமதத்தை மன்னிக்குமாறு நீங்கள் கோரிக்கை வைக்கலாம். அத்தகைய கோரிக்கையை சமர்ப்பித்த பின்னரே, உங்கள் வருமான வரியை ஈ-வெரிபிகேஷன் செய்ய முடியும்.
ஈ-வெரிபிகேஷன் நிராகரிக்கப்பட்டால், அதையும் கவனிக்க வேண்டும். எதற்காக நிராகரிக்கப்பட்டது என்பதை ஈ-ஃபைல்லிங் டாஷ்போர்டில் காணலாம். பிறகு சரியாக மீண்டும் வெரிபிகேஷன் செய்யலாம். இந்த ஈ-வெரிபிகேஷனை ஆன்லைனில் மட்டுமே செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆன்லைன் அல்லது ஆஃப்லைனிலும் செய்யலாம்.
முறையாக கையொப்பமிடப்பட்ட உங்கள் ஐடிஆப்-வி (ITR-V) படிவத்தின் அசலை பெங்களூருவில் உள்ள சிபிசிக்கு அனுப்பி வைத்தும், வெரிபிகேஷன் செய்து கொள்ளலாம். இப்படி தேவைக்கு ஏற்ப ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் வருமான வரித் தாக்கலை வெரிபிகேஷன் செய்து கொள்ளலாம். ஆன்லைனில் செய்வது விரைவாக முடிக்க உதவும்.


Click it and Unblock the Notifications