தூக்குங்கடா இந்த தங்கத்தை.. ரூ.6000 கூட விலை இல்லை.. itel Zeno 10 விற்பனை துவங்கியது.. உடனே ஆர்டர் போடுங்க..
ஐடெல் (itel) நிறுவனம் யாரும் எதிர்பார்த்திடாத விலையில் புதிய ஐடெல் ஜீனோ 10 (itel Zeno 10) ஸ்மார்ட் போன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் வெறும் ரூ.6000 விலை புள்ளியில் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மலிவு விலை போனில் முதல் விற்பனை (itel Zeno 10 sale) இன்று மதியம் 12 மணி அளவில் துவங்குகிறது. இந்த போனின் மீது அறிமுக சலுகை எவ்வளவு கிடைக்கும்? இதன் சிறப்பம்சங்கள் என்ன? இது தொடர்பான முழு விபரங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
என்ன தான் ஐடெல் ஜீனோ 10 (itel Zeno 10) ஸ்மார்ட்போன் சாதனம் வெறும் 6000 ரூபாய் என்ற மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டாலும், இது ஒரு சிறந்த பட்ஜெட் சாதனமாக வாங்க கிடைக்கிறது. இந்த ஐடெல் ஜீனோ 10 (itel Zeno 10) ஸ்மார்ட்போனின் விற்பனை ஜனவரி 9, 2025 ஆம் தேதி மதியம் 12 மணி அளவில் துவங்குகிறது.

தூக்குங்கடா இந்த தங்கத்தை.. ரூ.6000 கூட விலை இல்லை.. itel Zeno 10 விற்பனை துவங்கியது:
ஐடெல் ஜீனோ 10 (itel Zeno 10) போனின் விற்பனை அமேசான் தளத்தில் பிரத்தியேகமாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போனை itel நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம் வழியாகவும் வாங்க கிடைக்கும். மலிவு விலையில் சிறந்த போனை வாங்க விரும்புவோர் இந்த ஐடெல் ஜீனோ 10 (itel Zeno 10) போனை மிஸ் செய்ய கூடாது.
இந்த புதிய ஐடெல் ஜீனோ 10 (itel Zeno 10) சாதனம் ஜெனித்தல் டிசைன் (Zenithal design) வடிவமைப்புடன் வேவ் தோற்றம் கொண்ட பேக் பேனல் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 6.6" இன்ச் எச்டி பிளஸ் IPS LCD டிஸ்பிளேவை (display) கொண்டுள்ளது. இந்த போனில் நிறுவனம் டைனமிக் பார் (dynamic bar) அம்சத்தையும் வழங்கியுள்ளது.
ஐடெல் ஜீனோ 10 (itel Zeno 10):
இந்த itel Zeno 10 ஸ்மார்ட்போன் சாதனம் 4GB ரேம் (RAM) உடன் 64GB ஸ்டோரேஜ் (storage) ஆதரவை பெறுகிறது. இதில் மெமரி பியூஷன் தொழில்நுட்பமும் (memory fusion technology) உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு 8GB விர்ச்சுவல் ரேம் (virtual RAM) அம்சம் பயன்படுத்த கிடைக்கிறது. 6000 ரூபாய் பட்ஜெட்டில் 8GB ரேம் கிடைப்பது ஒரு சிறந்த விஷயமாகும்.
இந்த போனின் சிப்செட் (chipset) பற்றிய விபரங்களை நிறுவனம் வெளியிடவில்லை. இந்த itel Zeno 10 ஸ்மார்ட்போனின் கேமரா (camera) அம்சம் பற்றி பேசுகையில், இது 8MP AI அம்சம் கொண்ட டூயல் ரியர் கேமராவை (dual rear camera) வழங்குகிறது. இந்த சாதனம் முன்பக்கத்தில் 5MP செல்பி கேமராவை (selfie camera) கொண்டுள்ளது.
ஐடெல் ஜீனோ 10 விலை (itel Zeno 10 Price):
இந்த itel Zeno 10 ஸ்மார்ட்போன் சாதனம் 5000mAh பேட்டரி உடன் வருகிறது. இது USB Type-C port உடன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான இயங்குதளத்தில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ரூ. 6000 விலைக்கு கீழ் விற்பனை செய்யப்படும் என்று நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. சில வங்கி சலுகைகளுடன் இதன் விலை இன்னும் கணிசமாக குறைய அதிக வாய்ப்பிருக்கிறது. 12 மணி அளவில் விற்பனை துவங்கியவுடன் இதன் அசல் விலை தெரியவரும்.


Click it and Unblock the Notifications








