வெறும் ரூ. 7,999 விலையில் இப்படி ஒரு தரமான ஸ்மார்ட்போனா? பட்டையை கிளப்பும் புதிய Itel Vision 3..
இந்திய ஸ்மார்ட் போன் சந்தையைப் பொறுத்தமட்டில், விலை உயர்ந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் விற்பனையைக் காட்டிலும், விலை மலிவான மற்றும் மக்களின் பட்ஜெட்டிற்குள் பொருந்தக் கூடிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் மட்டுமே அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. இப்போது கிடைக்கக்கூடிய மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் கூட, நமக்குத் தேவைப்படும் பெரும்பாலான முக்கிய அம்சங்கள் கிடைத்துவிடுகிறது. இதனாலேயே மக்கள் பட்ஜெட் மற்றும் மலிவு விலை ஸ்மார்ட்போன்கள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ரூ. 8,000 விலைக்கும் குறைவான விலையில் புது போனா?
இந்த விஷயத்தை நன்கு அறிந்த, ஐடெல் நிறுவனம் இப்போது ஐடெல் விஷன் 3 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை சிறப்பான அம்சங்களுடன் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஐடெல் விஷன் 3 சாதனம் ஒரு பட்ஜெட் சலுகையாகும். இது ரூ. 8,000 விலை பிரிவின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெறும் ரூ. 8,000 செலவில் உங்களுக்கு பாஸ்ட் சார்ஜிங் அம்சம், பெரிய டிஸ்பிளே, மிகப்பெரிய பேட்டரி, போதுமான ரேம் மற்றும் ஸ்டோரேஜ் அம்சத்துடன் AI கேமரா சென்சார்களுடன் ஒரு புதிய போன் கிடைத்தால் வேண்டாம் என்ற சொல்லப் போகிறோம்.

ஐடெல் விஷன் 3 போனின் கவர்ந்திழுக்கும் தரமான அம்சங்கள்
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐடெல் விஷன் 3 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் பற்றித் தெரிந்தால், நிச்சயமாக இதன் விற்பனை பக்கத்திற்கு நேராகச் சென்றுவிடுவார்கள். ஐடெல் விஷன் 3 ஸ்மார்ட் போன் ஆனது 5,000mAh ஆற்றல் கொண்ட AI பேட்டரியுடன் வருகிறது. இது ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த புதிய ஐடெல் விஷன் 3 ஸ்மார்ட்போன் 6.6' இன்ச் அளவு கொண்ட HD+ ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை, வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிசைன் உடன் வழங்குகிறது.

இந்தியாவில் Itel Vision 3 விலை, கிடைக்கும் தன்மை
இது 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள் சேமிப்பு உள்ளது. மேலும், கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் தொழில்நுட்பம் உள்ளிட்ட இரட்டை பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது. இதன் விலை பற்றிப் பார்க்கையில், புதிய Itel Vision 3 ஸ்மார்ட் போன் இந்தியாவில் வெறும் ரூ. 7,999 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் விற்பனையானது Amazon மற்றும் Flipkart வழியாகக் கிடைக்கிறது. ஐடெல் விஷன் 3 ஸ்மார்ட்போன் டீப் ஓஷன் பிளாக், ஜூவல் ப்ளூ மற்றும் மல்டி கலர் கிரீன் ஆகிய மூன்று வண்ண வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Itel Vision 3 விவரக்குறிப்புகள்
Itel Vision 3 ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் வடிவமைப்புடன் 6.6' இன்ச் HD+ ஐபிஎஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 11 இல் இயங்குகிறது மற்றும் 1.6GHz ஆக்டா கோர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஐடெல் விஷன் 3 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள் சேமிப்பு உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் அதன் மலிவு விலையில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பிற்காக, விஷன் 3 கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

ஐடெல் விஷன் 3 கேமரா அம்சம்
கேமரா அம்சம் பற்றி பார்க்கையில், இந்த புதிய ஐடெல் விஷன் 3 ஸ்மார்ட்போன் 8 மெகாபிக்சல் கொண்ட AI இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் Ai பியூட்டி மோட், போர்ட்ரெய்ட் மோட், பனோரமா மோட், லோ லைட் மோட் மற்றும் எச்டிஆர் மோட் போன்ற முக்கிய கேமரா அம்சங்கள் கொண்ட பயன்முறைகளைக் கொண்டுள்ளது. இந்த அம்சங்கள் மிகவும் விரிவான மற்றும் கூர்மையான படங்களைப் பிடிக்க ஸ்மார்ட் அங்கீகாரம் மற்றும் தானியங்கி கேமரா சரிசெய்தல்களுக்கு உதவுகின்றன. மேலும், Itel Vision 3 ஆனது AI Beauty Mode உடன் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் பொருத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications