Home
News

ரூ.6,999 மட்டுமே- ஆண்ட்ராய்டு 11, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் ஐடெல் விஷன் 2எஸ்!

ஐடெல் விஷன் 2 எஸ் ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் ஆதரவோடு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

பட்ஜெட் பிரிவில் ஐடெல் விஷன் 2 எஸ்

பட்ஜெட் பிரிவில் ஐடெல் விஷன் 2 எஸ்

ஐடெல் விஷன் 2 எஸ் பட்ஜெட் பிரிவில் புதிய ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது கிரேடேஷன் பர்பில், கிரேடேஷன் ப்ளூ மற்றும் டீப் ப்ளூ வண்ண விருப்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐடெல் நிறுவனம் தொடர்ந்து குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. மலிவு விலையில் பொருத்தக்கூடும் கூடுதல் அம்சங்களுடனே இந்த ஸ்மார்ட்போன்கள் வருகின்றன. ஐடெல் ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்றால் அது மிகையல்ல, அதன்படி தற்போது அறிமுகம் செய்துள்ள ஐடெல் விஷன் 2 எஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

பட்ஜெட் விலைப் பிரிவில் அறிமுகம்

பட்ஜெட் விலைப் பிரிவில் அறிமுகம்

ஐடெல் விஷன் 2 எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலைப் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் ஆதரவோடு வருகிறது. எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்புடன் வருகிறது. அதேபோல் பாதுகாப்பு அம்சத்துக்கு பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனானது பெரிய 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் பேக் செய்யப்பட்டுள்ளது. இதில் 24 நாட்கள் காத்திருப்பு மற்றும் 25 மணி நேரம் டாக் டைம் நேரத்தை வழங்குகிறது. ஐடெல் விஷன் 2 எஸ் ஸ்மார்ட்போனானது 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் செயலி மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த சாதனம் மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ஐடெல் விஷன் 2 எஸ் விலை

ஐடெல் விஷன் 2 எஸ் விலை

ஐடெல் விஷன் 2 எஸ் இந்தியாவில் கிடைக்கும் விலை தன்மை குறித்து பார்க்கலாம். இது இந்தியாவில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999 என கிடைக்கிறது. இந்த சாதனம் கிரேடேஷன் பர்பில், கிரேடேஷன் ப்ளூ மற்றும் டீப் ப்ளூ என மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. இது பிரத்யேக விஐபி சலுகையோடு வருகிறது. எந்த சேவை கட்டணமும் செலுத்தாமல் 100 நாட்களுக்குள் உடைந்த திரை முறையை இலவசமாக மாற்ற முடியும்.

ஐடெல் விஷன் 2 எஸ் சிறப்பம்சங்கள்

ஐடெல் விஷன் 2 எஸ் சிறப்பம்சங்கள்

ஐடெல் விஷன் 2 எஸ் ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் எச்டி ப்ளஸ் ஆதரவோடு வருகிறது. 720x1,600 பிக்சல்கள் ஆதரவோடு கிடைக்கிறது. ஐபிஎஸ் டிஸ்ப்ளே 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு ஆதரவு, 90 சதவீதம் டிஸ்ப்ளே டூ பாடி விகிதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் யுனிசோக் எஸ்சி9863 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 2 ஜிபி ரேம் உடன் வருகிறது. இது 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு பட்டியலிடப்பட்டுள்ளது.

8 மெகாபிக்சல் பிரதான கேமரா

8 மெகாபிக்சல் பிரதான கேமரா

ஐடெல் விஷன் 2 எஸ் ஸ்மார்ட்போனானது 8 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் விஜிஏ சென்சார் என இரட்டை கேமரா வடிவமைப்போடு வருகிறது. முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் வசதியை கொண்டிருக்கிறது.

ஐடெல் விஷன் 2 எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு 24 நாட்கள் பேட்டரி ஆயுள் மற்றும் 25 மணி டாக் டைம் ஆயுளை வழங்குகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு பேஸ் அன்லாக் மற்றும் பின்புறம் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் போன்ற இரட்டை பாதுகாப்பு அம்சத்தோடு வருகிறது. இரட்டை சிம் கார்ட் ஆதரவு, ஜி சென்சார் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் அம்சத்தோடு வருகிறது.

Best Mobiles in India

English summary
Itel Vision 2S Smartphone Launched in India at Rs.6999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X