Home
News

ரூ.899 விலையில் AI ENC.. 35 மணி நேரம் பிளேபேக்.. பெஸ்ட் TWS இயர்பட்ஸ் இனி இது தானா?

சீனாவை தளமாகக் கொண்ட ட்ரான்ஸ்ஸின் (TRANSSION) குழுமத்தின் ஒரு பகுதியான ஐடெல் மொபைல் (itel Mobile), இந்தியாவில் ஐடெல் டி1 ப்ரோ (itel T1 Pro) என்ற புதிய ஜோடி மலிவு விலை இயர்பட்ஸ் சாதனத்தை நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ளது.

இதன் சிறப்பே, இது மலிவு விலையில் AI ENC அம்சத்துடன் வருகிறது. இந்த புதிய இயர்பட்ஸ்கள் மலிவு விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளன மற்றும் தடையற்ற தினசரி பயன்பாட்டிற்கு உங்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய அம்சங்களையும் இது மிகவும் மலிவான விலையில் உள்ளடக்கியுள்ளது. ஐடெல் இயர்பட்ஸ் டி1 ப்ரோ முழுமையான இன்-இயர் இயர்பட்ஸ் அம்சத்துடன் வருகிறது.

ரூ.899 விலையில் AI ENC.. 35 மணி நேரம் பிளேபேக்.. பெஸ்ட் TWS இயர்பட்ஸ்!

இது உங்கள் காதுகளில் கச்சிதமாக பொருந்தும் படியான வடிவமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் பயன்படுத்தினாலும், உங்கள் காதுகளுக்கு வலி கொடுக்காத வகையில் இது மிருதுவான பொருத்தத்தை வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ்களில் ஈர்க்கக்கூடிய 10 மிமீ பாஸ் பூஸ்ட் டிரைவர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை செழுமையான மற்றும் அதிவேக ஒலி தரத்தை வழங்குகின்றன.

ஐடெல் டி1 ப்ரோ (itel T1 Pro) இயர்பட்ஸ் இன் ஒரு தனித்துவமான அம்சம் என்றால், இதில் வழங்கப்பட்டுள்ள AI என்விரான்மெண்ட் நாய்ஸ் கேன்சலேஷன் (ENC) தொழில்நுட்பம் ஆகும், இது புத்திசாலித்தனமாக சுற்றுப்புற இரைச்சலைப் பகுப்பாய்வு செய்து, உடனடியாக நீக்குகிறது. இது உங்களுக்கு தெளிவான அழைப்புத் தரத்தை உறுதி செய்கிறது. வாய்ஸ் கால் சவுண்ட் குவாலிட்டி இதன் மூலம் அட்டகாசமாக இருக்கிறது.

இது வசதியான டச் கண்ட்ரோலை ஆதரிக்கிறது. டச் மூலம், நீங்கள் சிரமமின்றி இந்த இயர்பட்ஸ் உடன் மியூசிக் அனுபவத்தை கண்ட்ரோல் செய்து இயக்கலாம். டச் மூலம் உங்களுக்கு வாய்ஸ் கால் அழைப்புகளுக்கு பதிலளிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம். மியூசிக் டிராக்கை மற்றும் மியூசிக் டிரைக்கை போன் மூலம் அணுகாமல் டிராக்குகளைத் தவிர்க்கலாம்.

கூடுதலாக, இந்த இயர்பட்ஸ்கள் இன்-இயர் டிடெக்ஷன் அம்சத்தை ஆதரிக்கிறது. இது உங்கள் காதில் இயர்பட்ஸ் இல்லாத நேரம் அலல்து இயர்பட்ஸை காதில் இருந்து வெளியே எடுக்கும்போது, மியூசிக் பிளேபேக்கை இடைநிறுத்தம் (pause) செய்கிறது. மீண்டும் காதில் வைக்கும்போது மீண்டும் பிளே செய்கிறது. இது Siri மற்றும் Google Assistant போன்ற வாய்ஸ் அசிஸ்டன்ஸ்களையும் ஆதரிக்கின்றன.

ரூ.899 விலையில் AI ENC.. 35 மணி நேரம் பிளேபேக்.. பெஸ்ட் TWS இயர்பட்ஸ்!

ஐடெல் டி1 ப்ரோ (itel T1 Pro) இயர்பட்ஸ்கள் 30 அடி வரம்பிற்குள் தடையற்ற இணைப்புக்காக புளூடூத் 5.3 ஐப் பயன்படுத்துகின்றன. பேட்டரி ஆயுளைப் பொறுத்தவரை, இந்த இயர்பட்ஸ்கள் சேர்க்கப்பட்ட சார்ஜிங் கேஸைப் பயன்படுத்தும் போது 35 மணிநேர மியூசிக் பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணிநேரம் வரை இசையை ரசிக்கலாம்.

USB-C சார்ஜிங்கின் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இது எளிதான மற்றும் திறமையான ரீசார்ஜிங் செயல்முறையை உறுதி செய்கிறது. இவை IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மதிப்பீட்டுடன் வருகின்றன. இதனால் அவை ஸ்பிளாஷ் மற்றும் லேசான மழையில் பாதுகாப்பளிக்கிறது. ஐடெல் டி1 ப்ரோ, வெறும் ரூ.849 விலையில், இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது.

இது நியான் மஞ்சள் கிரெய் (Neon Yellow Grey) மற்றும் புதினா (deep blue with mint green) நிறத்தில் வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள முன்னணி சில்லறை விற்பனைக் கடைகளில் இதை நீங்கள் காணலாம். ஆன்லைன் மூலமாகவும் இதை நீங்கள் வாங்கி பயன்பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel T1 Pro TWS Earbuds with AI ENC and 35 Hours Playback Launched in India At Rs 899 Only
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X