இந்த மிரட்டலான Itel S17 போனின் விலை இது தானா? இவ்வளவு மலிவாக போன் அறிமுகமா?
ஐடெல் எஸ் 17 ஸ்மார்ட்போன் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இது மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் ஒரு நுழைவு நிலை ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் நைஜீரிய சந்தையில் அதிகாரப்பூர்வமாகிவிட்டது. இது 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பிடத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் புதிய விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

Itel எஸ் 17 ஸ்மார்ட்போன் அறிமுகம்
Itel எஸ் 17 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 கோ பதிப்பில் இயங்குகிறது. இது ஆக்டா-கோர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது ஒரு HD+ தீர்மானம் கொண்ட 6.6 இன்ச் IPS டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. ஐடெல் எஸ் 17 என்பது பட்ஜெட்டை மையமாகக் கொண்ட போன் ஆகும். இது மூன்று வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் மற்ற சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்த தகவல் இன்னும் தெளிவாக வெளிவரவில்லை.

Itel S17 விலை மற்றும் விற்பனை
புதிய Itel S17 ஸ்மார்ட்போன் 1GB ரேம் உடன் 16 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் உடன் வருகிறது. இது NGN 45,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பின் படி, இது சுமார் ரூ. 8,200 என்ற விலையில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்கை ப்ளூ, மல்டிகலர் கிரீன் மற்றும் டீப்-ஓஷன் பிளாக் கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அடுத்த வாரம் முதல் நைஜீரியாவில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும்.

Itel S17 சிறப்பம்சம் விபரங்கள்
ஐடெல் எஸ் 17 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 கோ பதிப்பை கொண்டு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஐடெல்லின் தனிப்பயன் ஸ்கின் உடன் இந்த ஸ்மார்ட்போன் இயக்கும் என்று கூறியுள்ளது. இது 6.6' இன்ச் எச்டி பிளஸ் 720 x 1,612 பிக்சல்கள் கொண்ட டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இது வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் உடன் 2.5 டி வளைந்த பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது. இந்த விலையில் உங்களுக்கு 90 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மகொண்ட டிஸ்பிலேவை நிறுவனம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டோரேஜ் விபரம்
இந்த புதிய ஸ்மார்ட்போன் இது அறியப்படாத 1.3GHz குவாட் கோர் பிராசஸர் மூலம் 1 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பே சொன்னது போல் இது ஸ்மார்ட்போனின் இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் கூடிய 16 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தை ஆதரிக்கிறது. கூடுதல் ஸ்டோரேஜ் பயன்பாட்டிற்காக இந்த ஸ்மார்ட்போன் உடன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இது 128 ஜிபி வரையான ஸ்டோரேஜ் அம்சத்தைப் பயன்படுத்தப் பயனரை அனுமதிக்கிறது.

கேமரா விபரம்
ஐடெல் எஸ் 17 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 8 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் மூன்று கேமரா அமைப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இதில் AI ஃபேஸ் பியூட்டி 4.0, பொக்கே, ஏஆர் ஸ்டிக்கர்கள் மற்றும் பல அம்சங்கள் உள்ளது. இது 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 27 நாட்கள் காத்திருப்பு நேரம், 7 மணிநேர படப்பிடிப்பு, 30 மணிநேர தடையில்லா அழைப்புகள் மற்றும் 70 மணிநேர பொழுதுபோக்கு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதில் பின்புற கைரேகை சென்சார் உள்ளது மற்றும் ஐடெல் எஸ் 17 ஃபேஸ் அன்லாக்ஸையும் ஆதரிக்கிறது.


Click it and Unblock the Notifications