itel அடிச்ச நெத்தியடி.. ரூ.1099 விலையில் கூல் டிசைன்.. itel Roar 75 ஓபன்-இயர் பட்ஸ் ரெடி.. எப்போது விற்பனை?
ஐடெல் (itel) நிறுவனம் இப்போது புதிதாக ஐடெல் ரோர் 75 (itel Roar 75) என்ற ஓபன் இயர்பட்ஸ் (Open-earbuds) மாடலை அறிமுகம் செய்துள்ளது. பார்ப்பதற்கே மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படும் சாதனத்தின் விலை மற்றும் முழு விபரத்தை இப்போது பார்க்கலாம்.
ஐடெல் (itel) நிறுவனம் அதன் முதல் ஓபன் இயர் பட்ஸ் மாடலை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடலை நிறுவனம் ஐடெல் ரோர் 75 (itel Roar 75) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இது வெறும் 11 கிராம் எடையுடன் பெதர்வெயிட் டிசைன் உடன் வெயிட்லெஸ் இயர்பட்ஸ் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கேட்ஜெட்ஸ் சந்தையில் இப்போது ஓபன் இயர்பட்ஸ் மாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைந்து வருகின்றன. கடந்த வாரம் ஹுவாய் நிறுவனம் கூட அதன் முதல் ஓபன் இயர்கிளிப் மாடல் இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து, யாரும் எதிர்பார்த்திடாத நேரத்தில், ஐடெல் நிறுவனம் அதன் முதல் ஓபன் இயர் பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஐடெல் ரோர் 75 ஓபன் இயர் பட்ஸ் (itel Roar 75 Open Ear Buds):
இந்த புதிய ஐடெல் ரோர் 75 (itel Roar 75) சாதனம் 14.2mm கொண்ட பெரிய டைட்டானியம் டிரைவருடன் (14.2mm large titanium drivers) வருகிறது. சந்தையில் தற்போது 13mm டிரைவர் (13mm drivers) கொண்ட சாதனங்கள் தான் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இது என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) அம்சத்துடன் வருகிறது.
இந்த ENC அம்சத்தின் மூலம் பயனர்களின் வாய்ஸ் கால் (voice calls) அனுபவம் இரைச்சல் இல்லாத கிரிஸ்டல் கிளியர் ஆடியோ (crystal clear audio) அனுபவத்தை வழங்க உதவுகிறது. இந்த ஐடெல் ரோர் 75 (itel Roar 75) ஓபன் இயர் பட்ஸ் சாதனம் 13 மணிநேர பிளேபேக் (13 jours playback time) நேரத்தை வழங்குகிறது.
இதில் கேமர்களுக்கு (gamers) பயன்படும் 45ms லோ-லேடன்சி மோட் (45ms low-latency mode) போன்றவை இடம்பெற்றுள்ளது. இந்த புதிய ஐடெல் ரோர் 75 (itel Roar 75) இயர்பட்ஸ் சாதனம் டூயல் பேரிங் சப்போர்ட் (dual pairing support) அம்சத்துடன் வருகிறது. இது டைப்-சி சார்ஜிங் போர்ட் (type-C port) உடன் வருகிறது.

ஐடெல் ரோர் 75 சிறப்பம்சம் (itel Roar 75 Specifications):
- 14.2mm பெரிய டைட்டானியம் டிரைவ (14.2mm Large Titanium Drivers)
- AAC மற்றும் SBC கோடெக் சப்போர்ட்
- என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation)
- 45ms low latency gaming mode
- ப்ளூடூத் 5.2 வெர்ஷன் (Bluetooth Version 5.2)
- டூயல் மல்டி டிவைஸ் பேரின்ங் (Dual/Multi-Device Pairing)
- 13 மணி நேர பேட்டரி ஆயுள்
- டைப்-சி சார்ஜிங் (Type-C charging)
- IPx5 ஸ்பிளாஷ் ப்ரூஃப் (splash proof)
- 11g எடை
ஐடெல் ரோர் 75 விலை (itel Roar 75 Price): இந்த புதிய itel Roar 75 சாதனம் ப்ளூ நிறத்தில் வெறும் ரூ.1099 என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த சாதனம் மிக விரைவில் ஐடெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் வழியாக விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








