ஐடெல் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

By Manikandan Navaneethan
|

சீனாவின் புதிய மொபைல் நிறுவனமான ஐடெல் இந்தியாவில் அதன் புதிய வகை ஸ்மார்ட்போன் மாடல்களை களம் இறங்கியுள்ளது. இந்த மொபைல்கள் இந்திய வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மொபைல்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடெல்  நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

தற்சமயம் இந்நிறுவனம் எஸ்42 மற்றும் எ44 என இரண்டு புதிய வகை மொபைல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலையானது முறையே எஸ்42-8,499 ரூபாய்க்கும் எ44 மொபைல் ஆனது 5,799 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 20மார்ச்2018 முதல் விற்பனைக்கு அறிமுகப்படுத்தபட்டுள்ளது. மேலும் இதன் தொடர்ச்சியாக எ44-ப்ரொ என்ற மாடல் ஏப்ரல் மத்தியில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்42-அகன்ற திரை மற்றும் செல்ஃபீ மொபைல்: எஸ்42 மொபைல் ஆனது 5.65 அங்குலம், 18:9 திரை விகிதம், முழு எச்டி+ டிஸ்பிளே மற்றும் மிக மெல்லிய பெசல் என வாடிக்கையாளர்களுக்கு முழு திரை காட்சி அனுபவத்தை வழங்கும் அம்சங்களை கொண்டுள்ளது.

கேமரா துறையை பொறுத்தமட்டில் எஸ்42 ஆனது இரட்டை எல்இடி பிளாஷ் கொண்ட 13எம்பி பிடிஎஎஃப் (பேஸ் டிடெக்சன் ஆட்டோ போகஸ்) ரியர் கேமரா மற்றும் 13எம்பி முன்புற கேமரா உடன் எஃப்/2.0 அபேசர், 120 டிகிரி கோணம் கொண்ட 5பி லென்ஸ், போக்கே பியூட்டி மோட் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன மூலம் வாடிக்கையாளர் வெளிச்சம் குறைந்த இடத்தில கூட துல்லியமான புகை படங்களை எடுக்க முடியும்.

ஐடெல்  நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஐடெல் நிறுவனத்தின் தலைமை ஸ்மார்ட்போனான எஸ்42 வாடிக்கையாளர்களுக்கு வேகம் மற்றும் மல்டி டாஸ்க் அனுபவத்தை கொடுக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் தயாரிப்பில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட 425 சிப்செட் மற்றும் புத்தம் புது வரவான ஆண்ட்ராய்டு 8 ஓரியோ இயங்குதளத்தை கொண்டு வருகிறது. இக்கருவியில் 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கருவி சிறந்த பாதுகாப்பு அம்சமாக கருதப்படும் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த கைரேகை சென்சார் போட்டோ எடுத்தல், அழைப்பை ஏற்பது, அழைப்பை நிராகரிப்பது, அலாரத்தை கட்டுப்படுத்துவது என பல வேலைகளை செய்யும். அது மட்டுமல்ல பேஸ் அன்லாக் அம்சமும் இடம்பெற்றுள்ளது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

மற்ற அம்சங்களான டூயல்-சிம், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. நிறுவனத்தின் கூற்று படி 16 நாட்கள் ஸ்டாண்ட்-பை வழங்கும் 3000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

எ44 மற்றும் எ44-ப்ரோ: இவை இரண்டும் முதன் முதலாக ஸ்மார்ட் போன் வாங்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து தரமான வடிவமைப்பை கொண்டு களம் இறக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் அசத்தலான எல்ஜி கே9 அறிமுகம்.!

எ44 மற்றும் எ44-ப்ரோ ஆனது கைக்கு அடக்கமான 5.45 அங்குலம் கொண்ட 18:9 திரை விகிதம் மற்றும் மிக மெல்லிய பெசல் கொண்டுள்ளது. இந்த இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு செயல்படுகிறது.

How to check PF Balance in online (TAMIL)

மேலும் இவையிரண்டும் வேகம் மற்றும் மல்டி டாஸ்க் செயல்களை எளிதாக கையாள மீடியா-டெக் தயாரிப்பான எம்டி6737எம், 64 பிட் ஃக்வாட் கோர் செயலியை கொண்டுள்ளது. இந்த இரன்டு மாடல்களும் பல செயல்களை செய்யக்கூடிய கைரேகை அம்சத்துடன் வருகிறது. அது மட்டும் அல்லாமல் பைக் மோட் செயல்படுத்த ஸ்மார்ட் கி என பல்வேறு சிறப்புகளை கொண்டு வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
itel which is a rather new name in the mobile manufacturing industry has announced its new range of smartphones for the Indian market. The new launches are itel S42, A44 and A44 Pro. The trio comes with 18:9 full-screen display and fingerprint sensor. S42, the selfie phone features 13MP front and rear camera, runs on the latest Android.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X