ரூ. 3,899 விலையில் கிடைக்கும் முதல் 4G ஸ்மார்ட்போன் இது தான்.. ஜியோவின் ரூ.3000 சலுகையும் இருக்கு..

|

Itel நிறுவனம் இந்தியாவில் தனது ஐடெல் ஏ 23 ப்ரோ (Itel A23 Pro) ஸ்மார்ட்போனின் விலையை தற்பொழுது குறைப்பதாக அறிவித்துள்ளது. ஐடெல் நிறுவனத்தின் அறிவிப்புப் படி, நம்ப முடியாத மலிவு விலையில் கிடைக்கும் நாட்டின் முதல் 4 ஜி ஸ்மார்ட்போன் சாதனம் இது என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அதிரடி முடிவை ஐடெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து கூட்டுச் சேர்ந்த பின் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Itel A23 Pro ஸ்மார்ட்போனை மலிவு விலையில் எப்போ வாங்கலாம்?

Itel A23 Pro ஸ்மார்ட்போனை மலிவு விலையில் எப்போ வாங்கலாம்?

இது பளபளப்பான கிரேடியன்ட் டோன் பேக் கலர் பூச்சுடன் இரண்டு வண்ண விருப்பங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த மலிவு விலை Itel A23 Pro ஸ்மார்ட்போன் இப்போது சஃபையர் ப்ளூ மற்றும் லேக் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ஜூன் 1 ஆம் தேதி முதல் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்ஸ், மைஜியோ ஸ்டோர்ஸ், Reliancedigital.in மற்றும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகளில் வாங்குவதற்குக் கிடைக்கும்.

ரூ. 3,899 விலையில் கிடைக்கும் முதல் 4G சாதனம்

ரூ. 3,899 விலையில் கிடைக்கும் முதல் 4G சாதனம்

ஜியோவில் உள்ள ஐடெல் ஏ 23 ப்ரோ வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ. 3,899 விலையில் கிடைக்கிறது. இந்த சாதனத்தை வாங்கும் ஜியோ பயனர்களுக்கு ரூ .3,000 மதிப்புள்ள சலுகைகள் கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குதாரர்களிடமிருந்து ரூ .3,000 மதிப்புள்ள வவுச்சர்கள், ரூ .249 மற்றும் அதற்கு மேல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கிடைக்கும் நன்மைகளும் இதில் அடங்கும். இந்த சலுகை புதிய மற்றும் ஏற்கனவே உள்ள ஜியோ சந்தாதாரர்களுக்குப் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 8,999 விலையில் புது ஸ்மார்ட் டிவி வேண்டுமா? அப்போ இதை உடனே பண்ணுங்க..ரூ. 8,999 விலையில் புது ஸ்மார்ட் டிவி வேண்டுமா? அப்போ இதை உடனே பண்ணுங்க..

4ஜி உடன் இணைக்க நல்ல வாய்ப்பு

4ஜி உடன் இணைக்க நல்ல வாய்ப்பு

பியூச்சர் தொலைப்பேசிகளிலிருந்து மேம்படுத்த விரும்பும் நுகர்வோருக்கான முதல் மலிவு விலை சாதனமாக இந்த ஐடெல் ஏ 23 ப்ரோ இருக்கும் என்று தெரிகிறது. இது 4ஜி உடன் இணைக்கப்படாத வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு உதவும். அதேபோல், டிஜிட்டல் பொருளாதாரமாக உருவெடுக்கும் இந்தியாவின் கனவை ஊக்குவிக்க நாடு முழுவதும் சில்லறை மற்றும் விநியோகத்தில் அதன் பலத்தை இது நிரூபிக்கும் என்று ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.

ஐடெல் ஏ 23 ப்ரோ சிறப்பம்சம்

ஐடெல் ஏ 23 ப்ரோ சிறப்பம்சம்

இந்த ஐடெல் ஏ 23 ப்ரோ ஸ்மார்ட்போன் 5.0' இன்ச் பிரகாசமான டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 480 x 854 பிக்சல்கள் தெளிவுத்திறன் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 (கோ பதிப்பு) இல் இயங்குகிறது. இந்த சாதனம் குவாட் கோர், 1.4 ஜிகாஹெர்ட்ஸ் சிப்செட் மூலம் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது எஸ்டி கார்டு அம்சத்தையும் ஆதரிக்கிறது. ஐடெல் A23 Pro ஸ்மார்ட்போன் 2400 mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?

2 சிம் கார்டில் ஒன்று இப்படி மட்டும் தான் செயல்படும்

2 சிம் கார்டில் ஒன்று இப்படி மட்டும் தான் செயல்படும்

கேமரா அம்சத்தைப் பொறுத்த வரையில், இந்த சாதனம் 2 மெகா பிக்சல் கொண்ட பின்புற கேமராவை மென்மையான ஃபிளாஷ் உடன் ஆதரிக்கிறது. முன்பக்கத்தில் விஜிஏ செல்பி கேமராவுடன் கொண்டுள்ளது. ஐடெல் ஏ 23 ப்ரோ சாதனம் 2 சிம் ஸ்லாட்டுகளுடன் வருகிறது. இதில் குறைந்தபட்சம் ஒரு ஸ்லாட் ஜியோ சிம் உடன் தரவு செயல்பாட்டிற்கு மட்டுமே கிடைக்கிறது. மற்ற ஸ்லாட் மற்ற ஆபரேட்டர்களுக்கு தரவு அல்லாத செயல்பாடுகளுக்குச் செயல்படுகிறது. இந்த சாதனம் ஸ்மார்ட் ஃபேஸ் அன்லாக் பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது

Best Mobiles in India

English summary
Itel partnership with Reliance Jio brings A23 Pro 4G smartphone at Rs 3899 in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X