9 ஆயிரம் விலையில் ஐபோன் லுக்.. தீயாய் இருக்க போகும் விற்பனை.. இலவசமா இது வேற.. யாரு தான் வேணாம் சொல்லுவா?
ஐடெல் (Itel) தனது சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களான ஐடெல் எஸ்23 பிளஸ் (Itel S23+) மற்றும் ஐடெல் பி55 5ஜி (Itel P55 5G) என்ற 2 ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இவை மலிவு விலையில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதில் ஒரு ஸ்மார்ட்போன் மலிவு விலையில் 5ஜி இணைப்பை வழங்குகிறது. மற்றொரு ஸ்மார்ட்போன் மாடல் 4ஜி இணைப்பை ஐபோன் லுக் உடன் மலிவு விலையில் வழங்கி அசத்தியுள்ளது. சரி, இவற்றில் எந்த மாடல் போன் என்ன அம்சத்துடன், என்ன விலையில், என்ன இலவச நன்மையோடு வருகிறது என்று பார்க்கலாமா? வாங்க.. Itel P55 5G ஆனது 5G இணைப்பை வெறும் ரூ. 9,999 விலை முதல் வழங்குகிறது.

மறுபுறம், ஐடெல் S23+ ஆனது 3D வளைந்த AMOLED டிஸ்பிளேவுடன், அட்டகாசமான டிஸைனுடன் வெறும் ரூ. 13,999 விலையில் கூடுதல் இலவச நன்மைகளுடன் வருகிறது. இலவச நன்மைகளை பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன்கள் 2 வருட உத்தரவாதத்தையும், வாங்கிய 100 நாட்களுக்குள் இலவச டிஸ்பிளே மாற்றத்தையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐடெல் பி55 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்: (Itel P55 5G Specifications)
- 6.6-இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) HD+ டிஸ்ப்ளே, 90Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம், 180Hz டச் சாம்பிளிங் வீதம்
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட்
- 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் 4ஜிபி ரேம்
- 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் 6ஜிபி ரேம் மாடல்
- மைக்ரோ எஸ்டி மூலம் 1டிபி வரை எக்ஸ்பெண்டபிள் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 13
- டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
- 50MP + இரண்டாம் நிலை AI கேமரா, LED ஃபிளாஷ்
- 8MP முன்பக்க கேமரா
- 3.5மிமீ ஆடியோ ஜாக்
- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- 5G SA/NSA (10 5G பேண்ட்கள்), டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5.1, GPS, USB டைப்-சி
- 18W ஃபாஸ்ட் சார்ஜிங்
- 5000mAh பேட்டரி

ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்: (Itel S23+ Specifications)
- 6.78-இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) FHD+ 3D வளைந்த AMOLED டிஸ்ப்ளே
- 60Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் 240Hz டச் சாம்பிளிங் வீதம், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
- 99% DCI-P3 வண்ண வரம்பு, கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
- ஆக்டா கோர் UNISOC T616 சிப்செட்
- 8ஜிபி LPDDR4X ரேம், 128ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி வரை கூடுதல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 13
- டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
- 50MP + LED பிளாஷ் + இரண்டாம் நிலை AI கேமரா
- 8MP முன்பக்க கேமரா
- டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5.1, GPS, USB Type-C, NFC
- 18W ஃபாஸ்ட் சார்ஜிங்
- 5000mAh பேட்டரி
Itel P55 5G நீலம் மற்றும் பச்சை நிறங்களின் விலை Amazon.in மூலம் அக்டோபர் 4 முதல் கிடைக்கும். Itel S23+ ஆனது ஏலமெண்டல் ப்ளூ (Elemental Blue) மற்றும் லேக் சியான் (Lake Cyan) நிறங்களில் வருகிறது. இதன் விலை ரூ. 13,999 மற்றும் Amazon.in மூலம் அக்டோபர் 6 முதல் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








