Home
News

எது! 8000 ரூபாய் Mobile-ல 6000mah பேட்டரியா? பாஸ்ட் சார்ஜிங் வேற இருக்கா? Itel-லின் புது போன்!

Itel என்பது மூன்று டிரான்சிஷன் (Transsion) பிராண்டுகளில் ஒன்றாகும். இது அதன் சகோதர பிராண்டுகளான டெக்னோ மற்றும் இன்பினிக்ஸ் போன்று பிரபலமடையவில்லை. ஏனெனில், இது மலிவான ஸ்மார்ட்போன் சாதனங்களை மட்டுமே அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது.

இருப்பினும், இந்தியர்களால் அதிகம் புகழப்பட்ட ஒரு மலிவு விலை பிராண்ட் என்றால் அது இந்த Itel நிறுவனம் மட்டுமே. ரூ.5000 முதல் ரூ.8000 விலைக்குள் கிடைக்கும் சிறந்த மலிவு விலை ஸ்மார்ட் போன் சாதனங்களை அறிமுகம் செய்து, மக்கள் மத்தியில் தனக்கென்ற ஒரு இடத்தை பிடித்தது இந்த நிறுவனம் மட்டுமே என்று சொன்னால் அது மிகையாகாது.

எது! 8000 ரூபாய் Mobile-ல 6000mah பேட்டரியா? பாஸ்ட் சார்ஜிங் இருக்கா?

பிரீமியம் மற்றும் மிட் ரேஞ் ஸ்மார்ட் போன் பிரிவில் இந்த பிராண்ட் தனக்கென்ற ஒரு தனி இடத்தை பிடிக்காவிட்டாலும், மலிவு விலை ஸ்மார்ட் போன் பிரிவில் தனக்கென்ற ஒரு அடையாளத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. மலிவு விலை சாதனங்களை விற்கும் பொருட்களுக்கு மிகப்பெரிய சந்தைப் பங்கை இந்த பிராண்ட் கொண்டுள்ளது.

இத்தகைய மலிவு விலை ஸ்மார்ட் போன் பிராண்டு ஆனது, இப்போது இந்தியாவில் மற்றொரு நுழைவு-நிலை ஸ்மார்ட்போன் மாடலை வெளியிடத் தயாராகி வருகிறது என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் Itel ஸ்மார்ட் போன் சாதனமும் அதே ரூ.8000 விலை பிரிவிற்குள் இடம் பெரும் என்று அறிவதில் நமக்கு ஆச்சரியமில்லை. ஏனெனில். நிறுவனம் இதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளது.

எது! 8000 ரூபாய் Mobile-ல 6000mah பேட்டரியா? பாஸ்ட் சார்ஜிங் இருக்கா?

இந்தியாவில் ₹8,000 மதிப்பிலான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சாதனம் 6,000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், இது 18W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டிருக்கும் என்று தகவல்கள் குறிப்பிடுகிறது. எனவே, இந்த விலை பிரிவில் மேற்கூறிய பேட்டரி மற்றும் சார்ஜிங் விவரக்குறிப்புகள் கொண்ட முதல் ஸ்மார்ட் போன் சாதனம் இதுவாகும்.

ஆம், மக்களே ரூ.8000 விலை பிரிவில், இது வரை இந்தியாவில் 18W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் 6000mah பேட்டரி உடன் ஒரு ஸ்மார்ட் போன் சாதனம் கூட வாங்க கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஸ்மார்ட் போன் சாதனம் பற்றி பேசுகையில், இது 6.6' இன்ச் கொண்ட எச்டி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

எது! 8000 ரூபாய் Mobile-ல 6000mah பேட்டரியா? பாஸ்ட் சார்ஜிங் இருக்கா?

மற்ற அம்சங்களைப் பற்றிப் பார்க்கையில், இந்த புதிய Itel சாதனமானது, இந்தியாவில் நிறுவனத்தால் இதற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட Itel A60 ஸ்மார்ட் போனின் மேம்பட்ட மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் 2ஜிபி + 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒற்றை வேரியண்ட் மாடலாக மட்டுமே வெளிவருகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், Itel A60 இந்தியாவில் ரூ. 5,999 விலையில் கிடைக்கிறது.

இந்த விலையில், நிறுவனம் உங்களுக்கு 6.6' இன்ச் HD டிஸ்ப்ளே, 5,000mAh பேட்டரி, 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா, பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், Unisoc SC9832E சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 12 Go எடிஷன் பதிப்பு ஆகியவற்றை வழங்குகிறது. Itel அறிமுகம் செய்யவிருக்கும் புதிய மாடலின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த அறியப்படாத ஐடெல் ஸ்மார்ட்போன் இந்த வார இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை நாம் சற்று காத்திருக்க வேண்டியதுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Itel New Mobile Phone Could Launch Under Rs 8000 With 18W Fast Charging and 6000mah Battery
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X