சுவரில் திரை மாதிரி இருக்கும்: ஐடெல் அறிமுகம் செய்த 4 மாடல் ஸ்மார்ட் டிவிகள்- விலை ரொம்ப மலிவு!

|

ஐடெல் நிறுவனம் G3230IE, G4330IE, G4334IE, G5534IE ஆகிய நான்கு ஸ்மார்ட்டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்டிவிகள் ஆண்ட்ராய்டு ஓஎஸ், டால்பி ஆடியோ உள்ளிட்ட ஆதரவுகளோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் டிவி நிறுவனங்கள் உட்பட அனைத்து மின்னணு நிறுவனங்களும் சிறந்த அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் டிவிகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதில் பெரும்பாலான ஸ்மார்ட்டிவிகள் பட்ஜெட் விலையிலேயே அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

சுவரில் திரை மாதிரி இருக்கும்: ஐடெல் அறிமுகம் செய்த 4 ஸ்மார்ட் டிவிகள்

ஸ்மார்ட் டிவி வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் சேவையால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். பட்ஜெட் விலையிலான சிறந்த ஸ்மார்ட் டிவிகள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்டிவி தேவைகள் பல்வேறு அணுகலுக்கும் பிரதானமாக்கப்பட்டு வருகிறது, குறிப்பாக கொரோனா பரவிய காலம் முதல் பல்வேறு திரைப்படங்களும், தொடர்களும் ஓடிடியில் வெளியானது. இதை பார்ப்பதற்கும் ஓடிடி அணுகலுக்கும் ஸ்மார்ட்டிவி தேவை என்பது அவசியம்.

ஐடெல் நிறுவனம் G3230IE, G4330IE மாடல் ஸ்மார்ட்டிவிகள் 170 டிகிரி கோணங்கள், G4334IE, G5534IE மாடல் ஸ்மார்ட்டிவிகள் 178 டிகிரி கோணங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்டிவிகள் ஆண்ட்ராய்டு ஓஎஸ், டால்பி ஆடியோ உள்ளிட்ட ஆதரவுகளோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சுவரில் திரை மாதிரி இருக்கும்: ஐடெல் அறிமுகம் செய்த 4 ஸ்மார்ட் டிவிகள்

ஐடெல் நிறுவனம் ஜி தொடர் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அறிமுகமாகியிருக்கும் ஐடெல் ஜி தொடர் ஸ்மார்ட்டிவிகள் ஆண்ட்ராய்டு ஓஎஸ், டால்பி ஆடியோ ஆதரவோடு வருகிறது. Itel G3230IE, Itel G4330IE, Itel G4334IE மற்றும் Itel G5534IE ஆகிய நான்கு மாடல்கள் ஸ்மார்ட்டிவிகளை அறிமுகம் செய்துள்ளது.

ஐடெல் ஜி தொடர் ஸ்மார்ட்டிவிகள் இந்தியாவில் 32 இன்ச் மற்றும் 55 இன்ச் ஆகிய வரம்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஸ்மார்ட்டிவி மாடல்களின் பெயர்கள் குறிப்பிடுவது போல் ஐடெல் ஜி3230ஐஇ ஸ்மார்ட்டிவி ஆனது 32 இன்ச் அளவோடு வருகிறது. அதோடு ஐடெல் ஜி4330ஐஇ மற்றும் ஐடெல் ஜி4334ஐஇ ஆனது 43 இன்ச் அளவோடு வருகிறது. மேலும் ஐடெல் ஜி5534ஐஇ மாடல் ஸ்மார்ட்டிவி ஆனது 55 இன்ச் அளவோடு வருகிறது.

சுவரில் திரை மாதிரி இருக்கும்: ஐடெல் அறிமுகம் செய்த 4 ஸ்மார்ட் டிவிகள்

ஐடெல் ஸ்மார்ட்டிவியானது பிரேம்லெஸ் வடிவமைப்போடு வருகிறது. மேலும் இந்த நான்கு ஸ்மார்ட்டிவி மாடல்களும் 24 வாட்ஸ் அவுட்புட் ஸ்பீக்கர்கள் மற்றும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. ஜி தொடர் ஸ்மார்ட்டிவி மாடல்கள் வாய்ஸ் கட்டுபாடு செயல்திறன், ப்ளூடூத் ரிமோட் ஆகியவைகளோடு வழங்குகிறது.

ஐடெல் ஜி தொடர் ஸ்மார்ட்டிவிகள் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம். ஐடெல் ஜி தொடரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐடெல் ஜி3230ஐஇ விலை ரூ.16,999 ஆகவும் ஐடெல் ஜி4330ஐஇ மாடல் விலை ரூ.28,499 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் இரண்டு ஸ்மார்ட்டிவிகளின் விலையும் தற்போதுவரை நிர்ணயம் செய்யவில்லை. இந்த ஸ்மார்ட்டிவிகள் ஆஃப்லைன் கடைகளிலும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளன.

ஐடெல் ஜி தொடர் ஸ்மார்ட்டிவிகளின் விவரக்குறிப்புகளை பார்க்கலாம், ஐடெல் ஜி தொடரின் கீழ் ஒரு 32 இன்ச் ஸ்மார்ட்டிவியும், இரண்டு 43 இன்ச் ஸ்மார்ட்டிவியும், ஒரு 55 அங்குல ஸ்மார்ட்டிவியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஐடெல் ஜி3230ஐஇ ஸ்மார்ட்டிவியானது 32 இன்ச் அளவில் எச்டி ஆதரவோடு 1366x768 பிக்சல் தீர்மானத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 3000:1 காண்ட்ராஸ்ட் ரேசியோ, 170 டிகிர கோண பார்வையுடன் ஆண்ட்ராய்டு 9 ஆதரவோடு வருகிறது.

ஐடெல் ஜி43344ஐஇ மாடல் குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்டிவியானது 43 இன்ச் அளவோடு வருகிறது. இது 4கே ஆதரவு, 3840x2160 பிக்சல்கள் தீர்மானத்தோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்டிவி 178 டிகிரி கோண பார்வையோடு வருகிறது. இந்த ஸ்மார்டிவியானது ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு வருகிறது. மேலும் ஐடெல் ஜி5534ஐஇ ஸ்மார்ட்டிவியானது மிகப்பெரிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவி 55 இன்ச் அளவு, ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு வருகிறது. 3840x2160 பிக்சல்கள் தீர்மானம், 1200:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, 178 டிகிரி கோண பார்வையோடு வருகிறது. இந்த அனைத்து ஸ்மார்ட்டிவிகளும் 400 நிட்ஸ் உச்ச பிரகாசத்தோடு, பிரேம்லெஸ் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

சுவரில் திரை மாதிரி இருக்கும்: ஐடெல் அறிமுகம் செய்த 4 ஸ்மார்ட் டிவிகள்

இதில் இரட்டை 12 வாட்ஸ் ஸ்பீக்கர் உள்ளமைவோடு 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை டால்பி ஆடியோ ஆதரவோடு கொண்டுள்ளது. இது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கிறது, மேலும் இந்த ஸ்மார்ட்டிவி கூகுள் ப்ளே ஸ்டோர், கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் க்ரோம்கேஸ்ட் அணுகலோடு வருகிறது. ஜி தொடரில் நான்கு மாடல்கள் ஸ்மார்ட்டிவிகளை வாய்ஸ் கட்டுபாட்டுடன் ப்ளூடூத் ரிமோட் அணுகலை கொண்டிருக்கிறது.

மேலும் ஐடெல் ஜி3230ஐஇ, ஐடெல் ஜி4330ஐஇ ஆகிய ஸ்மார்ட்டிவிகள் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. மேலும் ஐடெல் ஜி43344ஐஇ, ஐடெல் ஜி5534ஐஇ ஆகிய ஸ்மார்ட்டிவிகள் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது.

இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில், ஐடெல் ஜி3230ஐஇ, ஐடெல் ஜி4330ஐஇ ஆகிய மாடல்கள் வைஃபை, ப்ளூடூத், இரண்டு எச்டிஎம்ஐ போர்ட்கள், ஒரு யூஎஸ்பி போர்ட், இதர்நெட் போர்ட் ஆகியவைகளுடன் வருகிறது. அதேபோல் ஐடெல் ஜி4334ஐஇ, ஐடெல் ஜி5534ஐஇ ஆகிய ஸ்மார்ட்டிவிகள் மூன்று எச்டிஎம்ஐ போர்ட், மினி ஏவி, ஒய்பிபிஆர் போர்ட் மற்றும் இரண்டு யூஎஸ்பி போர்ட்கள் ஆகிய ஆதரவுகளோடு வருகிறது.

Best Mobiles in India

English summary
Itel Launched its Four New Model SmartTV's at Variable Sizes

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X