யாருயா சொன்னா இது மொக்கை பிராண்ட்னு.! மக்கள் திரும்ப-திரும்ப வாங்கிய பிராண்ட் இதானாம்.!

|

மலிவு விலை ஸ்மார்ட்போன்கள் (Low price mobile phones) மற்றும் பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன்களின் (Budget segment smartphones) முக்கிய வியாபார சந்தையாக இந்தியா திகழ்கிறது. பியூச்சர் போன் (Feature phone) மற்றும் நுழைவு-நிலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை (Android smartphone) இந்தியாவில் தான் மக்கள் அதிகமாக வாங்கி பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக, ரூ. 8000 விலைக்குள் விற்பனையாகும் போன்கள் இந்தியாவில் தான் அதிகம் என்கிறது கணக்கெடுப்பு. கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் (Counterpoint Research) இன் சமீபத்திய நுகர்வோர் கணக்கெடுப்பின் படி, ஸ்மார்ட்போன் பிராண்ட் ஐடெல் (itel), இந்தியாவில் 8,000 ரூபாய்க்குக் குறைவான விலைப் பிரிவில் உள்ள முதல் மூன்று சிறந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருயா சொன்னா இது மொக்கை பிராண்ட்னு.! ரிப்பீட்ல போன் வாங்கிய மக்கள்.!

ரூ.8,000 விலைக்குக் கீழ் உள்ள மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் (Famous smartphone brand under Rs 8000) பட்டியலில் சாம்சங் (Samsung) முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து உள்நாட்டு லாவா (Lava) 2வது இடத்தில் உள்ளது. இறுதியாகத் தலைசிறந்த மலிவு விலை மொபைல் போன் பிரிவில் (low price mobiles) itel நிறுவனம் 3வது இடத்தில் உள்ளது. 3வது இடத்தில் இருக்கும் ஒரு பிராண்டை பற்றி நாம் இங்குப் பேசிக்கொண்டிருப்பதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளது. அதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

மக்களிடம் நடத்தப்பட்ட நேரடி கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 55 சதவீதம் பேர், மொபைல் சாதனத்தை முதலில் சொந்தமாக வைத்திருக்கத் தொடங்கிய போது, ​​இவர்கள் ஐடெல் சாதனத்தை வாங்கியவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களுடைய முதல் அனுபவத்திற்குப் பிறகு இவர்கள் மீண்டும்-மீண்டும் itel தயாரிப்பையே வாங்கியதாக அறிக்கை குறிப்பிடுகிறது. ஆம், ஒருமுறை யூஸ் செய்த பயனர்களின் நம்பிக்கையை இந்த பிராண்ட் பெற்று, மறுபடியும் அதே பிராண்டில் தயாரிப்புகளை வாங்கும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் ரூ.8,000க்கு கீழ் உள்ள முதல் 3 பிராண்டுகளில் ஐடெல் இடம்பிடித்திருப்பது உண்மையிலேயே பெரிய விஷயம் தான். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் ஐடெல் பிராண்ட் நம்பிக்கை, விலை, விற்பனைக்குப் பிந்தைய சேவைகள், தோற்றம் மற்றும் நீடித்து நிலைத்திருக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஐடலைத் தங்களுக்கு விருப்பமான பிராண்டாக மதிப்பிட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

ரூ. 8,000 துணை விலைப் பிரிவு ஒரு முக்கியமான வகையாகும். காரணம், இந்த பிரிவில் 370 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பியூச்சர் போன்கள் மற்றும் நுழைவு-நிலை ஸ்மார்ட்போன்களை (Entry-level smartphones) நம்பியுள்ளனர். பெரும்பாலான முதல் முறை மொபைல் போன் பயனர்கள் தங்கள் டிஜிட்டல் (Digital) பயணத்தைத் தொடங்கும் ஒரு முக்கியமான பிரிவு இதுவாகும்.

இந்த விலைப் பிரிவைச் சேர்ந்த பயனர்களுக்கு பணத்திற்கான மதிப்பு, அம்சங்கள் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மொபைல் பிராண்டுகளின் ஆதரவு தேவைப்படுகிறது என்று கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்சின் ஆய்வாளர் ஆருஷி சாவ்லா ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இந்த சமீபத்திய அறிக்கையின் படி, தற்போதுள்ள ஐடெல் நுகர்வோரில் குறைந்தபட்சம் 76 சதவீதம் பேர் தயாரிப்பு தொடர்பான ஒட்டுமொத்த அனுபவங்களின் அடிப்படையில் மற்றவர்களுக்கு பிராண்டை பரிந்துரைக்கத் தயாராக உள்ளனர் (Most recommendable mobile phone brand) என்று கூறியுள்ளனர்.

சந்தையில் ரூ. 8,000 (சுமார் $100) விலை வகையைச் சேர்ந்த பல்வேறு வகையான மொபைல் வாடிக்கையாளர்களுடன் ஆஃப்லைன் நேருக்கு நேர் நேர்காணல்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மொத்த மாதிரி அளவு 1,575 உடன் ஒதுக்கீட்டு மாதிரி முறையைப் பயன்படுத்தி பதில்கள் சேகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியாக இருந்தாலும், சாம்சங், லாவா போன்ற பிராண்டுகளை போல ஐடெல் நிறுவனமும் மக்கள் மனதில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துவிட்டது.

Best Mobiles in India

English summary
itel Is The Most Recommendable Smartphone Brand In India Under Rs 8000 Price Segment

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X