யாரும் எதிர்பார்க்கல.. இப்படியொரு Smartwatch-ஐ நீங்களே எதிர்பார்த்திருக்கமாட்டீங்க.. என்ன மாடல்? என்ன விலை?
யாருமே எதிர்பார்க்காத தருணத்தில், யாரும் எதிர்பார்த்திடாத ஒரு பிராண்டில் இருந்து, புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம் ஐடெல் (itel) பிராண்டில் இருந்து வெளிவருகிறது. இது பல அம்சங்களை பேக் செய்துள்ளது.
ஐடெல் ஐகான் 2 (itel Icon 2): ஐடெல் (itel) நிறுவனம் இப்போது ஐடெல் ஐகான் 2 (itel Icon 2) என்ற ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை இந்திய ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது ஐடெல் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட்வாட்ச் சாதனமாகும். இதன் வெளியீட்டை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த புதிய ஐடெல் ஐகான் 2 (itel Icon 2) ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விளம்பர பக்கம் அமேசானில் லைவ் செய்யப்பட்டுள்ளது.

itel Icon 2: இந்த புதிய ஐடெல் ஐகான் 2 (itel Icon 2) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட முந்தைய மாடலான ஐடெல் ஐகான் (itel Icon) ஸ்மார்ட்வாட்சின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வெளிவர இருக்கிறது. புதிய ஐடெல் ஐகான் 2 (itel Icon 2) ஸ்மார்ட்வாட்ச் ஆனது 550 nits பிரைட்னஸ் உடன் வெளிவரும் என்று தகவல்கள் குறிப்பிடுகிறது.
ரோடேடிங் கிரௌன் பட்டன்: இந்த புதிய ஐடெல் ஐகான் 2 (itel Icon 2) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் சதுர வடிவ 1.83" இன்ச் அளவு கொண்ட வளைந்த கர்வுடு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதில் ஈஸி நேவிகேஷன் அம்சத்தை ஆதரிக்க, ரோடேடிங் கிரௌன் பட்டன் கூட வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஐடெல் ஐகான் 2 (itel Icon 2) ஸ்மார்ட் வாட்ச் சாதனமானது தனிப்பயனாக்கப்பட்ட 150 -க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ் முகங்களை வழங்குகிறது.
புளூடூத் வாய்ஸ் காலிங்: ஐடெல் ஐகான் 2 (itel Icon 2) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் லேட்டஸ்ட் புளூடூத் v5.3 அம்சத்துடன் சிறப்பாக செயல்படுகிறது. இந்த ஐடெல் ஐகான் 2 (itel Icon 2) ஸ்மார்ட்வாட்ச் புளூடூத் வாய்ஸ் காலிங் அம்சத்தை மிகவும் துல்லியமான ஆடியோவுடன் வழங்குகிறது. அதேபோல், இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் குயிக் கான்டக்ட்ஸ், டயல் பேட் மற்றும் கால் ஹிஸ்டோரி போன்ற அம்சங்களையும் ஆதரிக்கிறது.

ஆரோக்கிய கண்காணிப்பு: இந்த ஐடெல் ஐகான் 2 (itel Icon 2) ஸ்மார்ட்வாட்ச் 30 நாட்கள் வரை நீடிக்கும் ஸ்டாண்ட்பை பேட்டரி ஆயுளை வழங்குகிறது. இதில் SpO2, இதயத் துடிப்பு, தூக்கம் மற்றும் பெண் ஆரோக்கியத்திற்கான தொடர்ச்சியான ஆரோக்கிய கண்காணிப்பு உட்பட 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட் அம்சங்கள் கூட இடம்பெற்றுள்ளது.
AI வாய்ஸ் அசிஸ்டன்ஸ்: இது AI வாய்ஸ் அசிஸ்டன்ஸ் ஆதரவையும் கொண்டுள்ளது. இது கேமரா, மியூசிக் கண்ட்ரோல் மற்றும் IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் அம்சத்தை கொண்டுள்ளது. கூடுதலாக, இந்த ஸ்மார்ட்வாட்ச் பாக்ஸ் உடன் ஒரு இலவச வாட்ச் ஸ்ட்ராப் கிடைக்கிறது. ஐடெல் ஐகான் 2 ஸ்மார்ட்வாட்ச் கருப்பு, நீலம் மற்றும் ரோஸ் கோல்ட் வண்ண விருப்பங்களில் மார்ச் 5 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
விலை: விவரங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், இதன் விலை ரூ.2000-க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது Amazon.in இல் வாங்குவதற்கு கிடைக்கும். ஐடெல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்மார்ட்வாட்ச்சின் டீஸர் படங்களை இப்போது நீங்கள் பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications








