வெறும் ரூ.6000 விலையில்.. 12GB ரேம்.. 2TB மெமரி.. டூயல் கேமரா.. 5000mAh பேட்டரி.. மிரட்டிவிட்ட விற்பனை..
ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐடெல் A70 (itel A70) ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கிவிட்டது. ரூ.6000 விலை புள்ளியில் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் ஒரே ஒரு ஸ்மார்ட்போன் சாதனம் இது மட்டுமே. இதன் விற்பனை இப்போது துவங்கிவிட்டது.
itel A70 ஸ்மார்ட்போனின் மாஸ் விற்பனை இந்தியாவில் துவங்கிவிட்டது. நீங்கள் புது மொபைல் போன் (Mobile phone) வாங்க வேண்டுமென்ற எண்ணத்தில் இருந்தால், அல்லது புது போன் வாங்கும் ஐடியாவே இல்லையென்றால் கூட, இந்த போனை வாங்க உடனே பிளான் செய்துகொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு மெயின் போனாகவோ அல்லது சப்ஸ்டிடியூட் போனாகவோ (Substitute phone) இந்த ஐடெல் A70 (itel A70) ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்கலாம்.

காரணம், இது வெறும் ரூ.6,299 விலையில் 256GB மாஸ் ஸ்டோரேஜ் உடன் 12GB ரேம் வசதியை வழங்குகிறது. இந்த விலை பிரிவில், இத்தகைய ஸ்டோரேஜ் நன்மையுடன் இந்தியாவில் வாங்க கிடைக்கும் ஒரே ஸ்மார்ட்போன் மாடல் இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இது 4GB மெயின் ரேம் + 8GB மெமரி பியூஷன் (Memory Fusion) கொண்ட என்ட்ரி லெவல் ஸ்மார்ட்ஃபோன் ஆகும்.
ஐடெல் A70 இந்திய விற்பனை (itel A70 Sale in India):
இந்த ஐடெல் A70 (itel A70) ஸ்மார்ட்போன் சாதனம் ரூ.6,299 விலை முதல் ரூ.7,299 வரை மூன்று விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்ச விபரம் இதோ. இந்த ஐடெல் A70 ஸ்மார்ட்போன் சாதனம் 6.6" இன்ச் கொண்ட 720 x 1612 பிக்சல்கள் உடைய எச்டி பிளஸ் (HD+) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh rate) அம்சத்தை ஆதரிக்கிறது.
இது 120Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch sampling rate) சப்போர்ட் உடன் வருகிறது. இது 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (500 nits peak brightness) வருகிறது. அதுமட்டுமல்லாமல் டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சரை கொண்டிருக்கிறது. இது ஐபோனில் காணப்படும் அம்சம் போன்றது. ஐடெல் A70 (itel A70) 4ஜிபி ரேம் + 64ஜிபி, 4ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ்ஜில் வருகிறது.

இந்த ஐடெல் A70 (itel A70) ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் (Android 13 Go Edition) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி603 1 என்எம் (Octa Core Unisoc T603 12nm) சிப்செட் உடன் இயங்குகிறது. இத்துடன் கூடுதல் ஸ்டோரேஜ் அம்சமாக மைக்ரோ எஸ்டி (microSD) ஸ்லாட் வழியாக 2TB வரையிலான ஸ்டோரேஜ்ஜை இது ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐடெல் A70 இந்திய விலை (itel A70 Price in India):
இந்த ஐடெல் A70 (itel A70) போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, 13 எம்பி மெயின் கேமரா + AI லென்ஸ் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. இது 5000mAh பேட்டரியை (Battery) பேக் செய்கிறது. இதன் விலை பற்றி பேசுகையில், ஐடெல் ஏ70 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.6299 ஆக துவங்குகிறது.
அடுத்த மாடல், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரூ.6799 விலையிலும், 4 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.7,299 விலையிலும் வாங்க கிடைக்கிறது. இது பிரில்லியண்ட் கோல்டு (Brilliant Gold), ஸ்டைலிஷ் பிளாக் (Stylish Black), ஃபீல்ட் கிரீன் (Field Green) மற்றும் அஸூர் ப்ளூ (Azure Blue) ஆகிய 4 நிறங்களில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








