Home
News

வெறித்தனம்.. வெறித்தனம்.. ரூ.10,000 விலைக்கு இப்படி ஒரு போனா? கம்மி விலையில் பிரமாதமான அம்சம்..

இந்தியா போன்ற வியாபார சந்தைகளில் மலிவு விலை ஸ்மார்ட்போன்களுக்கு தான் மவுசு அதிகமாகவுள்ளது. கம்மி விலை போன்களை தரமான அம்சங்களுடன் அறிமுகம் செய்வதை சில தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களின் வியாபார யூகித்தியாகவே கொண்டுள்ளன.

அப்படி, இதே வழியை பின்பற்றி இந்தியாவில் தனக்கென்று ஒரு நிரந்தர இடத்தை மலிவு விலை ஸ்மார்ட்போன் செக்மென்ட்டில் இடம்பிடித்துள்ள நிறுவனம் தான் ஐடெல் (Itel) நிறுவனம். மலிவு விலையில் தொடர்ந்து ஐடெல் நிறுவனம் ஸ்மார்ட்போன், பியுச்சர் போன், இயர்போன்ஸ் என்று பல தயாரிப்பு சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது.

வெறித்தனம்.. வெறித்தனம்.. ரூ.10,000 விலைக்கு இப்படி ஒரு போனா?

சமீபத்தில் ஐடெல் (iTel) நிறுவனம் இந்தியாவில் ஐடெல் டி1 ப்ரோ இயர்போன்ஸ்களை (iTel T1 Pro TWS earphones) அறிமுகப்படுத்தியது. இந்த பிராண்ட் கடந்த மாதம் நாட்டில் ஐடெல் எஸ்23 பிளஸ் (iTel S23+) மற்றும் ஐடெல் பி55 (iTel P55) என்ற ஸ்மார்ட்போன்களை அறிவித்தது. இப்போது, ஐடெல் நிறுவனம் மீண்டும் ஒரு மலிவு விலை ஸ்மார்ட்போனில் வேலை செய்வதாகத் தெரிகிறது.

இது ஐடெல் ஏ70 (​​iTel A70) எனப்படும் பட்ஜெட் சாதனமாக இருக்கும் என்று டெக் வட்டார லீக் தகவல்கள் குறிப்பிடுகிறது. வரவிருக்கும் ஸ்மார்ட்போன் சாதனம் ஆனது கூகிள் பிளே கன்சோல் (Google Play Console) பட்டியலில் அதன் ரெண்டர் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தும் விதமாக காணப்பட்டுள்ளது. சரி, இப்போது இணையத்தில் காணப்பட்டுள்ள இந்த கம்மி விலை ஸ்மார்ட்போனை பற்றி இப்போது பார்க்கலாம்.

ஐடெல் ஏ70 (iTel A70) ஆனது கூகுள் பிளே (Google Play) கன்சோல் சான்றிதழ் இணையதளத்தில் A665L என்ற மாடல் எண்ணுடன் இந்த ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. வெளியான ரெண்டரின் படி, இந்த சாதனம் ஒரு வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. பவர் மற்றும் வால்யூம் ராக்கர் பட்டன்கள் வலது பக்கத்தில் அமைந்துள்ளன.

வெறித்தனம்.. வெறித்தனம்.. ரூ.10,000 விலைக்கு இப்படி ஒரு போனா?

இது 720 x 1,612 பிக்சல்கள் மற்றும் 320dpi டிஸ்பிளே அடர்த்தி கொண்ட டிஸ்ப்ளே ரெசல்யூஷனைக் கொண்டிருக்கும் என்று பட்டியல் வெளிப்படுத்துகிறது. வரவிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தின் ஹூட்டின் கீழ், ஸ்பிரேட்டிரம் டி603 (Spreadtrum T603 SoC) சிப்செட் உடன் பட்டியலிடப்பட்டுள்ளதாக கூகிள் கன்சோல் தகவல் குறிப்பிடுகிறது.

இதில் நான்கு கோர்ட்டெக்ஸ் ஏ55 (Cortex-A55) கோர்கள் 1.8GHz மற்றும் மற்றொரு நான்கு Cortex-A55 கோர்கள் கொண்ட 1.2GHz உடன் கூடிய பவர்விஆர் ஜிஇ8322 ஜிபியு ஆன்போர்டில் இருக்கும் என்று பட்டியல் காண்பிக்கிறது. கூகிள் ப்ளே கன்சோல் சான்றிதழின் படி, இந்த புதிய ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

கூகுள் பிளே கன்சோல் சான்றிதழானது iTel A70 இன் மற்ற விவரங்களை வெளிப்படுத்தவில்லை. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ரூ.10,000 விலை வரம்பில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரங்களில் கூடுதல் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது மக்களின் கவனத்தை நிச்சயமா ஈர்க்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

மற்ற செய்திகளில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஐடெல் எஸ்23+ (iTel S23+) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,000 விலைக் குறியின் கீழ் கர்வுடு டிஸ்பிளேயுடன் வருகிறது. இந்த விலையில் வளைந்த கர்வுடு டிஸ்பிளேவை வழங்கும் ஒரே சாதனம் இதுவாகும். அதேசமயம்ம், நிறுவனம் சமீபத்தில் ஐடெல் பி55 (iTel P55) என்ற சாதனத்தை ரூ.10,000 விலைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது 10 ஆயிரம் விலைக்கும் குறைவான விலையில் கிடைக்கும் 5G போன்னாக திகழ்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Itel A70 Render and Specification Details Leaked Google Play Console Site Itel P55 and Itel S23+ Goes On Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X