ஜனவரி 3: டக்கரான 2 போன் ரிலீஸ்.. ரூ.7000 விலை.. 2TB வரை மெமரி.. இந்தியாவின் பாஸ்ட் & ஸ்டோரேஜ் Mobile இதான்..
புது மொபைல் (Mobile) வாங்கும் ஐடியா இருந்தால், ஜனவரி 3, 2024 ஆம் தேதியை நீங்கள் மறக்கவே கூடாது. இந்த தேதியில் தான் ரூ.7000 விலை புள்ளியில், 2 பெஸ்ட் மலிவு விலை ஸ்மார்ட்போன் (Budget Mobile) சாதனங்கள் அறிமுகமாகவுள்ளது.
இந்தியாவில் வரும் ஜனவரி 3ம் தேதி, இரண்டு முன்னணி பிராண்டிலிருந்து, 2 வெவ்வேறு ஸ்மார்ட்போன் சாதனங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றது. இதில் ஒரு பட்ஜெட் விலை கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை ஐடெல் (itel) நிறுவனம் அறிமுகம் செய்கிறது. மற்றொரு ஸ்மார்ட்போன் மாடலை டெக்னோ (Tecno) ஸ்மார்ட்போன் பிராண்ட் அறிமுகம் செய்கிறது.

ஐடெல் (itel) நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் பட்டியலின் கீழ் புதிதாக ஐடெல் A70 (itel A70) என்ற ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்கிறது. ரூ.7000 விலை புள்ளியில் வாங்க கிடைக்கும் இந்தியாவின் முதல் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் (India's first 12GB RAM + 256GB ROM smartphone) கொண்ட சாதனம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐடெல் A70 (itel A70):
ரூ.7000 விலை புள்ளியில் இனி ஸ்டோரேஜ் பற்றிய கவலையே இல்லாமல் மக்கள் ஒரு சிறந்த ஸ்மார்ட்போன் மாடலை வாங்கலாம். உண்மையை சொல்ல போனால், இந்த ஐடெல் A70 ஸ்மார்ட்போன் சாதனம் 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. கூடுதலாக, இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 2TB வரையிலான எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவையும் வழங்குகிறது என்பது வியப்பு.
இந்த ஸ்மார்ட்போன் 6.6HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது முன்பக்கத்தில் 8MP செல்பி கேமரா மற்றும் பின்பக்கத்தில் 13MP HDR கேமராவை கொண்டுள்ளது. இது 5000mAh பேட்டரி அம்சத்துடன் வருகிறது. மறுகையில், டெக்னோ அறிமுகம் செய்யவிருக்கும் டெக்னோ பாப் 8 (Tecno Pop 8) ஸ்மார்ட்போன் சாதனம், இந்தியாவின் அதிவேக 8ஜிபி ரேம் கொண்ட பெஸ்ட் சாதனமாக ரூ.7000 விலை புள்ளியின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.

டெக்னோ பாப் 8 (Tecno Pop 8):
இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் உடன் 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 1TB வரையிலான கூடுதல் ஸ்டோரேஜ்ஜை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 240,000 AnTuTu மதிப்பெண்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை பிரிவில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற பெஸ்ட் மலிவு விலை பாஸ்ட்டஸ்ட் ஸ்மார்ட்போன் சாதனமாக டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் சாதனம் திகழ்கிறது.
இது 6.6" இன்ச் கொண்ட 90Hz டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 8MP செல்பி கேமரா மற்றும் 12MP AI டூயல் ரியர் கேமராவுடன் வருகிறது. இதுவும் 5000 mAh கொண்ட பேட்டரி உடன் வருகிறது. இந்த இரண்டு போன்களும் ஏறக்குறைய ஒரே மாதிரி அம்சங்களை வழங்குகிறது என்றாலும், ஸ்டோரேஜ் அடிப்படையில் ஐடெல் A 70 (itel A70) ஸ்மார்ட்போன் சாதனம் தான் ஒரு படி மேலே உயர்ந்து நிற்கிறது.
பட்ஜெட் பிரியர்களுக்கு ஸ்டோரேஜ் பற்றிய கவலையே வேண்டாம் என்றால், கட்டாயம் ஐடெல் A70 தான் சிறந்த தேர்வாக அமையும். ஸ்டோரேஜ் முக்கியம் இல்லை ஸ்பீட் தான் முக்கியம் என்ற வாடிக்கையாளர்கள் தாராளமாக டெக்னோ பாப் 8 (Tecno POP 8) போனை வாங்கலாம். பிராண்டின் தரம் வைத்து பார்க்கையில், டெக்னோ அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுடன் முன்னிலையில் உள்ளது.


Click it and Unblock the Notifications