ரெண்டு போனா வாங்குவீங்க.. ரூ.5669 போதும் 8GB ரேம், 5000mAh பேட்டரி.. அதிரடி காட்டும் Amazon ஆஃபர்.
ஐடெல் (itel) நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் பல அசத்தலான அம்சங்களை கொண்ட போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஐடெல் நிறுவனம். இந்நிலையில் பிரபலமான ஐடெல் போனுக்கு அமேசான் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Freedom Festival Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் தான் ஐடெல் ஏ60எஸ் எனும் போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் கடந்த மாதம் தான் ஜூன் மாதம் தான் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஐடெல் ஏ60எஸ் ஸமார்ட்போனுக்கு 26 சதவீதம் தள்ளுபடி கிடைத்துள்ளது.

அதாவது 8ஜிபி ரேம் கொண்ட ஐடெல் ஏ60எஸ் ஸ்மார்ட்போன் ஆனது முன்பு ரூ.8,499-விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அமேசான் தளத்தில் தற்போது அறிவிக்கப்பட்ட சிறப்பு விற்பனையின் மூலம் இந்த போனை ரூ.6,299-விலையில் வாங்க முடியும். மேலும் வங்கி சலுகைகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை ரூ.5,699 விலையில் வாங்க முடியும் என அமேசான் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 8ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட இந்த ஐடெல் ஏ60எஸ் ஸ்மார்ட்போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். இந்த ஐடெல் ஏ60எஸ் போன் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 120Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட 6.6 இன்ச் (720x1612 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) ஐபிஎஸ் (IPS) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது.
4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வருகிறது. மொத்தமாக 8 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
இதில் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஐடெல் ஏ60 எஸ் போன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அந்த வகையில், 8 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஐடெல் ஏ60எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐடெல் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பேஸ் அன்லாக் (Face Unlock), ரியர் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Rear Fingerprint Sensor) போன்ற முக்கிய அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. அதேபோல் ஷேடோ பிளாக் (Shadow Black), மூன்லைட் வயலட் (Moonlit Violet), சன்ஷைன் கோல்டு (Sunshine Gold), கிளேசியர் கிரீன் (Glacier Green) ஆகிய நான்கு கலர்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது.
ஐடெல் நிறுவனம் இந்த போனுக்கு ஸ்கீரின் ரீபிளேஸ்மென்ட் வாரண்டி வழங்கி உள்ளது. மேலும் 4ஜி எல்டிஇ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த ஐடெல் ஏ60எஸ் ஸ்மார்ட்போன். குறிப்பாக கம்மி விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் இந்த போன் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








