ரூ.6,499 விலையில் 1TB ஸ்டோரேஜ் உடன் அல்டிமேட்டா ஒரு புது போன்.. அதிரவிடும் itel A05s..
ஐடெல் (itel) நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு மலிவு விலை ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய நுழைவு நிலை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஐடெல் ஏ05எஸ் (itel A05s) என்ற பெயருடன் அறிமுகமாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உண்மையை சொல்ல போனால், இது 10,000 ரூபாய்க்கும் மலிவான விலையில் இருந்து வாங்க கிடைக்கிறது. ஐடெல் ஏ05s (itel A05s) உடன், நீங்கள் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட், எச்டி+ (HD+) டிஸ்ப்ளே மற்றும் மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு வழியாக 1TB வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பகத்தைப் பெறுவீர்கள்.

இதன் விலைக்கு 1டிபி ஸ்டோரேஜ் உடன் வருவது மிகவும் சிறப்பான விஷயமாகும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 (Go Edition) அம்சத்துடன் வருகிறது. itel A05s சிறப்பம்சம், இந்த போனில் இதன் விலைக்கு என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்ற முழு விபரங்களை பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றி பார்க்கையில், இதன் 2ஜிபி + 32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது.
இந்தியாவில் itel A05s ஸ்மார்ட்போனின் விலை என்ன?
ஐடெல் ஏ05s (itel A05s) ஒரே ஒரு ஸ்டோரேஜ் விருப்பத்துடன் மட்டுமே வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது 2GB + 32GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் விலை ரூ.6,499 ஆகும். இது விரைவில் Amazon மற்றும் itel இணையதளத்தில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கிரிஸ்டல் ப்ளூ, குளோரியஸ் ஆரஞ்சு, புல்வெளி பசுமை மற்றும் நெபுலா பிளாக் ஆகிய நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
itel A05s சிறப்பம்சம் பற்றிய விபரங்கள்
itel A05s ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவானது 1612 x 720 பிக்சல் தீர்மானம் கொண்ட 6.6' இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 60Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம் மற்றும் 120Hz டச் சாம்பிளிங் வீதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஹூட்டின் கீழ் ஆக்டா கோர் யூனிஸாக் SC9863A (octa-core Unisoc SC9863A SoC) இயங்குகிறது.

இது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை ஸ்டோரேஜ் விரிவாக்க கிடைக்கிறது. itel A05s உடன், நீங்கள் டூயல் கேமரா சென்சாரை இரட்டை 5MP பின்புற கேமராக்கள் மற்றும் 5MP முன் கேமராவைப் பெறுவீர்கள். இந்த ஸ்மார்ட்போன் 4,000 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. இது உங்களுக்கு 7.5 மணிநேர டாக்டைம் மற்றும் 112 மணிநேர மீடியா பிளேபேக் நேரத்தை வழங்குகிறது.
இந்த itel A05s ஸ்மார்ட்போன் 5W சார்ஜர் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 13 (Go Edition) உடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் itel A05s ஆனது 4G, டூயல் சிம் ஆதரவு, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், ப்ளூடூத், Wi-Fi மற்றும் USB Type-C போர்ட் போன்ற பல இணைப்பு அம்சங்களுடன் வருகிறது.
இந்த ஃபோன் மூலம் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பிங்கர் பிரிண்ட் மற்றும் பேஸ் அன்லாக் செய்வதை கொண்டுள்ளது. வெறும் ரூ.6,499 விலையில் இத்தகைய அம்சங்களுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போனை யார் தான் வேண்டாம் என்று சொல்லுவார்கள்.


Click it and Unblock the Notifications








