Home
News

மலிவு விலையில் இப்படியொரு போனா? பட்டையை கிளப்பும் itel A05s.. 1 இல்லை 2 ஆர்டர் போடுங்க உடனே..

ஐடெல் (itel) நிறுவனம் நீண்ட காலத்திற்கு பிறகு அதன் லோகோவை மாற்றியுள்ளது. புதிய லோகோவுடன் நிறுவனம் இப்போது புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன் (smartphone) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஐடெல் A05s (itel A05s) என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய லோகோவுடன் ஐடெல் (itel new logo) நிறுவனம் புதிய பொலிவை பெற்றுள்ளது. புதிய லோகோவுடன் நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன் மாடலாக இந்த itel A05s இருக்கிறது. இதுவொரு மலிவு விலை மொபைல் போன் (low price mobile phone model) மாடலாகும். மலிவு விலை என்றதும் சுமார் அம்சத்துடன் வரும் சுமார் போன்களில் இதுவும் ஒன்று நினைத்துவிடாதீர்கள்.

மலிவு விலையில் இப்படியொரு போனா? பட்டையை கிளப்பும் itel A05s..

ஐடெல் A05s (itel A05s) விலை:

மலிவு விலையில் அட்டகாசமான அம்சங்களை பேக் செய்துள்ள தரமான போனாக இது வெளிவந்துள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனை ஏராளமான மக்கள் போட்டி போட்டு வாங்க போகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. காரணம், ஐடெல் A05s (itel A05s) வெறும் ரூ.6,099 விலையில் வருகிறது.

இது 4ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனாக நெபுலா பிளாக் (Nebula Black), மெடோவ் க்ரீன் (Meadow Green), கிரிஸ்டல் ப்ளூ (Crystal Blue) மற்றும் க்ளோரியஸ் ஆரஞ்சு (Glorious Orange) நிறங்களில் வருகிறது. இப்போது இது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் கடைகள் வழியாக வாங்க கிடைக்கிறது. சில ஆன்லைன் தளங்களில் அறிமுக வங்கி சலுகையுமுடன் ரூ.5,000 விலை புள்ளியில் இது வாங்க கிடைக்கிறது.

ஐடெல் A05s சிறப்பம்சம் (itel A05s Specifications):
இந்த itel A05s சாதனம் 6.6" இன்ச் கொண்ட எச்டி+ (HD+) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது டீசெண்டான 270 ppi பிக்சல் அடர்த்தியை கொண்டுள்ளது. இதுவொரு 60Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) உடன் 120Hz டச் சாம்பிளிங் ரேட் (touch sampling rate) உடன் வருகிறது. இது வாட்டர் ட்ராப் நாட்ச் உடன் முன்பக்கத்தில் 5MP செல்பி கேமராவை கொண்டுள்ளது.

மலிவு விலையில் இப்படியொரு போனா? பட்டையை கிளப்பும் itel A05s..

இந்த ஐடெல் A05s சாதனம் ஆக்டா கோர் யூனிஸாக் SC9863A சிப்செட் (Unisoc SC9863A SoC) உடன் வருகிறது. இது 4ஜிபி ரேம் (4GB of RAM) உடன் 64ஜிபி ஸ்டோரேஜ்ஜை (64GB of storage) ஆதரிக்கிறது. இது மைக்ரோ எஸ்டி (microSD card) உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் (Android 13 Go edition) இல் இயங்குகிறது. இது 4000mAh பேட்டரியை (battery) பேக் செய்கிறது.

ஐடெல் A05s விலை (itel A05s Price):

இது 7.5 மணி நேர டாக் டைம் நேரத்தை வழங்குகிறது. இதன் பின்புறத்தில் ஒற்றை 5MP கேமராவை LED பிளாஷ் (LED flash) உடன் கொண்டுள்ளது. இது பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வருகிறது. இது டூயல் சிம் கார்டு (dual SIM card) ஸ்லாட் உடன் 4ஜி வோல்டி (4G calling VoLTE) அம்சத்தை ஆதரிக்கிறது.

இதில் வைஃபை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth), ஜிபிஎஸ் (GPS), மற்றும் ஹெட்போன் ஜாக் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. மிகவும் மலிவு விலையில் நீங்கள் ஒரு புது ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், யோசிக்காமல் நீங்கள் இந்த iTel A05s போனை உடனே வாங்கலாம். itel கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகமான மலிவு விலை போன்களை விற்பனை செய்த நிறுவனமாக திகழ்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel A05s Budget Friendly Smartphone Launched In India Under Rs 6099 Price and Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X