Home
News

இனி ரூ.123 போதும்.. Itel 4ஜி போன் பயனர்களுக்கு அடிச்ச அதிர்ஷடம்.. Jio-வின் புதிய பாதை!

ஐடெல் (Itel) நிறுவனம் தனது 4ஜி ஃபீச்சர் போன் (4G Feature Phone) பயனர்கள் இப்போது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.123 மாதாந்திர திட்டத்தை (Reliance Jio Rs.123 monthly plan) ரீசார்ஜ் செய்வதற்கு தகுதி பெற்று உள்ளனர் என்று அறிவித்து உள்ளது.

இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பட்ஜெட்-விலை ஐடெல் போன் பயனர்களுக்கு மொபைல் கனெக்டிவிட்டி வசதிகள் கிடைப்பது இன்னும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஜியோ பிராண்டட் ஃபீச்சர் போன்களை தாண்டி, தனது ரூ.123 ரீசார்ஜ் ஆனது மற்ற 4ஜி ஃபீச்சர் போன்களுக்கும் கிடைக்க வேண்டும் என்கிற செயல்பாட்டின் முதல்படியை குறிக்கிறது.

இனி ரூ.123 போதும்.. Itel 4ஜி போன் பயனர்களுக்கு அடிச்ச அதிர்ஷடம்!

ஜியோ ரூ.123 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை, இது எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற வாய்ஸ் கால்களுடன், 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இதன் மூலம் ஒரு ரீசார்ஜ் சுழற்சிக்கு மொத்தம் 14 ஜிபி டேட்டா கிடைக்கும்.

ஐடெல் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த திட்டம் ஃபீச்சர் போன் பயனர்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1,000 சேமிக்க உதவும். இது சந்தையில் உள்ள மிகவும் செலவு குறைந்த ரீசார்ஜ் விருப்பங்களில் ஒன்றாக அமைகிறது. ரூ.123 ரீசார்ஜ் திட்டத்துடன், ஐடெல் பயனர்கள் ஜியோவின் மற்ற ப்ரீபெய்ட் திட்டங்களையும் அணுகலாம்.

இதில் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ரூ.234 பிளான், 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கும் ரூ.369 பிளான் மற்றும் 336 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கும் ரூ.1234 பிளான் ஆகியவைகளையும் ரீசார்ஜ் செய்யலாம், இவை ஒவ்வொன்றும் தினசரி 0.5 ஜிபி டேட்டா உடன் வருகின்றன. முன்பு ஜியோவின் சொந்த ஃபீச்சர் போன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த திட்டங்கள், இப்போது ஐடெல்லின் அனைத்து 4ஜி ஃபீச்சர் போன் மாடல்களிலும் கிடைக்கின்றன.

ஐடெல் நிறுவனமானது, 1.3 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை நிலையங்கள் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட சேவை மையங்களை கொண்ட சில்லறை விற்பனை வலையமைப்பின் மூலம் இந்தியா முழுவதும் தனது இருப்பை வலுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உற்பத்தி குறைபாடுகளுக்கு ஓராண்டு கால கவுன்டர் ரீப்பிளேஸ்மென்ட் வழங்கும் கொள்கையையும் (one-year counter replacement policy) இந்நிறுவனம் வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பழுதடைந்த டிவைஸ்களை நேரடியாக சில்லறை விற்பனை கடைகளிலேயே மாற்றிக்கொள்ள முடியும்.

முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோபாரத் ஃபோன் திட்டங்களை 4ஜி ஃபீச்சர் ஃபோன் திட்டங்கள் என பெயர் மாற்றி, ஜியோஃபோன் திட்டங்கள் என்ற வகையை நீக்கி இருந்ததும் கூட இங்கே குறிப்பிடத்தக்கது. டிராய் (TRAI) என்கிற இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து தான், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது தனது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கான ஜியோ போன் பிளான்கள் மற்றும் ஜியோபோன் ப்ரைமா பிளான்களின் "பெயர்களை" நீக்கி, மாற்றி இருந்தது.

தற்போது ஜியோ இணையதளத்தில் 4ஜி ஃபீச்சர் போன் பிளான்கள்" (4G Feature Phone Plans) மற்றும் "4ஜி ஃபீச்சர்ஃபோன் ஆட்-ஆன்கள்" (4G Feature Phone Add-ons.) என்கிற பெயர்களின் கீழ் கிடைக்கும் திட்டங்களை மட்டுமே பார்க்க முடிகிறது.

சந்தை பங்கின் அடிப்படையில், நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோவிடம், வெளிப்படைத்தன்மை இல்லாததாகவும், பாகுபாடு காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்ட சில கட்டண நடைமுறைகளை நிறுத்துமாறும், டிராய் (TRAI) உத்தரவிட்டதாக வந்த செய்திகளை தொடர்ந்து இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்கலாம் என்று முன்னதாக டெலிகாம்டால்க் (Telecom Talk) வலைதளத்தில் அறிக்கை வெளியாகி இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Itel 4G Feature Phones Now Eligible to Recharge Jio Rs 123 Rs 234 Rs 369 Rs 1234 Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X