Home
News

சிக்கிய ஆப்பிள் நிறுவனம்: "விளம்பரத்தில் காட்டியது போன்ல இல்லையே"- 12 மில்லியன் டாலர் அபராதம்!

வாட்டர் ரெசிஸ்டன்ட் ஐபோன் என விளம்பரம் செய்தது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்துக்கு இத்தாலியில் 12 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோனுக்கு தனிச்சிறப்புகள்

ஆப்பிள் ஐபோனுக்கு தனிச்சிறப்புகள்

ஆண்ட்ராய்டு போன்கள் பல்வேறு அம்சங்களோடு கண்ணை கவரும் வடிவமைப்பில் ஏணைய நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. இருப்பினும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விட ஐபோன்களுக்கு உலகளவில் அதிக வரவேற்பு கிடைக்கிறது. காரணம் தனித்துவமான சிப்செட், சிறந்த பாதுகாப்பு, தனி ஓஎஸ் என பல்வேறு தனித்துவ அம்சங்களை ஐபோன் கொண்டிருக்கிறது. ஐபோன் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாகவே இருக்கிறது.

வாட்டர் ரெசிஸ்டன்ட் ஐபோன்

வாட்டர் ரெசிஸ்டன்ட் ஐபோன்

இந்தநிலையில் வாட்டர் ரெசிஸ்டன்ட் ஐபோன் என விளம்பரம் செய்தது தொடர்பாக இத்தாலியில் ஆப்பிள் நிறுவனத்துக்கு 12 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்டுள்ள விளக்கம் குறித்து பார்க்கலாம்.

இத்தாலிய வர்த்தக ஒழுங்குமுறை ஆணையம்

இத்தாலிய வர்த்தக ஒழுங்குமுறை ஆணையம்

ஏணைய ஐபோன் மாடல்கள் வாட்டர் ரெசிஸ்டன்ட் எனப்படும் நீர்காப்பு தன்மை கொண்டவை என விளம்பரம் செய்யப்பட்டதாகவும் ஆனால் குறிப்பிட்ட சூழலிலேயே அவ்வாறு பாதுகாப்பாக இருக்கும் என்பதை நிறுவனம் விளம்பரப்படுத்த தவறிவிட்டதாகவும் இத்தாலிய வர்த்தக ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களை ஏய்க்கும் செயல்

வாடிக்கையாளர்களை ஏய்க்கும் செயல்

விளம்பரங்களில் வாட்டர் ரெசிஸ்டன்ட் என அறிவித்துவிட்டு திரவங்களால் சேதமடைந்தால் வாரண்டி கிடைக்காது என கூறுவது வாடிக்கையாளர்களை ஏய்க்கும் செயலாகும் என இத்தாலிய வர்த்தக ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

12 மில்லியன் டாலர் அபராதம்

12 மில்லியன் டாலர் அபராதம்

இதன்காரணமாக வாட்டர் ரெசிஸ்டன்ட் ஐபோன் என விளம்பரத்தில் குறிப்பிட்டது தொடர்பாக இத்தாலியில் ஆப்பிள் நிறுவனத்துக்கு 12 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி ரூ.90 கோடி ஆகும்.

33 மாகாண அரசுகளுக்கு இழப்பீடு

33 மாகாண அரசுகளுக்கு இழப்பீடு

அதேபோல் முன்னதாக அமெரிக்காவில் உள்ள 33 மாகாண அரசுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் 113 மில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஐபோன் 6, ஐபோன் 7 மற்றும் ஐபோன் எஸ்இ மாடல்களுக்கு புதிய அம்சங்கள் வழங்கும் அப்டேட்களை வழங்கியது.

பேட்டரி திறன் குறைந்தது

பேட்டரி திறன் குறைந்தது

இந்த அப்டேட் காரணமாக ஐபோனின் பேட்டரி திறன் குறைந்தது. எனவே பேட்டரி திறனை அதிகரிப்பதற்கு புதிய சாப்ட்வேர் அப்டேட் வழங்கப்பட்டது. ஆனால் இந்த சாப்ட்வேர் அப்டேட் செய்த சில நாட்களில் ஐபோன் வேகம் அதிகளவு குறைந்தது.

இழப்பீடு வழங்க உத்தரவு

இழப்பீடு வழங்க உத்தரவு

இதையடுத்து பழைய ஐபோன்களுக்கு பதிலாக புதிய ஐபோன் வாங்க வாடிக்கையாளர்கள் முன்வந்தனர். புதிய ஐபோன்கள் விற்பனை செய்வதற்கு பழைய ஐபோன்களின் பேட்டரி திறனை வேண்டும் என்றே நிறுவனம் குறைத்தது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதையடுத்து ஆப்பிள் நிறுவனம் 113 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு பிறக்கப்பட்டது.

source: indiatimes.com

Best Mobiles in India

English summary
Italy Fines Apple 10 Million EUR For Misleading Claims About Water Resistant Properties
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X