இறந்த வீரரை அடையாளம் காட்டிய சமூக வளைதளம்: 60 ஆண்டுக்கு பிறகு கிடைத்த சுவாரஸ்சியமான தகவல்!

கடந்த 2005ம் ஆண்டு இத்தாலி ஆஸ்தோ பகுதியில் உள்ள பள்ளத்தாக்கின் உயரமான பகுதியில் இருந்து, மனித எச்சம், கண்ணாடி பனிச்சறுக்கு உபகரணங்கள் உள்ளிட்டவைகளை கண்டெடுக்கப்பட்டது. இறந்தவர் யார் என்று அறிய போலீசார

|

இன்று பேஸ்புக், டுவிட்டர், ஆர்குட், இன்ஸ்டா கிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வளை தளங்கள் இருக்கின்றன. இந்த வளை தளங்களால் உலகம் கிராமம் (குளோபல் வில்லேஜ்ஸ்) போன்று சுருங்கி விட்டது.
இதனால் எந்த ஒரு நாட்டில் பிரச்னை நடந்தாலும் அடுத்த வினாடியே நமக்கு தெரிந்து விடுகிறது. மேலும், அண்டை வீட்டாருடன் நட்புணர்வு பேணுவது போல், அயல்நாட்டாரிடமும் பேணி வருகிறோம்.

60 ஆண்டுக்கு பிறகுஇறந்த வீரரை அடையாளம் காட்டிய சமூக வளைதளம்:

சுமார் 8 வயதில் காணாமல் போன இந்திய சிறுவன் ஆஸ்திரேலியாவில் வசிப்பதும் தெரியவந்தது. பேஸ்புக் உதவியால், 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்து தன் பெற்றோரை பார்த்து சென்ற சம்பவமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பல்வேறு நெகிழ்ச்சி சம்பவங்களும் சமூக வலை தளங்களின் உதவியால் அரங்கேறி வருவது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

உலகளாவிய உதவிகள்:

உலகளாவிய உதவிகள்:

சமூக வளைதளங்களில் பல்வேறு விசியங்களும் பகிரப்படுவதால், அதுகுறித்து பொது மக்களுக்க போலீசாரும், போலீசாருக்கும் பொது மக்களுக்கும், பொது மக்களுக்கு பொது மக்களும் உதவி செய்து வருகின்றனர். மேலும் ஒரு சில விசியங்களுக்கு சமூக வளைதள நிர்வாகங்களும் உலகளாவிய முறைப்படி உடனடியாக உதவி செய்து வருகின்றன.
இதில், 60 ஆண்டுகளுக்கு பிறகு மயாமாகி இறந்த பனிச்சறுக்கு வீரர் ஒருவரை கண்டுபிடிக்க சமூக வளை தளம் உதவிய விதம் சுவாரஸ்சியமாக உள்ளது.

2005ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது:

2005ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது:

கடந்த 2005ம் ஆண்டு இத்தாலி ஆஸ்தோ பகுதியில் உள்ள பள்ளத்தாக்கின் உயரமான பகுதியில் இருந்து, மனித எச்சம், கண்ணாடி பனிச்சறுக்கு உபகரணங்கள் உள்ளிட்டவைகளை கண்டெடுக்கப்பட்டது. இறந்தவர் யார் என்று அறிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

 10 ஆயிரம் அடி உயரத்தில் எடுக்கப்பட்டது:

10 ஆயிரம் அடி உயரத்தில் எடுக்கப்பட்டது:

மனித எச்சம், கண்ணாடி, கிழிந்த ஆடை மற்றும் பிற உபகரணங்கள் உள்ளிட்டவை ஆல்ப்ஸ் மலையில் சுவிஸ் எல்லை அருகே 10 ஆயிரம் அடி உயரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மாயமாகி இறந்த பனிச்சறுக்கு வீரர் வயது 30 இருக்கும். மேலும் அவர் பயன்படுத்திய இருந்த பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

சமூக வளை தளத்தில் பரப்பட்டது:

சமூக வளை தளத்தில் பரப்பட்டது:

இந்த வழக்கு குறித்து இத்தாலி போலீசார் சமூக வலை தளங்களில் பகிர்ந்தனர். மேலும் ஆல்பஸ் மலையில் கண்டு எடுக்கப்பட்ட விவரம் குறித்தும் சமூக வளைதளங்களிலும் பிரான்ஸ், சுவிஸ்சர்லாந்து நாடுகளுக்கும் போலீசார் முழுமையாக பகிர்ந்து இருந்தனர்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்:

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்:

1954ம் ஆண்டு சுவிஸ் எல்லை மேட்டர் ஹார்ன் பகுதியில் பனிச்சறுக்கு பயிற்சியில் ஈடுபட்ட ஹென்றி லி மாஸ்னி காணமல் போனதாகவும், இப்போது வெளியிட்டுள்ள தகவல்கள் அவரது அடையாளத்தோடு ஒத்துப் போவதாகவும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எம்மா நாசீம் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

கண்ணாடி அணிந்த புகைப்படம்:

கண்ணாடி அணிந்த புகைப்படம்:

ஹென்றி மூக்கு கண்ணாடி அணிந்திருந்த புகைப்படம் வழக்கப்பட்டது. இறந்த வீரர் பயன்படுத்திய கண்ணாடியோடு ஒத்துப்போகிறது என போலீசார் தெரிவித்தனர். டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு இதுகுறித்து தெரிவிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Best Mobiles in India

English summary
Italian police ID body of French skier missing since 1954 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X