மாஸ்க்-ஐ வென்டிலேட்டராக மாற்றும் 3டி மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட அடாப்டர்!

|

கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் நெருக்கடிகளுக்கு முப்பரிமாண அச்சிடல் (3டி பிரிண்டிங்) தொழில்நுட்பம் புதிய தந்திரங்கள் மூலம் பதிலடி கொடுத்துவருகிறது‌.
சில நாட்களுக்கு முன்பு உலகளவில் மருத்துவமனைகளுக்கு மிகவும் தேவைப்படும் வென்டிலேட்டர்களுக்கான மாற்று வால்வுகள் ஒரு இத்தாலிய வணிக நிறுவனம் முப்பரிமாண முறையில் அச்சிட்டு வழங்கியது.

முகமூடிகளாக மாற்ற முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட

இப்போது அதே நிறுவனம் ஸ்நோர்கெல் மாஸ்க்-களை சி-பிஏபி ஆக்ஸிஜன் முகமூடிகளாக மாற்ற முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட அடாப்டர்களை கண்டுபிடித்துள்ளதாக 3 டி பிரிண்டிங் மீடியா நெட்வொர்க் கூறியுள்ளது‌.

முப்பரிமாண அச்சிடுதல் தந்திரமானது!

முப்பரிமாண அச்சிடுதல் தந்திரமானது!

தோராயமாக ஒரு வாரத்திற்கு முன்பு, உள்ளூர் முப்பரிமாண (3D )அச்சுப்பொறி வணிக நிறுவனம் ஒன்று கொரோனா வைரஸ் நோயாளிகளால் நிரம்பிவழிந்த ஒரு மருத்துவமனைக்கு அதன் வெண்டிலேட்டர்களுக்கு தேவையான மாற்று வால்வுகளை தயாரித்து வழங்கி உதவியது.

கொரோனா குறித்து இவர்கள் சொல்வதை நம்பாதிங்க., தெரியாம கூட ஓபன் பண்ணாதிங்க: காவல்துறை எச்சரிக்கை!கொரோனா குறித்து இவர்கள் சொல்வதை நம்பாதிங்க., தெரியாம கூட ஓபன் பண்ணாதிங்க: காவல்துறை எச்சரிக்கை!

அந்த வால்வுகளுக்குப் பின்னால்

ஆனால் அந்த வால்வுகளுக்குப் பின்னால் உள்ள ஐசினோவா என அழைக்கப்படுகிற அந்த நிறுவனம், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தனித்துவமான கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட மற்றொரு தந்திரமான கண்டுபிடிப்பை நிறைவு செய்துள்ளது. அந்த கண்டுபிடிப்பானது, ஸ்னோர்கெலிங் மாஸ்க்-ஐ ஆக்ஸிஜன் சிகிச்சைக்கான செயல்படும் சி-பிஏபி மாஸ்க்காக மாற்றும் திறன் கொண்ட முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட அடாப்டர் ஆகும். இதில் முக்கியமானது என்னவெனில் COVID-19 தீவிரமாக பாதித்தவர்களை மீட்க இது மிகவும் அவசியம்.

உடனடியாக ஒத்துழைக்கத் தயாராக

இது நிகழும்போது, ​​"ஈஸி ப்ரீத்" ஸ்நோர்கெல் தயாரிப்பாளர் டெகத்லான் "உடனடியாக ஒத்துழைக்கத் தயாராக இருந்தது" என்று ஐசினோவா நிறுவனம் கூறியுள்ளது. இந்நிறுவனத்தின் முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட முன்மாதிரி "சரியாக வேலை செய்வதாக நிரூபிக்கப்பட்டுள்ளது", மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் "இந்த கண்டுபிடிப்பு குறித்து மிகவும் ஆர்வமாக இருந்தனர்." என அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஸ்நோர்கெலிங் மாஸ்க்

ஒரு ஸ்நோர்கெலிங் மாஸ்க் என்ன செய்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல, ஆனால் இந்த பிராண்டின் முகமூடிகள் ஒருவரின் முழு முகத்தையும் உள்ளடக்கி, நீச்சல் வீரர்களுக்கு அவர்களின் நீருக்கடியில் உள்ள சூழலைப் பற்றிய தடையற்ற பார்வையை வழங்கும். இந்த சாதனத்தின் கீழ் பகுதி மெலிதான "ஸ்நோர்கெல்" ஆக மாறி நீரின் மேற்பரப்பிற்கு மேலே செல்கிறது.

சான்றிதழ் பெறவில்லை

புதிய ஸ்நோர்கெல் அடிப்படையிலான முகமூடி இதுவரை வேலை செய்திருந்தாலும், ஐசினோவா அதை உடனடியாக உற்பத்திக்கு வைக்கப் போவதில்லை. "முகமூடியும், அதன் இணைப்பும் இனனும் சான்றிதழ் பெறவில்லை மற்றும் அவற்றின் பயன்பாடு என்பது கட்டாயமாக தேவைப்படும் போதே இருக்கும்" என்று முப்பரிமாண அச்சிடும் நிறுவனம் தெரிவித்துள்ளது. நோயாளிகள் தங்கள் சிகிச்சையில் உறுதிப்படுத்தப்படாத சான்றிதழ் இல்லா சாதனத்தைப் பயன்படுத்துவதை அங்கீகரிக்க சட்டப்பூர்வ அறிவிப்பில் கையெழுத்திட வேண்டும் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

பொருட்படுத்தாமல், ஐசினோவா நிறுவனம் இந்த இணைப்பு

இதன் விளைவாக, இத்தாலிய கண்டுபிடிப்பாளர்கள் தங்களது புதிய கண்டுபிடிப்பு அவசரகால சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் (உலகளவில் அனைத்து மருத்துவமனைகளும் விரைவாக இந்த நிலைக்கு மாறுகிறது).


இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், ஐசினோவா நிறுவனம் இந்த இணைப்பு வால்விற்கு (சார்லோட் வால்வு) காப்புரிமை பெற்றுள்ளது. "இந்த காப்புரிமை பயன்படுத்த இலவசமாக இருக்கும். ஏனென்றால் தேவைப்படும் அனைத்து மருத்துவமனைகளும் தேவைப்பட்டால் அதைப் பயன்படுத்த முடியும் என்பது எங்களது நோக்கமாக உள்ளது" என்று 3 டி பிரிண்டிங் மீடியா தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் உலகளவில் தீவிரமடைந்து வருவதால், நமது மிகைப்படுத்தப்பட்ட தொழில்துறை மற்றும் பொருளாதார சக்திகளால் எஞ்சியிருக்கும் இடைவெளிகளை சரிசெய்வதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிப்பது பொறியாளர்கள் மற்றும் புதுமைப்படைப்பாளிகளின் கைகளில் தான் உள்ளது.

Best Mobiles in India

English summary
Italian Innovator Created 3D Printed Adaptor Transform Snorkel Into Ventilator: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X