இதெல்லாம் தெரிஞ்சிருந்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் பாஸ்..
ஐடி துறையை சேர்ந்தவரா நீங்க, அதிக சம்பளத்துடன் விரைவில் வேலை கிடைக்க உங்களிடம் இந்த திறமைகள் இருக்க வேண்டும், அவை எவை என்பதை கீழே வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

சைபர் செக்யூரிட்டி
வளர்ந்து வரும் இன்டர்நெட் உலகில் சைபர் செக்யூரிட்டி திறன் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக கருதப்படுகின்றது.
கடந்த ஆண்டு நிலவரப்படி இத்துறையில் $95,824 வரை ஆண்டு வருமானம் வழங்கப்படுகின்றது.

பப்பெட்
சிஸ்அட்மின்கள் செய்யும் பல பணிகளை செய்யும் ஓபன் சோர்ஸ் டூல் தான் பப்பெட், இன்று இந்த பணிக்கான தேவை 66 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக கூறப்படுகின்றது.

பிக் டேட்டா
டேட்டா சம்பந்தப்பட்ட முடிவுகளை மேற்கொள்வதில் துவங்கி இன்று அதற்கான டேட்டா துறையில் தேவை அதிகரித்திருக்கின்றது.

ஹதூப்
அபாச்சி ஹதூப் தெரிந்தவர்களுக்கான தேவை 48 சதவீதம் அதிகரித்திருப்பதாக டைஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோ எஸ்க்யூஎல்
இவை பெரும்பாலும் பிக் டேட்டா மற்றும் ரியல் டைம் செலிகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இந்த பணியில் $118,587 வரை ஈட்ட முடியும்.

க்ளவுட்
அதிகப்டசமாக 90 சதவீத வியாபாரங்களில் இன்று க்ளவுட் பயன்படுத்தப்படுகின்றது. இத்துறையில் ஆண்டிற்கு $104,373 வரை சம்பாதிக்க முடியும்.

பைத்தான்
பைத்தான் திறன் இருப்பவர்களுக்கான தேவை கடந்த ஆண்டு 31 சதவீதம் வரை அதிகரித்திருக்கின்றது.

வாட்டர் ஃபால்
வாட்டர்ஃபால் பணியில் அனுபவம் பெற்றவர்களுக்கான தேவை 23 சதவீதம் வரை அதிகரித்திருக்கின்றது.

சேல்ஸ் ஃபோர்ஸ்
க்ளவுட் சார்ந்த CRM சிஸ்டம் மூலம் வாடிக்கையாளர் தகவல்களை பதிவு செய்யும் இந்த துறையில் கடந்த ஆண்டை விட 17 சதவீதம் வரை உயர்வு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications