Home
News

வாட்ஸ் ஆப்-க்கு மத்திய அரசு நோட்டீஸ்,சொல்பேச்சு கேட்குமா வாட்ஸ் ஆப்-சில போன்களில் வாட்ஸ்ஆப் கிடையாது

வாட்ஸ் ஆப் இல் பகிரப்படும் தவறான குறுந்தகவலால் பல குழப்பங்களும் பல சர்ச்சைகளும் அண்மையில் இந்தியாவில் வெடித்தது.

வாட்ஸ் ஆப் இல் பகிரப்படும் தவறான குறுந்தகவலால் பல குழப்பங்களும் பல சர்ச்சைகளும் அண்மையில் இந்தியாவில் வெடித்தது. இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.

வாட்ஸ் ஆப் செயலியில் சர்ச்சைக்குரிய வகையில் குறுந்தகவல்களை உருவாக்கி அனைவரும் பகிரும் நபர்களின் விபரங்களைக் கண்டறியும் வசதியை வாட்ஸ் ஆப் சேவையுடன் இனைக்க வேண்டுமென்று வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஏற்கெனவே இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

மூன்றாவது முறையாக நோட்டீஸ்

மூன்றாவது முறையாக நோட்டீஸ்

அதனைத் தொடர்ந்து தற்பொழுது வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு மத்திய அரசு மூன்றாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போன முறை மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்க்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் விபரமாகப் பதில் அளித்தது.

"எண்ட்-டூ-எண்ட்"

அதன்படி வெளிப்படைத் தன்மையை கொண்டு வருவது வாட்ஸ் ஆப் பயனாளர்களின் தனிமனித உரிமையை மீறும் செயல் என்றும், அது வாட்ஸ் ஆப் இன் "எண்ட்-டூ-எண்ட்" என்கிரிப்ஷன் கொள்கையைப் பாதிக்கும் என்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் மத்திய அரசின் நோட்டீசுக்கு பதில் அளித்தது.

தொழில்நுட்பத் தீர்வு

தொழில்நுட்பத் தீர்வு

இருப்பினும் மத்திய அரசு 3 வது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நிறுவனத்தின் எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ஷன் கொள்கையை சமரசம் செய்துகொள்ளாமல், சர்ச்சைக்குரிய குறுந்தகவலை உருவாக்கி அதை அனுப்பிய நபரை அடையாளம் காண்பதற்கான தொழில்நுட்பத் தீர்வுகளை சரி செய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

மத்திய அரசு

மத்திய அரசு

இந்தச் செயல்முறையை வாட்ஸ் ஆப் நிறுவனம் பின்பற்றினால் தனி உரிமை பாதிக்கப்படாமல் சர்ச்சைக்குரிய குறுந்தகவல்களை அனுப்பும் நபர்களின் விபரங்களை எளிதில் கண்டறிய முடியுமென்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

வாட்ஸ் சேவை நிறுத்தப்படும்

வாட்ஸ் சேவை நிறுத்தப்படும்

நோக்கியா ஏஸ்40 டிசம்பர் 31, 2018 முதல் வாட்ஸ் ஆப் சேவை துண்டிக்கப்படுமென்றும் அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு முதல் iOS 7 க்கு கீழ் இருக்கும் அணைத்து ஐபோன்களுக்கும் வாட்ஸ் ஆப் சேவை நிறுத்தப்படும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஆண்ட்ராய்டு 4.0 ஜெல்லி பீன் க்கு பின் உள்ள அணைத்து ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கும் வாட்ஸ் சேவை நிறுத்தப்படும் என்று முன்கூட்டியே வாட்ஸ் ஆப்ப நிறுவனம் அறிவித்திருக்கிறது.

Best Mobiles in India

English summary
IT ministry may send third notice to WhatsApp : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X