என்ஜினீயரிங் முடித்தவர்களிடம் டெக் கம்பெனிகள் எதிர்பார்ப்பது இதை தான்..
இன்று உலகில் கொடிகட்டி பறக்கும் ஒரே வேலை ஐ.டி (IT) கம்பெனியில் வேலை பார்ப்பது தான்.
இளைஞர்கள் அதில் வேலைக்கு சேர துடிக்க சில முக்கிய காரணங்களும் உண்டு.
மிக எளிதாக அதிக வருவாய் அதில் வழங்கப்படுவது தான் இளைஞர்களை இந்த வேலைக்கு முக்கியதுவம் கொடுக்க வைக்கிறது.
இந்த காரணத்தால் தானோ என்னவோ தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் காலேஜ்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்த தரமற்ற காலேஜ்களின் வருகையால் தான் தமிழ்நாட்டில் பட்டம் பற்ற பல இலட்சம் என்ஜினீயர்களின் நிலைமை அகல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது.
இதற்கு ஒரு உண்மை உதாரணம் ஒன்று கூறுகிறேன் கேளுங்கள்.
என் நண்பன் ஒருவன் தமிழ் நாட்டில் உள்ள ஒரு பெரிய என்ஜினீயரிங் காலேஜில் பி.டெக்(B.Tech(IT)) முடித்தான்.
அவனுடைய பர்சன்டேஜ்(Percentage) ம் நன்றாக தான் வைத்திருந்தான் அதாவது 89.6% இருந்தது.
அவன் பெங்களூரில் ஒரு கம்பெனிக்கு ஒரு இன்டரிவியூவுக்கு போனான் அங்கு நடந்த சம்பவம் அவனை மிகவும் சங்கடத்திற்க்கு உள்ளாக்கி விட்டது.
இன்டரிவியூ ஹாலில் அவன் உட்கார்ந்திருக்கும் போதே அந்த கம்பெனியின் HR வந்து சொன்னார் தமிழ்நாட்டில் படித்த என்ஜினீயர்கள் தயவு செய்து ரேஸ்யும்(Resume) மட்டும் கொடுத்து விட்டு செல்லுங்கள் வாய்ப்பு இருந்தால் அழைக்கிறோம் என்று.
ஏனைய டெல்லி, இதர மாநிலங்களில் படித்த மாணவர்கள் அனைவரும் தற்போது இன்டரிவியூ அட்டன்ட் பண்ணலாம் என்று கூறினாராம்.
இதுதான் தமிழ்நாட்டு என்ஜினீயரிங்கின் இன்றைய மதிப்பு நண்பரே.
ஆம், அத்தனை கல்லூரிக்கும் அனுபவம் வாய்ந்த பேராசிரியரை கொண்டா பாடம் நடத்துகிறார்கள்?
பல கல்லூரிகளில் 2012 ம் பேட்ச் க்கு பாடம் சொல்லி கொடுப்பவர் 2011 ல் என்ஜினீயரிங் முடித்த ஒரு பட்டதாரி.
அப்படி என்றால் அந்த கல்வி முறை எப்படி இருக்கும் என்று பாருங்கள்.
ஒரு சில கல்லூரிகள் 100 சதவிகித தேர்ச்சிக்காக லேப் பிரக்டிகல்ஸில் ஒன்றும் தெரியாத மாணவணை கூட பாஸ் ஆக்கி விடுகின்றன.
இதன் விளைவு இன்று பல என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்கள் அரசு தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கிறார்கள்.
இதற்காகவா நீங்கள் இலட்ச இலட்சமாய் செலவு பண்ணி என்ஜினீயரிங் படிச்சீங்க.
இதற்கு நீங்கள் ஆர்ட்ஸ் அன் சயின்ஸ்(Arts and Science) படிச்சிருக்கலாமே அது போதுமே அரசு தேர்வுக்கு நீங்கள் தயாராக.
படிப்பும் சில ஆயிரங்களில் முடிந்திருக்கும் பெற்றோரும் கஷ்டப்பட்டு அவ்வளவு இலட்சங்கள் பணம் கட்டியிருக்க தேவையில்லை.
இன்றும் பலர் வேலை தேடிகொண்டிருக்கிறேன் என்ற பெயரில் வீட்டில் இருந்து இன்னமும் மாதச் செலவுக்கு பணம் வாங்கி கொண்டிருக்கிறார்கள் என்பது எவ்வளவு தூக்கமான விஷயம்.
இந்தியாவின் கல்வி முறை பில்கேட்ஸிடம் வேலை செய்ய பல இலட்சக்கணக்கான ஊழியர்களை உருவாக்கும் ஆனால், ஒரு பில்கேட்ஸை கூட உருவாக்காது என்பது தான் நாம் அறியப்படாத உண்மை.
சரி, பெரிய பெரிய கம்பெனிகள் எதை எதை என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள் என்பதை கீழே காணுங்கள்...
Click Here For New Smartphones Gallery

கம்பெனிகள் எதிர்பார்ப்பது இதை தான்
web developer

கம்பெனிகள் எதிர்பார்ப்பது இதை தான்
technical writer

கம்பெனிகள் எதிர்பார்ப்பது இதை தான்
network administrator

கம்பெனிகள் எதிர்பார்ப்பது இதை தான்
systems administrator

கம்பெனிகள் எதிர்பார்ப்பது இதை தான்
IT manager

கம்பெனிகள் எதிர்பார்ப்பது இதை தான்
database administrator

கம்பெனிகள் எதிர்பார்ப்பது இதை தான்
IT Project Manager

கம்பெனிகள் எதிர்பார்ப்பது இதை தான்
data analyst

கம்பெனிகள் எதிர்பார்ப்பது இதை தான்
software engineer

கம்பெனிகள் எதிர்பார்ப்பது இதை தான்
data scientist
Click Here For List of New Smartphones And Tablets Price


Click it and Unblock the Notifications