இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி!!!

By Keerthi
|

நம்ம ஊருல சும்மா சுத்திட்டு இருந்த பசங்களுக்கு ஐ.டி கம்பெனில வேலை கிடைச்சாலும் கிடைச்சுது அவங்க பண்ற அலப்பறை இருக்கே தாங்க முடியலீங்க பீட்சாங்கறான், சாண்ட் விச் னுறான், மால்ல ஷாப்பிங்னு சொல்றான் யப்பா சாமி என்னாமா பண்றானுக.

இவங்க ஐ.டி கம்பெனில வேலை பாக்க போனா ஏதோ வேற கிரகத்துக்கு அவங்க போய்ட்டு வந்தா மாதிரி நாம்ம என்னமோ அதெல்லாம் பாக்காத மாதிரியே பேசுறாங்க.

அதை விட பெரிய காமெடி என்னென்ன கம்பெனில வேலை பாக்குற பொண்ணுங்க கூட நின்னுட்டு போட்டோ எடுத்து பேஸ்புக்ல அப்லோட் பண்ணுவாங்க பாருங்க அப்ப தான் நாம்ம வயிறு எரியுமாமா.

சாரி, ராங்க் கால்குலேஷன் ஐ.டி பாய்ஸ் உண்மையிலேயே உங்களை பாத்த எங்களுக்கு பாவமா தான் இருக்கும் ஏன்னா, சொந்த ஊருல அம்மா கைல சாப்பிட்டுட்டு கம்மி சம்பளம் ஆனாலும் வேலைக்கு போய்ட்டு நைட் பிரண்ட்ஸ் கூட பேசிட்டு நைட் லேட்டா வீட்டுக்கு வரது இருக்கே அது உங்களுக்கு கிடைக்காது ஐ.டி பாய்ஸ்.

சரி நீங்க ஐ.டி கம்பெனில வேலை பாக்கறிங்க உங்க கம்பெனியோட லோகேஷன் இதுதானே பாத்துட்டு கரெக்டா இல்லையான்னு சொல்லுங்க....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி

இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி

ஏதோ, முதலமைச்சர் அலுவலகம் மாதிரி ஒரு 10 , 15 செக்யூரிட்டி சோதனைக்காக வாசலில் நின்றுகொண்டு இருப்பார்கள் மேலும் வரும் அனைத்து கார்களின் டிக்கி கள் சோதனை செய்யப்படும் ஒரு சிலர் காருக்கு அடியில் ஒரு கண்ணாடி வைத்து எதையோ தேடுவார்கள்.

இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி

இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி

உங்களது அலுவலக பேருந்தில் செல்பவர்கள் இறங்கும்போது அடையாள அட்டையை செக்யூரிட்டி யிடம் காட்ட வேண்டும் மேலும் உள்ளே செல்லும் முன் கொண்டுசெல்லும் பையை திறந்து காட்டவேண்டும்.

இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி

இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி


உங்க கம்பெனியோட வாசல்ல இருபுறங்களிலும் கண்டிப்பாக பிரியாணி கடை , சிகரட், டீ விக்கும் பொட்டி கடை இருக்கும்

  இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி

இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி

கேண்டீன் முதல் rest room வரை பளீர் வெளிச்சத்தில் மின்விளக்குகள் ஒளிரும், கேண்டீனில் மற்றும் ஆபிஸில் இருக்கும் தொலைகாட்சியில் NDTV மட்டுமே ஓடும்.

 இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி

இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி

மேலும் இந்க புண்ணியவான்களுக்கு எப்போது அழைத்தாலும் தொலைபேசியை எடுக்கவே மாட்டார்கள் அது ஏன்னு தெரியலை,மேலும் இலவசமாக காபி, டீ , பால் கிடைக்கும் .

 இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி

இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி

ஆபிஸ் உள்ளே EMERGENCY EXIT என ஆங்காங்கே எழுதி ஒட்டி வைத்திருபார்கள்,சில வெளிநாட்டு மாடல்கள் போஸ் கொடுத்து சில பல உண்மை உழைப்பு உயர்வு என்று வாசகங்கள் அங்காங்கே ஒட்டிருக்க்கும் இதெல்லாம் எதுக்கு என்ன பண்ணுனாலும் நம்ம மக்கள் செய்யற வேலைய தான் செய்ய போறாங்க.

இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி

இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி

ரேஸ்ட் ரூமில் உள்ள hand dryer யில் கைக்குட்டையை கண்டிப்பாக ஒருவர் காயவைத்து கொண்டு இருப்பார் மதியம் சாப்பிட துண்டு போட்டு இடம் பிடிக்காத குறையா கேண்டீனில் இடம் பிடிக்க வேண்டும் .

 இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி

இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி


வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவை சூடு பண்ண ஓவன் அருகே ஒரு நீண்ட வரிசை நிக்கும்.வேலை செய்யும் கேபின் உள்ளே செல்ல மட்டும் தான் அனுமதி . உங்கள் அக்செஸ் கார்டு வேறு எந்த கேபின் உள்ளும் செல்ல அனுமதி இல்லை .

 இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி

இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி

அலுவலகத்தை சுற்றிலும் புல்வெளி தோட்டம் அழகு செடிகள் இருக்கும் டர்பன் கட்டின ஒரே ஒரு பஞ்சாபி எப்படியும் இருப்பார் .லிப்டில் செல்லும்போது தெலுங்கு , தமிழ் , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என்று அனைத்து மொழியும் கேட்கலாம் .

 இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி

இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி

உடற்பயிற்சி கூடம்.சென்றாலே சாக்ஸ் கப் அடிக்கும், காதலர்கள் கலந்துரையாட மொட்டைமாடி இருக்கும் செக்யூரிட்டி நம்மிடம் பேசியிருக்கும் ஒரே வாக்கியம் "Sir Display the ID card"

 இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி

இப்படிதான் இருக்கும் பாஸ் ஐ.டி கம்பெனி

நிச்சயம் ஒரு ATM இருக்கும் தூங்க தனி அறை கண்டிப்பா ஒன்னு இருக்கும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X