டிவி, வாஷிங்மெஷின், ஏசி உட்பட அனைத்தும் பாதி விலையில் விற்பனை-பிளிப்கார்ட் அதிரடி.!
உங்கள் வீட்டுக்குத் தேவையான வீட்டு உபயோக பொருட்களை எப்படிச் சரியாக தேர்ந்தெடுப்பது என்று குழம்பி பொய் இருக்கிறீர்களா?
உங்கள் வீட்டுக்குத் தேவையான வீட்டு உபயோக பொருட்களை எப்படிச் சரியாக தேர்ந்தெடுப்பது என்று குழம்பி பொய் இருக்கிறீர்களா? சந்தையில் கிடைக்கும் 1000 கணக்கான பிராண்ட்களில் இருந்து சிறந்த பிராண்டை எப்படித் தேர்ந்தெடுப்பது என்று பல குழப்பத்தில் இருக்கிறீர்களா?
இனி கவலை வேண்டாம், குழப்பமும் வேண்டாம், உங்களுக்கான ஒரு நல்ல செய்தி இப்பொழுது எங்களிடம் இருந்து உங்களுக்குக் கிடைக்க போகிறது. முன்னணி நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் தனக்கு சொந்தமான புது தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது.

மார்க்யூ-பிளிப்கார்ட் நிறுவனம்
இந்த நிறுவனத்திற்கு "மார்க்யூ(Marq)" என்று பிளிப்கார்ட் நிறுவனம் பெயரிட்டுள்ளது, குறைந்த விலையில் அட்டகாசமான சிறந்த தயாரிப்புகளை வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் குறிக்கோள் என்றும் பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"தரத்திற்கேற்ற விலை, தரத்திற்குச் சமரசம் இல்லை" என்ற மோட்டோவுடன் மார்க்யூ நிறுவனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சந்தையில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளின் விலையில் இருந்து பாதி விலைக்கோ அல்லது அதன் விலையின் மூன்றில் ஒரு பங்கின் விலையில் விற்பனை செய்யப்படுமென்று பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய ஸ்மார்ட் மார்க்யூ ஏ.சி:
பிளிப்கார்ட் நிறுவனத்தின் புதிய நிறுவனமான மார்க்யூ நிறுவனத்தின் புதிய அறிமுகம் தான், மார்க்யூ ஸ்மார்ட் இன்வெர்ட்டர் ஏ.சி. இந்த புதிய இன்வெர்ட்டர் ஏ.சி பிரத்தியேக எட்ஜ் கட்டிங் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரத்தியேக இன்வெர்ட்டர் ஏ.சி, எனர்ஜி சேவிங் தொழில்நுட்பத்துடன் கூடிய டூயல் இன்வெர்ட்டர் காம்ப்ரஸர் உதவியுடன், மிகத் துல்லியமான கூலிங் சேவையை எந்தத் தடையுமின்றி பயனருக்கு வழங்குகிறது. இந்தத் தொழில்நுட்பத்தினால் எனர்ஜி சேமிக்கப்பட்டு, உங்களின் கரண்ட் பில் எப்பொழுதும் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
1.5 டன் இன்வெர்டர் ஏ.சி யின் விலை ரூ.25,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது, சந்தையில் விற்கப்படும் 1.5 டன் ஏ.சி இன் விலையை விட இந்த மார்க்யூ இன்வெர்ட்டர் ஏ.சி யின் விலை 25% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்யூ ரெப்ரிஜிரேட்டர்:
மார்க்யூ நிறுவனத்தின் அடுத்த பிரத்தியேக அறிமுகம் தான் இந்த 565 லிட்டர் சைடு-பை-சைடு ரெப்ரிஜிரேட்டர். இந்த ரெப்ரிஜிரேட்டர் வாட்டர் டிஸ்பென்சருடன் விற்பனைக்கு வருகிறது. மார்க்யூ ரெப்ரிஜிரேட்டர், எக்ஸ்பிரஸ் கூலிங் தொழிநுட்பம் மற்றும் எக்ஸ்பிரஸ் பிரீசிங் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் மல்டி ஏர் ஃப்ளா தொழிநுட்பத்துடன் கூடிய ஈரப்பதம் தக்கவைத்தல் தொழிநுட்பத்தை மூலம் ரெப்ரிஜிரேட்டரில் வைக்கப்படும் பொருட்கள் பாதுகாப்பாகவும் புதிதாகவும் பராமரிக்கப்படுகிறது.
இந்த ரெப்ரிஜிரேட்டரின் சிறப்பம்சம் அதில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் டிஜிட்டல் சென்சார்களுடன் கூடிய ஏ.ஐ தொழில்நுட்பம், எல்.இ.டி தொடுதிரை, பிரோஸ்ட் பிரீ டெக்னாலஜி தான். இந்த மார்க்யூ ரெப்ரிஜிரேட்டர் ரூ.39,999 க்கு பிளிப்கார்ட் தலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

மார்க்யூ வாஷிங்மெஷின்:
எக்ஸ்பிரஸ் செமி ஆட்டோமேட்டிக் மற்றும் முழு ஆட்டோமேட்டிக், பிராண்ட் லோட் மற்றும் டாப் லோட் சேவைக்குப் பயன்படுத்தப்படும் வாஷிங்மெஷினை மார்க்யூ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முழு ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோட் 7.5 கிலோ வாஷிங்மெஷின் 15 பிரத்தியேக வாஷிங் ப்ரோக்ராமுடன் களமிறங்கியுள்ளது. எக்ஸ்பிரஸ் வாஷிங் தொழிநுட்பத்தை பயன்படுத்தி வெறும் 18 நிமிடத்தில், குறைந்த கரண்ட் மற்றும் தண்ணீரை உபயோகித்து உங்களின் துணிகளை துவைத்து முடிக்கிறது. சந்தையில் விற்கப்படும் 7.5 கிலோ வாஷிங்மெஷினின் விலை ரூ.30,000, ஆனால் மார்க்யூ வின் இந்த புதிய வாஷிங்மெஷின் வெறும் ரூ. 16,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இத்துடன் உங்களுக்கு ஸ்மார்ட் டிவி அல்லது வீடு உபயோக பொருட்கள் எதுவும் தேவைப்பட்டால் உடனே பிளிப்கார்ட் சென்று மார்க்யூ என்று டைப் செய்து குறைந்த விலையில் அனைத்துப் பொருட்களையும் வாங்கிக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications