விண்வெளியில் இருந்து பூமிக்கு: ISS அன்டாக்கிங் முதல் பசுபிக் பெருங்கடல் வரை! சுபான்ஷூ சுக்லாவின் பயண விளக்கம்!
இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷூ சுக்லா (Shubhanshu Shukla) மற்றும் அவருடனான 4 பேர் கொண்ட குழுவானது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து டிராகன் ஸ்பேஸ்கிராப்ட் (Dragon Spacecraft) மூலம் ஜூலை 14ஆம் தேதி பூமிக்கு புறப்படுகின்றனர். ஜூலை 15ஆம் தேதி பசுபிக் கடலில் தரையிறங்க இருக்கின்றனர். விண்வெளியில் இருந்து புறப்படும் நேரமும், பூமிக்கு வந்தடையும் நேரமும் மட்டுமே பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கு இடைப்பட்ட பயணத்தில் என்னென்ன நடக்கும் என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
* ஐஎஸ்எஸ் அன்டாக்கிங் (ISS Undocking):
* ஆர்பிட்டல் பேஸிங் (Orbital Phasing):
* டீ-ஆர்பிட் பர்ன் (Deorbit Burn):
* டிரங்க் செப்பரேஷன் (Trunk Separation):

ஐஎஸ்எஸ் அன்டாக்கிங்:
சுபான்ஷூ சுக்லா உள்பட 4 பேரை கொண்ட ஆக்சியம் 4 மிஷன் குழுவானது (Axiom Mission 4) ஜூலை 14ஆம் தேதி மாலை 4.30 (இந்திய நேரப்படி) அன்டாக்கிங் செய்ய இருக்கிறது. கிரேஸ் (Grace) என்றழைக்கப்படும் டிராகன் ஸ்பேஸ்கிராப்ட் மூலம் இந்த டாக்கிங் நடக்க இருக்கிறது. தோராயமாக 4.55 மணிக்கு ஐஎஸ்எஸ் மற்றும் கிரேஸ் இடையிலான அட்டாச்மெண்ட் க்ளோஸ் செய்யப்படும்.
ஆர்பிட்டல் பேஸிங்:
இதற்கு பிறகு டிராகன் ஸ்பேஸ்கிராப்ட் கேப்சூல் மட்டும் தனியாக பிரிந்து, த்ரஸ்டர்கள் மூலம் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிரிந்து அதனுடைய பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கும். இந்த பயணத்தின்போது, டிராகன் ஸ்பேஸ்கிராப்ட் ஆனது பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைவதற்கான தொழில்நுட்ப வேலைகளை ஆக்சியம் 4 மிஷன் குழுவினர் செய்து கொண்டிருப்பார்கள்.

டீ-ஆர்பிட் பர்ன்:
பூமியின் வளிமண்டலத்தை டிராகன் ஸ்பேஸ்கிராப்ட் நெருங்கியவுடன் அதன் உந்துசக்திகள் எதிர்திசையில் செலுத்தப்படுவதால், டீ-ஆர்பிட் பர்ன் ஏற்படும். அதாவது, டிராகன் ஸ்பேஸ்கிராப்ட் அடிப்பகுதியில் 20 நிமிடங்களுக்கும் மேலாக தீ ஏற்படும். இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். இதற்கேற்பவே டிராகன் ஸ்பேஸ்கிராப்ட் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
டிரங்க் செப்பரேஷன்:
இப்படி பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைவதற்கு தோராயமாக 30 முதல் 45 நிமிடங்களுக்கு முன்பு, டிராகன் ஸ்பேஸ்கிராப்ட்டின் டிரங்க் எனப்படும் தேவைப்படாத பாகங்களை கலட்டிவிட வேண்டும். இதில் சோலார் பேனல்கள் மற்றும் ரேடியேட்டர்கள் போன்ற பாககங்களே பெரும்பாலும் இருக்கும். இதற்கு பிறகு டிராகன் ஸ்பேஸ்கிராப்ட்டின் கேப்சூல் மட்டுமே பூமிக்குள் நுழையும்.

* அட்மாஸ்பியர் ரீ-என்ட்ரீ (Atmospheric Re-entry):
* பாரசூட் டிப்ளாய்மெண்ட் (Parachute Deployment):
* பசுபிக் ஸ்பிளாஷ்டவுன் (Pacific Splashdown):
அட்மாஸ்பியர் ரீ-என்ட்ரீ:
டிராகன் ஸ்பேஸ்கிராப்ட்டின் கேப்சூல் பூமியின் வளிமண்டலைத்தை அடைந்த உடனேயே மணிக்கு ஆயிரணக்கணக்கான கி.மீ வேகத்தில் கீழ் நோக்கி நுழையும். அப்போது, கேப்சூலின் அடிப்பகுதியில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடிக்கும். இந்த நேரத்தில் கேப்சூலை சுற்றி இருக்கும் ஹீட் பிளாஸ்மா காரணமாக சில நிமிடங்களுக்கு மட்டும் கம்யூனிகேஷன் துண்டிக்கப்பட்டுவிடும்.

பாரசூட் டிப்ளாய்மெண்ட்:
பூமியில் இருந்து 5,500 மீட்டர் உயரத்தில் டிராகன் ஸ்பேஸ்கிராப்ட் கேப்சூல் இருக்கும்போது, ட்ரோக் பாரசூட்கள் (Drogue Chutes) விரிவடையும். இதன் மூலம் கேப்சூலை நிலைப்படுத்தவும், அதிவேகத்தை கட்டுப்படுத்தவும் முடியும். சில வினாடிகளுக்குப் பிறகு, 3-4 மெயின் பாரசூட்கள் (Main Chutes) விரிவடையும். இது வேகத்தை மணிக்கு 24-32 கி.மீ ஆக குறைத்து பாதுகாப்பானதாக மாற்றும்.
பசுபிக் ஸ்பிளாஷ்டவுன்:
ஜூலை 15ஆம் தேதி மாலை 3 மணி அளவில் (இந்திய நேரப்படி) பசுபிக் பெருங்கடலின் கலிபோர்னியா கடற்கரைக்கு அருகே இருக்கும் கடல் பரப்பில் கேப்சூல் பாதுகாப்பாக இறங்கும். இதுவொரு முன்னரே தீர்மானிக்கப்பட்ட மீட்பு மண்டலமாக (Predetermined Recovery Zone) இருப்பதால், அங்கு ஸ்பேஸ்எக்ஸ் மீட்பு கப்பல், மருத்துவக் குழு, தொழில்நுட்ப குழு தயாராக இருக்கும்.

மீட்பு (Recovery):
கேப்சூல் தரையிறங்கிய உடனேயே அவர்களை மீட்கப்பட்டு மீட்பு கப்பலுக்கு கொண்டுவரப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு ஆரம்ப நிலை உடற்பரிசோதனை உள்ளிட்டவை செய்யப்படும். இந்த பாரசூட் டிப்ளாய்மெண்ட், பசுபிக் ஸ்பிளாஷ்டவுன் மற்றும் மீட்பு பணிகள் நாசா மூலம நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும். இந்தியாவின் சுபான்ஷூ சுக்லா இருப்பதால், இது கவனம் பெறுகிறது.
Image Credits: Axiom Space, NASA & SpaceX


Click it and Unblock the Notifications








