இனி இதுக்கு கட்டணமே இல்ல: SBI வாடிக்கையாளர்களே மகிழ்ந்திருங்கள்!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் சில கட்டண வசூலிப்பில் இருந்து சுதந்திரம் அளிப்பதாக அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிவிப்பு
பாரத ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதுதொடர்பாக வெளியான டுவிட்டில் வங்கி தனது இருப்புத் தொகை தொடர்பாக வசூலிக்கப்பட்ட கட்டணத்திற்கு சுதந்திர தினத்தில் இருந்து சுதந்திரம் அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் இருப்புத் தொகை
பொதுவாக எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 3 ஆயிரம் ரூபாய் கணக்கில் பணம் வைத்திருக்காது வாடிக்கையாளர்களுக்கு இருப்புத் தொகைக்கு ஏற்ப பணம் வசூலிக்கப்பட்டது.

கட்டணம் செலுத்த வேண்டியதில்லை
இந்த நிலையில் இனி எஸ்பிஐ வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காத வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மொபைல் எண்ணிற்கு பரிவர்த்தனை தகவல்
எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனையினை வாடிக்கையாளர்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பி வந்தது. இதற்கு முன்பு கட்டணம் வசூலித்து வந்தது.

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்
இந்தநிலையில் வாடிக்கையாளர்களின் கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு சேவை தகவலை அனுப்புவதற்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை வங்கி தற்போது ரத்து செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி வாடிக்கையாளர்கள் எந்த கட்டணமும் செலத்த தேவையில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எஸ்பிஐ ஏடிஎம் செயல்பாடு
எஸ்பிஐ ஏடிஎம் செயல்பாடு
சமீபத்தில் நிறுவனம் சில பாதுகாப்பு அம்சங்களை வழங்கியது அதில், எஸ்பிஐ ஏடிஎம் செயல்பாட்டில் கார்டுகளை பயன்படுத்தும்போது பாஸ்வேர்டை மறைக்க கையை பயன்படுத்தவும்.
ஏடிஎம் கார்டில் பின் நம்பரை எக்காரணம் கொண்டும் எழுதி வைக்க வேண்டாம்.
தங்கள் கடவுச்சொல், காரட் விவரங்களை எக்காரணம் கொண்டும் மற்றவர்களிடம் பகிர வேண்டாம்
அதோடு தங்களது பரிவர்த்தனை முடிந்த பிறகு எக்காரணம் கொண்டும் ரசீதை அப்புறப்படுத்த வேண்டாம்.

மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்
ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தும்போது கீபேட் டைப் செய்யும் போது சற்று கவனமாக கையாளுங்கள் (ஸ்கிம்மர் போன்ற ஏணைய நவீன கருவிகள் மோசடிக்கு பயன்படுத்தப்படுகிறது).
அதோடு தங்களது பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கு முன்பு கேமராக்கள் எங்கு இருப்பது என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்
கணக்கு பரிவர்த்தனைக்கு முன்பும் பின்பும் சைன்-அப், கேன்சல் விவரங்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்
இந்த வழிமுறைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications