சீனாவிற்கு செக் வைத்த இஸ்ரோ; பின்புலத்தில் மோடி, பூட்டானில் என்ன நடக்கிறது?

பூட்டானில் உள்ள ஹிமாலயன் மாநிலத்தில் செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் தரவு வரவேற்பு மையத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அமைத்துள்ளது.

|

சமாதானம் என்று பேசிக்கொண்டு இருந்தால் முன் வாசல் வழியாகவே எதிரி நாடுகள் நுழையும் என்பதற்கு வரலாற்றில் ஏகப்பட்ட சாட்சியங்கள் உள்ளன. அப்படி ஒரு நிலைக்குள் இந்தியா சிக்கி கொள்ள வாய்ப்பே இல்லை என்பதற்கு இந்தியாவின் சமீபத்திய நகர்வே ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.

 செக் வைத்த இஸ்ரோ; பின்புலத்தில் மோடி, பூட்டானில் என்ன நடக்கிறது?

பூட்டானில் உள்ள ஹிமாலயன் மாநிலத்தில் செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் தரவு வரவேற்பு மையத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அமைத்துள்ளது. அதே பகுதியில் இதே போன்ற சீன விண்வெளி மையம் ஒன்று இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சீனா

சீனா

இது சீனாவை எதிர்க்கும் அல்லது போட்டி போடும் ஒரு நடவடிக்கை என்பது வெளிப்படை. பாதுகாப்பை மட்டுமின்றி, இந்த நடவடிக்கை ஆனது பூட்டானில் உள்ள குறிப்பிட்ட ஆராய்ச்சி மைய நிலப்பகுதி ஆனது இந்தியாவிற்கும் அங்கு "மூலோபாய சொத்துகள்" இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.

திபெத்

திபெத்

திபெத்தின் தன்னாட்சி பிராந்தியத்தில் சீனா நேரி, உண்மையான கட்டுப்பாட்டிலிருந்து (இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான நடைமுறை எல்லைகள்) சுமார் 125 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் மேம்பட்ட செயற்கைக்கோள் கண்காணிப்பு மையம் மற்றும் வானியல் ஆய்வுக்கூடம் ஒன்றை நிறுவி உள்ளது. திபெத்தில் உள்ள இந்த சீனாவின் விண்வெளி வசதி ஆனது மிகவும் முன்னேறிய ஒரு மையம் ஆகும், இது இந்திய செயற்கைக்கோள்களை கண்காணிப்பதைத் தவிர, அவைகளை "குருடு" ஆக்கலாம் (அதாவது செயல் இழக்க செய்யலாம்) என்று சிலர் கூறுகிறார்கள்.

இஸ்ரோவின் நிலத்தடி நிலையம்

இஸ்ரோவின் நிலத்தடி நிலையம்

இதை கருத்தில் இந்தியா, பூட்டானில் உள்ள இஸ்ரோவின் நிலத்தடி நிலையம் ஆனது தெற்காசிய செயற்கைக்கோளைப் பயன்படுத்தி இமாலய மாநிலத்தை ஆதரிக்க உதவும் என்று கூறி, திபெத்தில் உள்ள சீன நிலையத்தை எதிர்த்துப் போராடும் பிரதான நோக்கத்தின் கீழ் இந்த நடவடிக்கையை நிகழ்த்தி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

இந்த மூலோபாயம் ஆனது டோக்லாமின் நெருக்கடியின் பின்னணியில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது. அறியாதோர்களுக்கு, சீனா, இந்தியா, பூட்டான் ஆகிய நாடுகளை இணைக்கும் ஒரு சந்திப்பில் ஒரு சாலையை கட்ட சீனா முயற்சி செய்ததே டோக்லாம் நெருக்கடி எனப்படுகிறது . இந்த இடத்தில் பூட்டான் ஆனது, மேற்கு வங்காளத்தில், 2017 ஆம் ஆண்டு ஜூன்-ஆகஸ்டில், டோக்லாமில் உள்ள இந்திய இராணுவத்துடன் ஒன்று கூடி சீன மக்கள் விடுதலை இராணுவத்திற்கு எதிராக 72 நாட்கள் நேருக்கு நேர் நின்றது என்பதும், கடந்த வெள்ளியன்று பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "பூட்டானில் இஸ்ரோ நிலக்கண்ணிகை கட்டுமானம் விரைவில் முடிவடையும்" என்று கூறி இருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தொலைநோக்கு மற்றும் பேரழிவு நிவாரணம்

தொலைநோக்கு மற்றும் பேரழிவு நிவாரணம்

"பூட்டான் உடன் ஆன நமது ஒத்துழைப்பின் புதிய பரிமாணம் விண்வெளி விஞ்ஞானமாகும்" என்று பூட்டானின் பிரதம மந்திரி லாட்டே செர்ரிங்கை சந்தித்த பின்னர் அவர் (மோடி) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இந்த திட்டம் முடிந்தவுடன், பூட்டான் நாட்டிலுள்ள தொலைதூர பகுதிகளுக்கான வானிலை தகவல், தொலைநோக்கு மற்றும் பேரழிவு நிவாரணம் போன்ற ஆய்வு பணிகளில் இந்தியா மிகப்பெரிய அளவில் உதவும்.

ரூ.4,500 கோடி

ரூ.4,500 கோடி

கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் தேதி இஸ்ரோ தெற்காசிய செயற்கைக்கோளை விண்ணிற்கு செலுத்தியது. இந்த திட்டமானது தெற்காசிய அண்டை நாடுகளுடன் விண்வெளி தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளும் முனைப்பின் கீழ் கடந்த 2014 ஆம் ஆண்டில் நடந்த தெற்காசிய சங்கத்தில் மோடி மூலம் பரிந்துரை செய்யப்பட்டது என்பதும் ஹிமாலயனின் 12 வது ஐந்து ஆண்டு திட்டத்தை மேம்படுத்துவதற்கு பூட்டானுக்கு ரூ.4,500 கோடி அளித்து உதவுவதாகவும் இந்தியா உறுதியளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
ISRO’s new station in Bhutan to counter China’s Tibet facility : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X