Home
News

அன்றே கணித்தார் அப்துல் கலாம்! சந்திரயான்-3 வெற்றிக்கு பின் இருக்கும் சாதனை பெண்.. இந்தியாவின் ராக்கெட் வுமன்!

ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கை மற்றும் பிராத்தனைகளோடு சேர்த்து அளப்பரியாத அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் (ISRO Scientists) கடுமையான உழைப்பின் விளைவாக.. சந்திரயான்-3 (Chandrayaan-3) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது வருகிற ஆகஸ்ட் மாத இறுதியில் நிலவில் தரையிறங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம்மில் பலருக்கும் இஸ்ரோவின் சந்திரயான்-3 என்றதுமே இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஆன கே.சிவனின் முகமும், தற்போதைய தலைவரான எஸ்.சோம்நாத்தின் முகமும் மட்டுமே நினைவிற்கு வரும். ஆனால் உண்மை என்னவென்றால், சந்திரயான்-3 வெற்றிக்கு பின்னால் பெரிதும் அறியப்படாத ஒரு பெண் இருக்கிறார்!

சந்திரயான்-3 வெற்றிக்கு பின் இருக்கும் இந்தியாவின் ராக்கெட் வுமன்!

அவர் தான் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் ரிது கரிதால் ஸ்ரீவஸ்தவா (Ritu Karidhal Srivastava). எந்தவொரு சிறிய சிக்கல்களை கூட சந்திக்காமல், வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த சந்திரயான்-3 மிஷனை வழிநடத்தியதில் இவருக்கும் ஒரு பெரிய பங்குண்டு.

இந்தியாவின் ராக்கெட் பெண்மணி (India's Rocket Woman) என்று அழைக்கப்படும் ரிது கரிதல் ஸ்ரீவஸ்தவா பற்றி நாம் அனைவரும் (குறிப்பாக இஸ்ரோ மீதும், சந்திராயன் 3 மிஷன் மீதும் பேரார்வம் கொண்ட அனைவரும்) கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 4 முக்கியமான விஷயங்கள் இதோ:

01. சந்திரயான்-2 மற்றும் மங்கள்யான் மிஷன்: ரிது கரிதாலின் அனுபவம் என்னவென்பதை இரண்டே வரிகளில் சொல்லவேண்டுமென்றால்.. இவர் சந்திரயான் 2-வின் இயக்குனராகவும், இந்தியாவின் செவ்வாய் கிரக சுற்றுப்பாதை மிஷன் (Mars Orbiter Mission - MOM) ஆன மங்கள்யானின் துணை இயக்க இயக்குநராகவும் பணியாற்றியவர்.

02. கடந்த 1997 ஆம் ஆண்டில் இருந்து! லக்னோவில் பிறந்து வளர்ந்த ரிது கரிதல், அங்கேயே உள்ள லக்னோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பிஎஸ்சி படித்த பின்னர், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸில் (Indian Institute of Science) ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங்கில் எம்.இ பட்டம் பெற்றார். அதனை தொடர்ந்து 1997 இல் இஸ்ரோவில் சேர்ந்தார்.

03. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆன ஏபிஜே அப்துல் கலாமிடம் இருந்து 'இஸ்ரோ இளம் விஞ்ஞானி' என்கிற விருதையும் ரிது கரிதல் பெற்றுள்ளார். மேலும் இஸ்ரோ சொசையிட்டி வழங்கும் இஸ்ரோ டீம் அவார்ட் ஃபார் எம்ஓஎம் இன் 2015, ஏஎஸ்ஐ டீம் அவார்ட், வுமன் அச்சீவர்ஸ் இந்த ஏரோஸ்பேஸ் 2017 போன்ற விருதுகளையும் வென்றுள்ளார்.

04. உலகப் பொருளாதார மன்றத்தின் கூற்றுப்படி, கரிதல் எப்போதும் விண்வெளியால் ஈர்க்கப்படும் ஒரு நபர் ஆவார், வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பும் ஒரு நபரும் கூட. இதன் விளைவாகவே ரிது கரிதல், தேசிய மற்றும் சர்வதேச ஜர்னல்களில் (National and International Journals) 20க்கும் மேற்பட்ட பேப்பர்களை பப்ளிஷ் செய்துள்ளார்.

ரிது கரிதலின் பங்களிப்பின் கீழ், சந்திர கிரகத்தின் தென் துருவத்தை ஆராய்வதை முக்கிய நோக்கமாக கொண்ட சந்திரயான்-3 மிஷன் ஆனது இஸ்ரோவின் மிகப்பெரிய ராக்கெட்களில் ஒன்றான ஜிஎஸ்எல்வி மார்க் 3 (GSLV Mark 3) ஹெவி-லிஃப்ட் லான்ச் வெஹிக்கலின் உதவியிடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சந்திரயான்-3 என்பது ப்ரோபல்ஷன், லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றின் கலவையாகும். லேண்டர் - சந்திர கிரகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட "தளத்தில்" மென்மையாக தரையிறங்கும் திறனை கொண்டுள்ளது. மறுகையில் உள்ள ரோவர் - சந்திர மேற்பரப்பில் பகுப்பாய்வு செய்யும் திறனை கொண்டுள்ளது.

எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், சந்திராயன்-3 லேண்டர் ஆனது வருகிற ஆகஸ்ட் 23 அல்லது 24 ஆம் தேதியன்று நிலவில் தரை இறங்கும்.இதுவும் வெற்றிகரமாக நடக்கும் பட்சத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்த சாதனையை எட்டிய நான்காவது நாடாக இந்தியா மாறும்!

Photo Courtesy: Wiki Bio / https://wikibio.in/ritu-karidhal/

More from GizBot

Best Mobiles in India

English summary
ISRO Woman Scientist Behind Chandrayaan 3 Successful Launch Ritu Karidhal Rocket Woman of Our India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X