இஸ்ரோவின் திட்டத்தில் இணைந்து செயல்படும் பிரான்ஸ் நிறுவனம்.! எதற்கு தெரியுமா?

|

இஸ்ரோ அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் வீனஸ் எனப்படும் வெள்ளி கோளுக்கு பயணம் மேற்கொள்ளும் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வௌளி ஆய்வு நிறுவனத்தின் திட்டத்தில் இணைந்து செயல்பட உள்ளதாக பிரான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய பிரான்சின் விண்வெளி ஆய்வு

அதன்படி ஐரோப்பிய பிரான்சின் விண்வெளி ஆய்வு நிறுவனமான சி.என்.இ.எஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதுஎன்னவென்றால், வீனஸ் எனப்படும் வெள்ளி கோளுக்கு 2025-ல் விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

தயாரிக்கும் பணியில்

இதற்கான கருவிகளை தயாரிக்கும் பணியில் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவமான ராஸ்காஸ்மோஸ் மற்றும் பிரான்சின் தேசிய அறிவியல் ஆராய்ச்சி அமைப்பான சி.என்.ஆர்.எஸ். ஈடுபட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோவிடம் இருந்து எந்தக் கருத்தும் வரவில்லை

மேலும் இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவனுடன் சி.என்.இ.எஸ் தலைவர் ஜீனா யீவ்ஸ் லீ கால் விரிவான பேச்சு நடத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. பின்பு இந்தியா மேற்கொள்ளும் விண்வெளி ஆய்வு திட்டங்களில் ஈடுபட மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது. குறிப்பாக முதல் முறையாக
பிரான்சின் விண்கலம் இநந்தியாவில் இருந்து அனுப்பப்பட உள்ளது என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும்,இஸ்ரோவிடம் இருந்து எந்தக் கருத்தும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமியின் Mi 10T, Mi 10T Pro, Mi 10T Lite ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! முழுவிவரம்.!சியோமியின் Mi 10T, Mi 10T Pro, Mi 10T Lite ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! முழுவிவரம்.!

 நிலவிற்கான இந்தியாவின் பணித்திட்டமான சந்திராயன் 3

முன்னதாக நிலவிற்கான இந்தியாவின் பணித்திட்டமான சந்திராயன் 3 2021 ஆண்டில் துவங்கப்படும் என்று விண்வெளித் துறை அமைச்சர்
ஜிதேந்திர சிங் அவர்கள் கடந்த செப்டம்பர் 6-ம் தேதி தெரிவித்தார்.

குறிப்பிட்டது என்னவென்றால்

மேலும் அவர் குறிப்பிட்டது என்னவென்றால் சந்திரயான 3 ஆனது சந்திரயான 2-இலிருந்து சற்று வித்தயாசமாக இருக்கும் என்று கூறினார். மேலும் அதில் ஆர்பிட்டர் இருக்காது, ஆனாலும் ஒரு லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

சந்திராயான்-3 ஐ செலுத்த

இந்த 2020-ஆம் ஆண்டில் சந்திராயான்-3 ஐ செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது,ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து வைரஸ் பரவலைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி விதித்த லாக்டௌன் காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.

ஆண்டில் துவங்கப்பட்ட சந்திரனுக்கான இஸ்ரோ

ஆனாலும் 2018-ம் ஆண்டில் துவங்கப்பட்ட சந்திரனுக்கான இஸ்ரோவின் முதல் பணித்திட்டமான சந்திராயன் 1 நிலவின் துவருங்களில் துருப்பிடித்திருக்கலாம் என்பதைக் காட்டும் படங்களை அனுப்பியுள்ளது. அதாவது இந்த கண்டுபிடிப்பின் முக்கிய கருத்து என்னவென்றால் சந்திரனின் மேற்பரப்பில் இரும்புச்சத்து நிறைந்த பாறைகள் இருப்பதாக ஏற்கனவே அறியப்பட்டாலும் நீர் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பதை பற்றி இதுவரை அறிந்ததில்லை. இருந்தபோதிலும் துருவை உருவாக்க இரும்புடன் நீர் மற்றும் ஆக்சிஜனின் தொடர்பு இருக்க வேண்டும் என்பதால் நிலவிலிருந்து சந்திராயன்-1 அனுப்பியுள்ள படங்கள் முகுந்த முக்கியத்துவத்தை பெறுகின்றன.

அமெரிக்காவின் தேசிய ஏரோநாட்டிக்ஸ்

மேலும் அமெரிக்காவின் தேசிய ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷனின் விஞ்ஞானிகள். இதில் பூமியின் வளிமண்டலம் அளிக்கும் ஒரு உதவியும் காரணமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். அதாவது பூமியின் வளிமண்டலம் நிலவையும் பாதுகாக்கக்கூடும் என்பது அவர்களது கருத்து. பின்பு இவ்வாறு சந்திராயன் 1-ன் நிலவை பற்றிய தரவுகள் ஆனது நிலவின் துருவங்களில்
தண்ணீர் இருக்கக்கூடும் என்பதை குறிப்பிடுகின்றன.

Best Mobiles in India

English summary
ISRO Will Send A Probe To Venus In 2025, French Space Agency Will Participate In The Mission: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X