விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட்! நன்றி கூறியது எதற்கு தெரியுமா?

|

சந்திரயான் 2 திட்டத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கத் தயாராக இருந்தது. ஆனால், விக்ரம் லேண்டரின் டச் டவுனுக்கு முன்னதாக, லேண்டருடனான தகவல்தொடர்புகளை இஸ்ரோ இழந்த போதிலும், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மீது மக்கள் தங்களின் முழு ஆதரவை வழங்கி வருகின்றனர்.

உலக மக்களின் ஆதரவு

உலக மக்களின் ஆதரவு

விக்ரம் லேண்டரின் 'டச் டவுன்' நிகழ்வு நிகழ்வதற்குச் சிறு நிமிடங்களுக்கு முன்பு லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்திரயான் 2 திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் உலக மக்கள் அனைவரும் இஸ்ரோவின் முயற்சியைப் பாராட்டி அவர்களின் ஆதரவைத் தெரிவித்து வந்தனர்.

இஸ்ரோவிற்கு உதவும் நாசா

இஸ்ரோவிற்கு உதவும் நாசா

இஸ்ரோவின் முயற்சியை மட்டுமின்றி, இஸ்ரோவின் விஞ்ஞானிகளையும், அவர்கள் நிகழ்த்தியுள்ள இந்த சாதனையையும் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். நாசாவும் கூட இஸ்ரோவிற்கு உதவ முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் 2 : இன்று அனைவரும் எதிர்பார்த்த விக்ரம் லேண்டர் குறித்த தகவலை தரும் நாசா ஆர்பிட்டர்.!சந்திரயான் 2 : இன்று அனைவரும் எதிர்பார்த்த விக்ரம் லேண்டர் குறித்த தகவலை தரும் நாசா ஆர்பிட்டர்.!

விக்ரம் லேண்டர் பற்றிய ட்வீட்

விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில். இஸ்ரோ விக்ரம் லேண்டர் பற்றிய ட்வீட் ஒன்றை அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இஸ்ரோ பதிவிட்டுள்ள இந்த டிவிட்டர் பதிவு வைரல் ஆகி வருகிறது.

கூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம்! சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.! அறிமுகம் செப்.20.!கூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம்! சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.! அறிமுகம் செப்.20.!

நன்றி தெரிவித்த இஸ்ரோ

நன்றி தெரிவித்த இஸ்ரோ

இஸ்ரோவின் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, 'எங்களுடன் தொடர்ந்து நிலைத்து நின்றதற்கு நன்றி. உலகெங்கிலும் உள்ள இந்தியர்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளால் உந்தப்பட்ட நாம் தொடர்ந்து முன்னேறுவோம்!' என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
ISRO Tweets About Vikram Lander! Do You Know Why ISRO Said Thanks For : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X