இஸ்ரோ டிவி: நேரடி விண்வெளி ஒளிபரப்பு.!

புகழ்பெற்ற விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழு (இஸ்ரோ) ஒரு தொலைக்காட்சி சேனலைத் துவங்கவுள்ளதாக அறிவிப்பு ஒன்றை அறிவித்திருக்கிறது.

By Sharath
|

புகழ்பெற்ற விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழு (இஸ்ரோ) ஒரு தொலைக்காட்சி சேனலைத் துவங்கவுள்ளதாக அறிவிப்பு ஒன்றை அறிவித்திருக்கிறது.

இஸ்ரோ டிவி: நேரடி விண்வெளி ஒளிபரப்பு.!

இஸ்ரோ டிவி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தகவல்கள் மற்றும் செய்திகளை மக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இஸ்ரோ டிவி வர இருப்பதாக அறிவிப்பு ஒன்றை அறிவித்திருக்கிறார் இஸ்ரோவின் தலைவர் சிவன். இளைய தலைமுறையினர் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் அறிவுப்பூர்வமான பல தகவல்களை உள்ளடக்கும் விதமாக இந்த டிவி செயல்படும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த டிவி சேனல் பல மொழி பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதில் விண்வெளி பயன்பாடுகள், முன்னேற்றங்கள், விஞ்ஞான விவரங்களைக் காண்பிக்கவும் மக்களுக்குச் செய்திகளை ஒளிபரப்பவும் இந்த புதிய இஸ்ரோ சேனல் செயல்படுமென்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரோ டிவி: நேரடி விண்வெளி ஒளிபரப்பு.!

இந்த சேனல் இல் இனி ஸ்ரீஹரிகோட்டாவில் நிகழும் அனைத்து சாட்டிலைட் ஏவுதல் நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.இத்துடன் நாசாவின் விண்வெளி நிலையத்தில் மிக விரைவில் நமது விண்வெளி நிலையமும் திறக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
ISRO to launch TV channel on centenary celebrations of founder Vikram Sarabhai: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X