மாணவர்கள் தயாரித்த செயற்கைகோள்: விண்ணுக்கு செலுத்தும் இஸ்ரோ- இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு!

|

மாணவர்கள் தயாரித்த செயற்கைகோள் பிப்ரவரி 28 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்த இஸ்ரோ தலைவர் சிவன், வரும்காலங்களில் விண்வெளி துறையில் மாணவர்கள் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என கூறினார்.

விண்ணுக்கு செலுத்தப்படும் செயற்கைகோள்

விண்ணுக்கு செலுத்தப்படும் செயற்கைகோள்

கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இணைந்து செயற்கைகோளை வடிவமைத்துள்ளனர். இந்த செயற்கைகோள் விண்ணுக்கு செலுத்தப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த செயற்கைகோள் பிப்ரவரி 28 ஆம் தேதி விண்ணுக்கு செலுத்தப்பட உளளது.

வீடியோ கான்பரன்சிங் மூலம் வாழ்த்து

வீடியோ கான்பரன்சிங் மூலம் வாழ்த்து

அதேபோஸ் ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் செற்கைகோள் தரைதள கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. வீடியோ கான்பரன்சிங் மூலமாக இஸ்ரோ தலைவர் சிவன் இதை துவங்கி வைத்தார்.

இஸ்ரோ தலைவர் சிவன்

இஸ்ரோ தலைவர் சிவன்

மேலும் அதில் இஸ்ரோ தலைவர் சிவன் பேசுகையில், கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த செயற்கைகோள் இஸ்ரோ தளத்தில் இருந்து ஏவப்படுவது மிகவும் பாராட்டத்தக்கது என கூறினார். அதோடு வரும்காலங்களில் விண்வெளி துறையில் மாணவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என கூறினார்.

மூன்று கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரித்த செயற்கைகோள்

மூன்று கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரித்த செயற்கைகோள்

செயற்கைகோள் அனைத்தும் உள்நாட்டு தயாரிப்புகளில் தயாரித்தது கூடுதல் சிறப்பு என அவர் குறிப்பிட்டார். இந்த செயற்கைகோள் தயாரிப்பதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளும் உதவியதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செற்கைகோள் கோவை, சென்னை, நாக்பூர் ஆகிய மூன்று கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

400 கிராம் எடை கொண்ட செயற்கைகோள்

400 கிராம் எடை கொண்ட செயற்கைகோள்

இந்த செயற்கைகோள் தொழில்நுட்ப செயல்பாடாக இருக்கும் எனவும் இதன் எடை 400 கிராம் எனவும் கூறப்படுகிறது. மேலும் இது பூமியில் இருந்து 500- 575 கிலோமீட்டர் தூரத்தில் சுற்ற இருப்பதால் குறைந்த சுற்றுப்பாதையை கொண்ட செயற்கைகோளாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

திருட்டும் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை

திருட்டும் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை

ஸ்ரீசக்தி சாட் பிப்ரவரி 28ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. இந்த செயற்கைகோள் ஆறு மாதங்கள் விண்ணில் சுற்ற இருக்கிறது. நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் ஏற்படும் தண்ணீர் கசிவு, எண்ணெய் அல்லது எரிவாயு கசிவு ஆகியவையை கண்டறிய பயன்படுத்தப்படும் எனவும் இதன்மூலம் வங்கிகள் உள்ளிட்ட பிற பாதுகாப்பு பகுதிகளில் நடக்கும் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
ISRO to Launch Satellite Developed by Coimbatore College Students

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X