சைக்கிள் கேரியரில் தொடங்கி உலக நாடுகளின் 'பகல் கனவான' இஸ்ரோ..!

Written By:
  X

  இந்திய தேசம் அதன் 70-வது சுதந்திர தினத்தை கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று கொண்டாடியதை நாம் அனைவரும் அறிவோம், அதே ஆகஸ்ட் 15 ஆம் தேதி தான் இந்திய தேசிய விண்வெளி நிறுவன வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு நாள் என்பதை அறிவீர்களா..?? இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 47 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1969-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தான் தொடங்கப்பட்டது.

  "சைக்கிள் கேரியரிலும், மாட்டு வண்டிகளிலும் ராக்கெட் பாகங்களை ஏற்றிக்கொண்டு போய் ராக்கெட் ஏவிய நாடு தானே இந்தியா" என்று ஆரம்ப காலத்தில் உலக நாடுகளின் கேலி பேச்சுக்கு உள்ளான இஸ்ரோ, இப்போது உலக விண்வெளி ஆராய்ச்சி மையங்களால் எட்டப்பிடிக்க முடியாத விடயங்களை அசாதாரணமாக முடித்துக்காட்டும் பகல் கனவாக இஸ்ரோ திகழ்கிறது என்பது தான் நிதர்சனம்..!

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  உறுதி :

  இஸ்ரோ தனது 47 ஆண்டு கால பயணம் முழுவதிலும் விண்வெளியை சாதாரணமான மனிதரின் தேவைக்காக பயன்டுத்திக் கொள்வது முதல் தேச சேவை வரையிலாக பல இலக்குகளை உறுதி செய்துள்ளது.

  மேம்பாடு :

  இந்த செயல்பாட்டின் மூலமாக உலகின் ஆறு பெரிய விண்வெளி முகவர்களில் ஒன்றாக இஸ்ரோ உருவானது, மேம்பாடு மற்றும் வளர்ந்த தொழில்நுட்பம், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விண்வெளி வாகனங்கள் என முன்னேறிக் கொண்டே போகிறது.

  மகத்தான சாதனை :

  அப்படியான இஸ்ரோவின் தனது அடித்தள காலத்தில் இருந்துஇப்போது வரையிலான நிகழ்த்திய முக்கியமான, மகத்தான சாதனைகளை பின்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

  சாதனை #01

  முதல் இந்திய செயற்கைக்கோளை ஆர்யபட்டா (பிரபல இந்திய வானியலாளர் பெயர்) ஏப்ரல் 19, 1975 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது

  கற்றல் :

  முற்றிலும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட அந்த செயற்கைகோள் ஆனது சோவியத் கோஸ்மோஸ் -3எம் ராக்கெட் மூலம் தொடங்கப்பட்டது. அது தான் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைத்தல் அடிப்படை சார்ந்த இந்தியாவின் கற்றல் ஆகும்.

  சாதனை #02

  1975 முதல் 1976 வரை இஸ்ரோ, அமெரிக்க விண்வெளி நிறுவனம் தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) உடன் இணைந்து தொலைக்காட்சி ஒலிபரப்பு விண்வெளி தொடர்புகள் முறையை உருவாக்கியது (ப்ராஜக்ட் சைட் - Project SITE)

  சாதனை #03

  1976-ல் இருந்து 1977 வரை, செயற்கைக்கோள் தொலைத்தொடர்புகள் சோதனை திட்டம் நிகழ்த்தப்பட்டது (ஸ்டெப் -Project STEP) அதில் உள்நாட்டு தொடர்புகளை மேம்படுத்த செயற்கைக்கோள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

  சாதனை #04

  இந்தியாவின் முதல் தொலை உணர்வு எனப்படும் ரிமோட் சென்சிங் சோதனை செயற்கைக்கோளான பாஸ்கரா- ஒன்று, ஜூன் 07,1979 கட்டமைக்கப்பட்டது.

  சாதனை #05

  உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோளான ரோகிணி ஜூலை 18, 1980 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

  சாதனை #06

  ஏப்ரல் 2, 1984 இல், முதல் இந்திய-சோவியத் விண்வெளி பணி தொடங்கப்பட்டது, அத்திட்டத்தில் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா ஆவார்.

  சாதனை #07

  அக்டோபர் 22, 2008 அன்று, சந்திராயன் -1 இந்திய நாட்டின் முதல் சந்திர கிரக பயணம் இஸ்ரோவின் மூலம் தொடங்கப்பட்டது.

  சாதனை #08

  உலக சரித்திரம் படைத்த இஸ்ரோவின் (மங்கள்யான்) மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் நவம்பர் 5, 2013 அன்று விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்தது.

  சாதனை #09

  ஜூன் 22 , 2016 அன்று, இஸ்ரோ ஒரே ஏவுதலில் துருவ எஸ்.எல்.வியை ( பி.எஸ்.எல்.வி.) ராக்கெட் மூலம் மொத்தம் 20 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது.

  மேலும் படிக்க :

  சாத்தியமே இல்லாத 'ஏலியன் வாகனம்' - ஹிட்லர் சாதித்தது எப்படி..?!


  இந்திரா காந்தி, கலாமுக்கு இரகசியமாக நிதி ஒதுக்கியது ஏனென்று தெரியுமா..?


  தோல்வியில் முடிந்த அப்துல் கலாமின் ஒரே முயற்சி..!

  தமிழ் கிஸ்பாட் :

  மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  ISRO@47 The maverick journey of Indian space agency. Read more about this in Tamil GizBot.

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more