Home
News

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்டின் முழு விபரம்.!

பூமி கண்காணிப்புக்கான புதிய அதிநவீன செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

பூமி கண்காணிப்புக்கான புதிய அதிநவீன செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்

பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து, அதிகாலை 5.27 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியைக் கண்காணிப்பதற்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ரீசாட்-2பிஆர்1 என்ற செயற்கைக்கோளைச் சுமந்தபடி இந்த ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சேவைகளுக்காக ரீசாட்-2பி செயற்கைக்கோள்

பாதுகாப்பு சேவைகளுக்காக ரீசாட்-2பி செயற்கைக்கோள்

ராணுவ பயன்பாட்டு, பேரிடர் மேலாண்மை மற்றும் காடுகளின் பாதுகாப்பு போன்ற பாதுகாப்பு சேவைகளுக்காக ரீசாட்-2பி செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. 615 கிலோ எடை கொண்ட இந்த ரீசாட்-2பி ரேடார் செயற்கைக்கோள் விண்ணில் அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பயன்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பொதுமக்கள் அனுமதி

சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பொதுமக்கள் அனுமதி

விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்வெளி தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதைப் பார்வையிட சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் படி இந்த கேலரி காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

ராக்கெட் ஏவப்படுவதைப் பார்வையிட முன்பதிவு

ராக்கெட் ஏவப்படுவதைப் பார்வையிட முன்பதிவு

கேலரியில் இருந்து விண்ணில் ராக்கெட் ஏவப்படுவதைப் பார்வையிட 10 வயதுக்கு மேற்பட்டவர்கள், இஸ்ரோ இணையதளத்தின் மூலம் அவர்களின் பெயர் மற்றும் விபரங்களைப் பதிவு செய்திருக்க வேண்டும். இந்த ‘கேலரி', ஏவுதளத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
isro successfully launches pslv c46 carrying earth observation satellite risat 2b : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X